Baakiyalakshmi: எங்க குடும்ப விஷயத்தை நாங்க பார்த்துக்குறோம்.. கோபியிடம் கோபமாக பேசிய பாக்கியா!

சென்னை: விஜய் டிவியில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துவரும் சீரியல் பாக்கியலட்சுமி. இனியா விவகாரத்தையொட்டியே இன்றைய தினமும் அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன. தொடர்ந்து தன்னுடைய மகளுக்கு வாழ்க்கையில் அவர் செய்ய வேண்டிய விஷயங்களை அறிவுறுத்துகிறார் பாக்கியா.

இனியா தான் செய்த விஷயத்தால் தொடர்ந்து சங்கடமும் வேதனையும் அடைந்துள்ள நிலையில் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக காணப்படுகின்றனர். முன்னதாக மிகவும் கோபமாக இருந்த ஈஸ்வரியும் தற்போது இனியாவிற்கு ஆதரவாக பேசுவதாக காணப்பட்டது. இந்நிலையில் வீட்டிற்கு வரும் கோபி, இனியா விஷயத்தில் பாக்கியாவை குற்றம் சாட்டுவதாக இன்றைய எபிசோடில் காட்சிகள் அமைந்திருந்தன.

Television Vijay TV Baakiyalakshmi serial

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த இனியாவின் பிரச்சினையை மையமாக கொண்டே காட்சிகள் அமைந்திருந்தன. நண்பர்களுடன் பப்பிற்கு சென்று போலீசிடம் மாட்டிக் கொள்ளும் இனியாவை, அங்குவரும் ராதிகா காப்பாற்றுகிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு குடும்பத்தினர் அனைவரும் நிலைகுலைகின்றனர். தன்னுடைய மகள் மீது மிகுந்த பாசம் கொண்டுள்ள கோபியும் இந்த விஷயத்தால் அதிகமான குழப்பத்திற்கு உள்ளாகிறார். தொடர்ந்து இந்த விஷயத்தில் பாக்கியா பொறுப்பாக நடந்துக் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.

பாக்கியாவிடம் எகிறிய கோபி: பெண்ணை வளர்ப்பதில் அப்பாவுக்கும் பொறுப்பு இருப்பதாகவும் கோபியும் இனியாவை கண்காணித்திருக்கலாமே என்றும் பாக்கியா கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதிலளிக்கும் கோபி, இனியாவை பாக்கியாதானே பார்த்துக் கொள்கிறார். அவர்தானே பொறுப்பாக பார்த்திருக்க வேண்டும் என்று பதில் கேள்வி கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தினந்தோறும் பேக்கை மாட்டிக் கொண்டு மசாலா, ரெஸ்டாரெண்ட், லாம்ப் போஸ்ட் என்று பாக்கியா கிளம்பிப் போய்விடுவதாகவும், எப்போதும் பழனிச்சாமியின் பேக்கரியிலேயே பாக்கியா காணப்படுவதாகவும் கோபி அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்.

மற்றவர்களை குற்றம் சாட்டுவதா?: அவளால் தன்னுடைய குழந்தைகளை சரியாக பார்த்துக் கொள்ள முடியவில்லை என்றும் கோபி பாக்கியாவிடம் சண்டையிடுகிறார். இதற்கு பதிலளிக்கும் பாக்கியா, வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட வேண்டுமென்றால் தான் வேலைக்கு போவதும் பிசினசை கவனிப்பதும் முக்கியம் என்று தடாலடியாக பதிலளிக்கிறார். மேலும் இனியா, பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கியபோது தன்னுடைய மகள் என்று பெருமைப்பட்டுக் கொண்ட கோபி, தற்போது பிரச்சினை என்று வந்துவிட்டால் தன்னை குற்றம் சாட்டுவதா என்றும் கேள்வி எழுப்புகிறார். பெருமை படுவதற்கு கோபி மற்றும் குற்றவுணர்ச்சிக்கு தானா என்றும் கேள்வி எழுப்புகிறார்.

நாங்க பார்த்துக் கொள்கிறோம்: தங்களது குடும்ப விஷயங்களை தாங்களே பார்த்துக் கொள்வதாகவும் கோபி இதில் தலையிட வேண்டாம் என்றும் பாக்கியா கூறுகிறார். தொடர்ந்து அவர் வீட்டை விட்டு வெளியேறவும் பாக்கியா கோபத்துடன் கூறுகிறார். இதையே ராமமூர்த்தி, ஈஸ்வரி, செழியன், எழில் என அனைவரும் கூறுகின்றனர். இதையடுத்து பாக்கியாவிடம் தொடர்ந்து ஆத்திரத்துடன் பேசும் கோபி, தன்னுடைய மகள் இனியாவை தான் பார்த்துக் கொள்வதாக கூறுவதாக இன்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X