Baakiyalakshmi: பழனிச்சாமி கொடுத்த பூவை தலையில் வைத்துக் கொண்ட பாக்கியா.. அப்புறம் என்ன பாட்டு தான்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து சில வருடங்களாக ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியலில் ராதிகாவின் கர்ப்பம் குறித்து தற்போது பாக்கியாவிற்கு தெரிய வந்துள்ளது. தன்னுடைய வாழ்க்கையின் சில காட்சிகளை ஓட்டி பார்க்கும் பாக்கியாவிற்கு இந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துகிறது.
கோபி இந்த விஷயத்தை தன்னுடைய மகன்களிடம் எப்படி கூறுவார் என்று பாக்கியா யோசிக்கிறார். தொடர்ந்து இது தன்னுடைய பிரச்சனை இல்லை என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. ராதிகாவின் கர்ப்பம் குறித்து தன்னுடைய அம்மா ஈஸ்வரி மற்றும் மகன்களிடம் கூற மிகவும் அவமானமாக உணர்கிறார் கோபி. அவரை உடனடியாக குடும்பத்தினரிடம் கூறுமாறு ராதிகாவின் அம்மாவும் கட்டாயப்படுத்துகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த எபிசோடுகளால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.இந்தத் தொடர் இதுவரை 1100க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கொடுத்து தொடர்ந்து சேனலின் இரண்டாவது சீரியலாக டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடும் முக்கியமான பல காட்சிகளை கொண்டதாக அமைந்திருந்தது. ராதிகாவின் கர்ப்பம் குறித்து பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. இதற்கு என்ன மாதிரியாக ரியாக்ட் செய்வது என்று பாக்கியாவிற்கு தெரியவில்லை. இருந்தபோதிலும் பழைய விஷயங்கள் குறித்து யோசிக்கும் பாக்கியாவிற்கு அதிகமான கோபம் ஏற்படுகிறது.
ராதிகாவின் கர்ப்பம்: இதையடுத்து இந்த விஷயத்தால் பாக்கியாவிற்கு ஏதாவது மன கஷ்டம் ஏற்பட்டதா என்று ராதிகா கேட்கிறார். ஆனால் எது குறித்தும் கவலை கொள்ளாமல் இந்த நேரத்தில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுமாறு ராதிகாவிற்கு பாக்கியா ஆறுதல் கூறுகிறார். தொடர்ந்து தன்னுடைய மகன்கள் எழில் மற்றும் செழியனிடம் கோபி எப்படி இந்த விஷயத்தை கூறுவார் அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று யோசிக்கிறார் பாக்கியா. ஆனால் உடனடியாக தன்னுடைய மனநிலையை மாற்றிக் கொள்ளும் பாக்கியா, இது குறித்து எல்லாம் தான் கவலை கொள்ள வேண்டியதில்லை என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொள்கிறார்.
பூக்கூடையுடன் வரும் பழனிச்சாமி: இதையடுத்து அவர் ரெஸ்டாரண்டிற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கே பழனிச்சாமி ஒரு கூடை நிறைய பூக்களுடன் பாக்கியாவை சந்திக்கிறார். தன்னுடைய நண்பன் புதிதாக பூ பிசினஸ் ஆரம்பித்துள்ளதாகவும் தான் அவனைப் பார்க்கச் சென்றபோது தன்னிடம் இரண்டு கூடை பூக்களை கொடுத்து விட்டதாகவும் தன்னுடைய வீட்டிற்கு ஒன்றை கொடுத்துவிட்டு மற்றொரு கூடையை பாக்கியாவின் ரெஸ்டாரண்டிற்கு கொண்டு வந்ததாகவும் கூறுகிறார். சாமி படங்களுக்கு பூக்களை போடுமாறு பழனிச்சாமி கூறுகிறார். உடனடியாக பாக்கியா சாமிகளுக்கு மட்டும் தானா தனக்கு கிடையாதா என்று கூறியபடி மல்லிப்பூவை சிறிது எடுத்து தனது தலையில் வைத்துக் கொள்கிறார்.
அடுத்தடுத்து எரியும் பல்பு: உடனடியாக பழனிச்சாமிக்கு மீண்டும் பல்பு எரிகிறது. பாக்கியாவை அவர் விருப்பத்துடன் பார்க்க, அவர் பின்பும் பல்பு எரிவதை உணர்கிறார். தொடர்ந்து பேக்கிரவுண்டில் காதல் பாடல் இசைக்க, இந்த காட்சியை ரொமான்டிக்காக காட்டுகிறார் இயக்குனர். இதையடுத்து வீட்டிற்கு செல்லும் பழனிச்சாமி, தன்னுடைய கையில் ஒரு துணிக்கடை பார்சலை எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் பம்மியயபடி செல்கிறார். ஆனால் ஹாலிலேயே அவரது அம்மாவும் அக்காவும் இருக்கும் சூழலில் அவரது கையில் என்ன இருக்கிறது என்று அவர்கள் வாங்கி பார்த்து விடுகின்றனர்.
கெட்டப்பை மாற்றிய பழனிச்சாமி: இளைஞர்கள் போடும்படியான டீ-ஷர்ட்கள், ஜீன்ஸ் உள்ளிட்டவை அதில் காணப்படுகின்றன. இதையெல்லாம் போட மாட்டாயே என்று பழனிச்சாமியின் அக்கா கேட்க, இப்போது தனக்கு இதையெல்லாம் போட வேண்டும் என்று தோன்றுகிறது என்று கூறுகிறார் பழனிசாமி. தனக்கும் பாக்யாவிற்கும் இடையில் ஒன்றும் இல்லை என்று தான் முன்னதாக கூறிய சூழலில் ஏதோ இருக்கிறது என்று அவர் கூறுகிறார். தொடர்ந்து பாக்கியா மனதிலும் இது குறித்த சம்மதம் இருக்கும் என்று தான் நினைப்பதாகவும் அவர் தன்னுடைய அம்மா மற்றும் அக்காவிடம் சொல்லி உற்சாகம் அடைகிறார்.
பாக்கியாவை சந்திக்க செல்லும் பழனிச்சாமி: தொடர்ந்து தான் எடுத்து வந்த டீ- ஷர்ட் மற்றும் ஜீன்ஸை போட்டுக்கொண்டு அவர் கீழே இறங்கி வருவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. அவரைப் பார்த்து தன்னுடைய மகன் பழனிச்சாமி எங்கே என்று அவருடைய அம்மா கலாய்ப்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து அந்த கெட்டப்பில் தான் பாக்கியாவை சென்று பார்க்க உள்ளதாகவும் ஆனால் தன்னுடைய விருப்பத்தை உடனடியாக பேசப்போவதில்லை என்றும் பனிச்சாமி கூறுகிறார். நேரம் வாய்க்கும் போது தான் இது குறித்து பேசுவேன் என்றும் தன்னுடைய அம்மா மற்றும் அக்காவிடம் பழனிச்சாமி கூறுவதாக இந்த எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











