Baakiyalakshmi serial: பர்சனல் விஷயத்தையெல்லாம் ஏன் சொன்னீங்க.. ஈஸ்வரியால் கடுப்பான கோபி!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகளாக அமைந்திருந்தது. இனியாவின் பிரச்சினை காரணமாக கல்லூரி முதல்வரை சந்திக்கும் பாக்கியா, ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி மூவரும் அவரிடம் இனியாவை மீண்டும் கல்லூரிக்குள் சேர்த்துக் கொள்ளுமாறு கெஞ்சியபடி கேட்கின்றனர்.
அப்போது இனியாவின் அப்பா குறித்து கல்லூரி முதல்வர் கேள்வி எழுப்ப, வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் சூழலின் கோபி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அடுத்த தெருவிலேயே வசித்து வருவதாக ஈஸ்வரி ஆத்திரத்துடன் கூறுகிறார். இதைக் கேட்கும் கல்லூரி முதல்வர் வருத்தத்துடன் இனியாவை மீண்டும் கல்லூரிக்குள் சேர்த்துக் கொள்கிறார். இதனிடையே அங்கு வரும் கோபியையும் கல்லூரி முதல்வர் கேள்வி எழுப்புவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக அமைந்திருந்தது. இனியாவின் நடவடிக்கையால் அவரை டிஸ்மிஸ் செய்ய கல்லூரி நிர்வாகம் முடிவெடுக்கிறது. மறுநாள் காலை தன்னுடைய பெற்றோருடன் வந்து டிசி வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும் என்று கல்லூரி முதல்வர் கூறிய நிலையில் தன்னுடைய அம்மா, தாத்தா, பாட்டியுடன் கல்லூரி முதல்வரை சந்திக்கிறார் இனியா. தன்னுடைய மகள் எங்கு செல்கிறாள் என்று கூட தெரியாமல் பிசினஸ் என்று ஓடுவதா என்று கல்லூரி முதல்வர் பாக்கியாவை கண்டிக்கிறார்.
கோபி குறித்த கேள்வி: இதையடுத்து பாக்கியா இனியாவை அனுப்ப மாட்டேன் என்று தான் கூறியதாகவும் பர்த்டே பார்ட்டி தானே என்று தாங்கள்தான் அனுப்பி வைத்ததாகவும் ஈஸ்வரி கல்லூரி முதல்வரிடம் விளக்கம் கூறுகிறார். இந்நிலையில் இனியாவின் அப்பா குறித்து கல்லூரி முதல்வர் கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து தொடர்ந்து பேசும் ஈஸ்வரி, அவர் தங்களுடன் இல்லை என்றும் வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் நிலையிலும் டைவர்ஸ் வாங்கிக் கொண்டு இரண்டாவதாக திருமணம் செய்து பக்கத்து தெருவில் வசித்து வருவதாகவும் கூறுகிறார். இதைக் கேட்டு வருத்தம் அடையும் கல்லூரி முதல்வர் இனியாவை தொடர்ந்து கல்லூரியில் படிக்க அனுமதிப்பதாகவும் ஆனால் இது போன்று இன்னொரு பிரச்சனை ஏற்பட்டால் தன்னை சந்திக்க வேண்டிய அவசியம் கூட இல்லை என்றும் நேராக வந்து டிசி வாங்கிக்கொண்டு சென்றுவிடலாம் என்றும் எச்சரிக்கிறார்.
அவமானப்படும் கோபி: மேலும் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு இனியா தன்னுடைய வகுப்பிற்கு செல்லவும் அறிவுறுத்துகிறார். இந்நிலையில் முன்னதாக இனியா கேட்டுக் கொண்டதற்கு இணங்க கல்லூரிக்கு வரும் கோபி, முதல்வரை சந்திக்கிறார். அவரிடம் பேசும் கல்லூரி முதல்வர், கோபி இரண்டாவது திருமணம் செய்தது குறித்து தான் விமர்சிக்கவில்லை என்றும் ஆனால் வளர்ந்த பிள்ளைகளை வளர்ப்பது அம்மாவின் பொறுப்பு மட்டுமில்லை என்றும் தந்தையின் பொறுப்பும் அதில் இருப்பதாகவும் கூறுகிறார். இதனால் அவமானப்படும் கோபி, தொடர்ந்து பாக்கியா வீட்டிற்கு வந்து பர்சனல் விஷயங்களை எதற்காக கல்லூரி முதல்வரிடம் கூறினீர்கள் என்று அனைவரிடமும் கேள்வி எழுப்புகிறார்.
கோபிக்கு விளக்கம்: இதற்கு பதிலளிக்கும் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி இருவரும் கல்லூரி முதல்வர் இனியாவின் அப்பா குறித்து கேட்டதாகவும் தாங்கள் உண்மையை தான் கூறினோம் என்றும் பேசுகின்றனர். தொடர்ந்து பேசும் பாக்கியா, பெற்ற குழந்தைகள் வாழ்க்கையில் செட்டில் ஆகும்வரை அவர்களின் கைகளை பிடித்துக் கொண்டு சென்று கரை சேர்க்க வேண்டும் என்றும் கூறுகிறார். இதையடுத்து அங்கிருந்து வெளியேறுமாறு ஈஸ்வரி, ராமமூர்த்தி இருவரும் கோபியிடம் கூறுகின்றனர். இதனால் அடுத்தடுத்து அவமானப்படும் கோபி வீட்டிற்கு வந்து தலையில் கை வைத்தபடி அமர்கிறார்.
ராதிகா கடுப்பு: அதை பார்த்து ராதிகா என்ன நடந்தது என்று கேள்வி எழுப்ப நடந்ததை கூறுகிறார் கோபி. எத்தனை முறை அவமானப்பட்டாலும் மீண்டும் மீண்டும் அந்த வீட்டிற்கு செல்கிறீர்களே என்று ராதிகா கேள்வி எழுப்புவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











