Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய தினமும் சிறப்பான ரசிகர்களை கவரும் வகையில் எபிசோடை கொடுத்துள்ளது. இந்த சீரியலில் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த செழியன் மற்றும் ஜெனி விவகாரத்தில் தற்போது நல்ல முடிவு எட்டப்பட்டுள்ளது. மாலினி விவகாரத்தால் செழியன்மீது ஆத்திரமடைந்த ஜெனி, தன்னுடைய அப்பா வீட்டிற்கு குழந்தையுடன் கோபித்துக் கொண்டு சென்று விடுகிறார். அவரை சமாதானப்படுத்தும் பாக்கியா மற்றும் குடும்பத்தினரின் முயற்சி நிறைவேறாமல் போக, தன்னுடைய வாழ்க்கையை ஜெனியை இழந்துவிடுவோமோ என்ற பயத்துடன் செழியன் காணப்பட்டார்.

இதனிடையே, ஜெனியின் அப்பா, தன்னுடைய மகளின் விவாகரத்திற்கும் அப்ளை செய்த நிலையில், அந்த வழக்கும் தொடர்ந்து நடந்து வந்தது. தொடர்ந்து ஜோசப், தன்னுடைய மகளுக்கு மறுமணம் செய்து வைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார். ரெஸ்டாரெண்டில் சாப்பிட வந்த கோபியிடம் சண்டை போடும் ஜோசப், இதுகுறித்து கோபியிடம் கூற, அவரும் தன்னுடைய அம்மா ஈஸ்வரியுடன் இணைந்து தன்னுடைய மகன் செழியனுக்கு மறுமணத்திற்கான ஏற்பாடுளை செய்கிறார். இதனால் அடுத்ததாக என்ன செய்வது என்பது குறித்து தெரியாமல் பாக்கியா நிலைகுலைந்ததையும் பார்க்க முடிந்தது.

Vijay TV s Baakiyalakshmi serial today 29th March 2024 episode Chezhiyan -Jeni issue solved

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எபிசோட்களை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் தன்னுடைய மகன்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளிலிருந்து அவர்களை மீட்டு அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக்கியுள்ளார் பாக்கியா. முன்னதாக எழில் மற்றும் அமிர்தா வாழ்க்கையில் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷால் ஏற்பட்ட பிரச்சினையில் இருந்து அவர்களை காப்பாற்றி, அவர்களின் நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டியுள்ளார். தற்போது எழில் மற்றும் அமிர்தா இருவரும் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

பாக்கியா போராட்டம்: இதனிடையே செழியன் மற்றும் ஜெனி வாழ்க்கையில் மாலினியால் ஏற்பட்ட குழப்பங்களில் இருந்து அவர்களை காப்பாற்றவும் தொடர்ந்து போராடியதை பார்க்க முடிந்தது. முன்னதாக மாலினி விவகாரத்தால் கோபமடைந்த ஜெனி, குழந்தையுடன் தன்னுடைய அப்பா வீட்டிற்கு சென்ற நிலையில், அவரது குழப்பத்தை தீர்த்து வைக்க வேண்டிய அவர், தொடர்ந்து பிரச்சினையை சிக்கலாக்கும்வகையில் விவாகரத்திற்கு அப்ளை செய்கிறார். தொடர்ந்து தன்னுடைய மகளுக்கு இரண்டாவதாக திருமணம் செய்யவும் அவர் முயற்சிகள் மேற்கொண்டதை பார்க்க முடிந்தது. ஆனால் திருமணத்தை ஜெனியால் ஏற்க முடியவில்லை.

தனியாக பேச வைத்த பாக்கியா: இதை கேள்விப்படும் கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் செழியனுக்கு மறுமணத்திற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். இதை கேள்விப்பட்ட ஜெனி, அதை ஏற்க முடியாமல் திணறியதையும் பார்க்க முடிந்தது. இதேபோல ஜெனிக்கு திருமணம் ஆனாலும் அவனை தன்னுடைய மனதில் வைத்து தான் வாழ்வேன் என்று செழியன் பாக்கியா மற்றும் தன்னுடைய குடும்பத்தினரிடம் கூறியதையும் பார்க்க முடிந்தது. இதையடுத்து இருவரையும் தனியாக பேச வைத்தால் இந்த பிரச்சினை நிறைவடைந்துவிடும் என்று ஜெனியின் அம்மாவிடம் பாக்கியா பேசிய நிலையில், தன்னுடைய மகளின் மனநிலையை புரிந்துக் கொண்ட அவரும் இதற்கு சம்மதிக்கிறார்.

செழியன் -ஜெனி பிரச்சினைக்கு தீர்வு: நேற்றைய எபிசோடில் செழியன் மற்றும் ஜெனி இருவரும் தனிமையில் பேசிய நிலையில், அவர்களுக்குள் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இருவரும் சமாதானமடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு ஜெனியின் அப்பாவை பார்க்க அனைவரும் செல்கின்றனர். அவர்கள் பயங்கர கோபத்துடன் மரியம் தன்னை மீறி செயல்பட்டதாக ஆத்திரப்படுகிறார். இதையடுத்து செழியன் செய்த தவறை நினைத்து மன்னிப்பு கேட்கும்போது அதை கொடுப்பதுதான் மனிதாபிமானம் என்றும் செழியனை ஜெனி மன்னித்து விட்டாள் என்றும் மரியம் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

ஆத்திரத்தில் ஜோசப்: இவர்களின் பிரச்சினை தீர வாய்ப்பே இல்லை என்றும் ஜெனி எந்தகாலத்திலும் செழியனை மன்னிக்க மாட்டாள் என்றும் ஜோசப் கூற, அவர்களின் பிரச்சினை சரியாகிவிட்டதாக பாக்கியா கூறியதையும் இன்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. இதையடுத்து அவர் ஆத்திரத்துடன் தன்னுடைய அறைக்கு செல்வதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் பாக்கியா, ஜெனியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறார். இதனிடையே, மகன்களுடன் பாக்கியா எங்கே போனாலோ, என்ன பிரச்சினையை கொண்டு வரப் போகிறாளோ என்று கோபியும் ஈஸ்வரியும் வீட்டில் இருந்தபடி பேசுவதையும் பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X