Baakiyalakshmi serial: கோபிக்காக நகைகளை கொடுத்த பாக்கியா.. ஆத்திரப்பட்ட ராதிகா!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்து பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. சங்கமம் எபிசோடில் ராஜி மற்றும் கதிருக்கு திருமணம் செய்து வைத்து பரபரப்பை ஏற்படுத்திய பாக்யா தொடர்ந்து தன்னுடைய மருமகள் அமிர்தாவை கடத்திய கணேசிடமிருந்தும் அவரை பழனிச்சாமி உதவியுடன் மீட்கிறார். அடுத்ததாக ரெஸ்டாரெண்டை துவங்கும் வேலைகளில் அவர் ஈடுபடுகிறார். தன்னுடைய ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவிற்கு அமைச்சரையும் நேரில் சந்தித்து அழைக்கிறார். அவரும் கலந்துக் கொள்வதாக உறுதி அளிக்கிறார்.
இந்நிலையில் தன்னுடைய நிறுவனத்தை கோபி மூடிய விவகாரம் குடும்பத்தினர் அனைவருக்கும் ராதிகா மூலம் தெரிய வருகிறது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். கோபி குறித்து வருத்தப்படுகின்றனர். இரவு முழுவதும் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி இருவரும் வருத்தத்துடன் பேசிக் கொள்கின்றனர். இந்நிலையில் கோபிக்கு உதவ முன் வருகிறார் பாக்யா. ஆனால் அதை தவறாக புரிந்து கொள்ளும் கோபி, அவரை திட்டி தீர்க்கிறார். ராதிகாவும் பாக்யாவிடம் அவரது எந்த உதவியும் தங்களுக்கு தேவைப்படாது என்று திட்டுவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி தொடர். தொடர்ந்து சேனலின் இரண்டாவது இடத்தில் அதிகமான டிஆர்பி புள்ளிகளுடன் இந்த சீரியல் இடம்பெற்று வருகிறது. பாக்யா, கோபி, ராதிகா உள்ளிட்டவர்களை வைத்து இந்த சீரியலின் கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாக்கியாவின் மகன்கள், மகள், நண்பர் பழனிச்சாமி, வீட்டில் வேலை செய்யும் செல்வி உள்ளிட்டவர்களும் இந்த சீரியலின் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர் .தன்னுடைய மனைவி பாக்யாவை ஏமாற்றி விவாகரத்து பெற முயற்சிக்கும் கோபிக்கு உண்மை தெரிந்து தானே விவாகரத்து கொடுத்து அவர் வீட்டை விட்டு வெளியேறவும் காரணமாக அமைகிறார் பாக்யா.
பாக்கியாவின் முன்னேற்றம்: மசாலா பிசினஸ் துவங்கி சமையல் கான்ட்ராக்ட், கேன்டீன் காண்ட்ராக்ட் என அடுத்தடுத்து தன்னை சிறப்பான வகையில் வெளிப்படுத்தி வந்த பாக்கியலட்சுமி தற்போது ரெஸ்டாரெண்ட் துவங்கும் ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறார். அவரது இந்த வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கோபி அவரை சுற்றி எப்போதும் தன்னுடைய சிந்தனையை வளர்த்துக் கொண்டதால் தன்னுடைய மனைவி ராதிகாவிடம் மட்டுமில்லாமல் அனைவரிடமும் கெட்டப் பெயர் வாங்குகிறார். இதனால் அவரது பிசினஸும் லாஸ் ஆகி தற்போது தன்னுடைய நிறுவனத்தை அவர் மூடிய சம்பவமும் நடந்துள்ளது.
கம்பெனியை மூடிய கோபி: இந்த விவகாரத்தை தன்னுடைய குடும்பத்தினருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டு வந்த கோபிக்கு ராதிகா மூலம் இந்த விவகாரம் அனைவருக்கும் தெரியும்படியான சூழல் ஏற்படுகிறது. இதனால் அவரது அம்மா. அப்பா, பாக்யா மற்றும் மகன்கள், மகள் உள்ளிட்ட அனைவருமே தன்னுடைய அப்பாவின் இந்த நிலைமை குறித்து கவலை கொள்கின்றனர். இதனிடையே பாக்யாவும் கவலையுடன் கோபியிடம் தன்னுடைய ரெஸ்டாரெண்டில் மேனேஜர் வேலைக்கு இணைகிறாரா என்று கேள்வி கேட்கிறார். இதை அவமானமாக எடுத்துக் கொள்ளும் கோபி மற்றும் ராதிகா இருவரும் பாக்யாவிடம் கோபத்தை வெளிப்படுத்தி அவரை திட்டி தீர்க்கின்றனர்.
நகைகளை கொடுத்த பாக்கியா: இதனிடையே கோபியின் இந்த நிலை குறித்து அவரது அம்மா மற்றும் அப்பா இருவரும் கவலையுடன் பேசிக் கொள்கின்றனர். ஈஸ்வரி தொடர்ந்து தன்னுடைய மகனின் இந்த நிலை குறித்து கவலையுடன் அழுது தீர்க்கிறார். இதனிடையே அவர்கள் கவலையுடன் பேசுவதை கேட்கும் பாக்யா, முன்னதாக ஈஸ்வரி தன்னிடம் கொடுத்திருந்த நகைகளை திருப்பி அவரிடமே கொடுத்து கோபியின் இந்த நிலைக்கு ஏதாவது செய்யுங்கள் என்று கூறுகிறார். முதலில் மறுக்கும் ஈஸ்வரி பின்னர் பாக்யாவின் வற்புறுத்தலை அடுத்து அந்த நகைகளை வாங்கிக் கொள்கிறார்.
தோள் கொடுத்த மகன் & மகள்: இதனிடையே தன்னை எந்த வகையிலாவது முன்னேறாமல் தடுத்து வரும் கோபியின் நலனுக்காக பாக்யா செயல்படுவதை சுட்டிக்காட்டுகிறார் ராமமூர்த்தி. இந்நிலையில் இன்றைய எபிசோடில் எப்போதும் தன்னுடைய நடைப்பயிற்சியை மிஸ் பண்ணாமல் செய்து வரும் கோபி சோகத்துடன் அமர்ந்திருப்பதை பார்க்கும் செழியன் மற்றும் இனியா இருவரும் அவரை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வதாக காணப்படுகிறது. அவர்களின் இந்த துன்பத்தில் தோள் கொடுக்கும் பண்பை ராதிகா நெகிழ்ச்சியாக பார்ப்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











