Baakiyalakshmi: பாக்கியாவின் ரெஸ்டாரெண்ட் பார்க்கிங் பிரச்சினை.. தீர்த்து வைத்த பழனிச்சாமி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தது. ஆயிரம் எபிசோட்களை தாண்டி இந்த சீரியல் வெற்றிகரமாக ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில் விரைவில் சீரியல் நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது எழில் மற்றும் செழியனின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து இன்றைய தினம் அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கான முகாந்திரங்களை சீரியலில் காண முடிந்தது. அமைச்சரை கொண்டு சிறப்பாக துவங்கப்பட்ட நிலையிலும் பார்க்கிங் பிரச்சினை இருப்பதால் பாக்கியாவின் ரெஸ்டாரெண்டிற்கு கஸ்டமர் அதிகமாக வராத நிலை காணப்படுகிறது.
இதனால் பாக்கியா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இருந்தபோதிலும் நிலைமை சரியாக மாறும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். இதனிடையே செழியனின் வாழ்க்கை பிரச்சினைக்காக அவர் ஓடிக்கொண்டிருந்த நிலையில் இது குறித்து அவர் அதிக கவனம் செலுத்தாத நிலை காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் ரெஸ்டாரண்டிற்கு வந்த பழனிச்சாமி இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார். இந்த பிரச்சினைக்கான தீர்வை தான் கண்டறிவதாகவும் இதை தன்னிடம் விட்டுவிடும்படியும் அவர் கூறுகிறார். இதை பாக்கியாவும் ஏற்றுக் கொள்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து, தொடர்ந்து ஆயிரம் எபிசோட்களுக்கும் மேலாக பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிநடை போட்டு வருகிறது. தொடர்ந்து டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று சேனலின் இரண்டாவது முன்னணி சீரியலாக இருந்து வருகிறது. இன்றைய எபிசோடும் ரசிகர்களை கட்டி போடும் வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக எழில் மற்றும் செழியனின் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் அவற்றை தீர்க்க போராடிய பாக்கியா மற்றும் குடும்பத்தினரை பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரின் வாழ்க்கை சிக்கல்கள் தீர்க்கப்பட்டு இருவரும் நிம்மதியான வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளனர்.
ஜெனி வரவால் குடும்பத்தினர் உற்சாகம்: மாலினி விவகாரத்தில் கோவித்துக் கொண்டு அப்பா வீட்டிற்கு சென்ற ஜெனி, தற்போது தன்னுடைய கோபம் நீங்கி பாக்கியா வீட்டிற்கு குழந்தையுடன் திரும்பியுள்ளார். அவரை ஈஸ்வரி, ராமமூர்த்தி என அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். ஆனால் முன்னதாக செழியனுக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் முயன்றதை சுட்டிக்காட்டிய ஜெனி, தான் அவர்கள் மீது மிகவும் கோபமாக இருப்பதாக கூறுகிறார். ஆனால் ஜெனியின் அப்பாவும் திருமண ஏற்பாடுகளை செய்ததாக ஈஸ்வரி சுட்டிக்காட்ட இருவரும் சமாதானம் அடைகின்றனர். இந்நிலையில் செழியனின் மகளை எப்போதும் கொஞ்சிக் கொண்டே இருக்கிறார் ஈஸ்வரி.
பாரபட்சம் காட்டும் ஈஸ்வரி: இதனிடையே அமிர்தாவின் மகளான நிலாவை குழந்தையை சீண்டாமல் தள்ளி நிற்க சொல்கிறார். இதை பார்க்கும் ராதிகா வருத்தம் அடைகிறார். தொடர்ந்து நிலாவை கூட்டிக்கொண்டு போய் விளையாடுகிறார். இதையடுத்து அங்கு வரும் கதிர், ராதிகாவின் இந்த செயலை பார்த்து நெகிழ்ச்சிக்குள்ளாகிறார். தொடர்ந்து நிலா, பாட்டி தன்னை திட்டியதாக கூற உடனே ஈஸ்வரி குழந்தையை நெருங்கி வந்து சீண்டாதே என்று தானே கூறினேன். இதற்குப் போய் அப்பா வந்தவுடன் புகார் கூறுகிறாயா என்று நிலாவிடம் கேட்கிறார். இதை கேட்கும் எழில், நிலாவுடன் அங்கிருந்து செல்கிறார்.
பாக்கியா பிரச்சினைக்கு பழனிச்சாமி தீர்வு: முன்னதாக பாக்கியாவின் ரெஸ்டாரண்டிற்கு வரும் பழனிச்சாமி, வெளியில் நின்றபடி ரெஸ்டாரண்டை பார்க்கிறார். அப்போது ரெஸ்டாரண்டிற்கு சாப்பிட வரும் கார்கள் அனைத்தும் பார்க்கிங் வசதி இல்லாததால் அங்கிருந்து நகர்ந்து செல்வதாக காணப்படுகிறது. இதை பார்க்கும் பழனிச்சாமி அனைத்தையும் சரி செய்து விடலாம் என்று பாக்கியாவிற்கு நம்பிக்கை கூறுகிறார். தொடர்ந்து சற்று தொலைவில் இருக்கும் ஒரு கிரவுண்டை பார்த்து அதை பாக்யாவின் ரெஸ்டாரண்டிற்கு பார்க்கிங்கிற்காக பயன்படுத்தும் ஐடியாவை கூறுகிறார். இதனிடையே அவர்கள் இருவரின் ஜோடி பொருத்தம் எப்படி இருக்கிறது என்று எழிலிடம் செல்வி கேட்கிறார். அக்கா வேண்டாம் என்று சொன்னாலும் அவரது திருமணத்தை முன் நின்று நடத்துமாறு எழிலிடம் செல்வி கூற, இதுகுறித்து எழில் யோசனையில் ஆழ்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











