Baakiyalakshmi serial: குடிகார புருஷன்.. கொலைகார மாமியார்.. மீண்டும் கோபியை ஆத்திரப்படுத்திய கமலா!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி தொடர்ந்து தன்னுடைய வீடு குறித்து செந்திலிடம் ஆத்திரமாக பேசுவதாக காணப்படுகிறது. வீடா அது என்று கேட்டு தன்னுடைய ஆதங்கத்தையும் அவர் செந்திலிடம் வெளிப்படுத்துகிறார். இந்நிலையில் ஏற்கனவே ஒரு பிசினஸை தொலைத்துவிட்ட கோபி தற்போது இருக்கும் பிசினஸை சரியாக பிடித்துக் கொள்ள வேண்டும் என்று செந்தில் அறிவுறுத்துவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

தொடர்ந்து கோபி வீட்டிற்கு வரும் நிலையில் அங்கு அவரது மாமியார் கமலா, மீண்டும் கோபத்துடனும் ஆத்திரத்துடனும் கோபியை எதிர்கொள்கிறார். இதனிடையே தன்னுடைய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று ராதிகாவும் தன்னுடைய அம்மா கமலாவிடம் வேதனைப்படுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Television Baakiyalakshmi serial Vijay tv

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் சிறப்பாக காணப்பட்டது. இன்றைய எபிசோடில் கோபியின் ரெஸ்டாரண்டிற்கு வரும் செந்தில் ஊழியர்களிடம் அவர் காட்டும் கோபத்தை பார்த்து அவருக்கு அறிவுரை கூறுகிறார். ஏற்கனவே ஒரு பிசினஸ் படுத்துவிட்ட சூழலில் இருக்கும் இந்த பிசினசை காப்பாற்றிக் கொள்ளும்படி செந்தில் கூறுகிறார். வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அதை வேலையில் காண்பிக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். இதனிடையே, கோபி தன்னை அடிக்க கையை ஓங்கியதால் தன்னுடைய அறைக்கு சென்று அழுது கொண்டிருக்கிறார் ராதிகாவின் அம்மா கமலா.

ராதிகா அச்சம்: அவரை சமாதானப்படுத்த வரும் ராதிகா தன்னுடைய வாழ்க்கை குறித்த பயத்தை வெளிப்படுத்துகிறார். தனக்கு தெரிந்த கோபி தன் மீது மிகவும் அக்கறையாகவும் மயூ மீது மிகுந்த அன்பாகவும் இருந்தவர் என்றும் தனக்கு ஒன்று என்றால் துடித்துப் போவார் என்றும் கூறும் ராதிகா, தற்போது உள்ள கோபி முற்றிலும் மாறுபட்ட மனநிலையில் காணப்படுவதாக கூறி அழுகிறார். இதனிடையே முதல் வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் இரண்டாவது வாழ்க்கையாவது சிறப்பாக இருக்கும் என்று நினைத்துதான் கோபியை வற்புறுத்தி திருமணம் செய்ய வைத்ததாகவும் ஆனால் அது இதுபோல ஆகும் என்று தான் நினைக்கவில்லை என்று கமலாவும் தன் வேதனையை அழுகையோடு வெளிப்படுத்துகிறார்.

உற்சாகத்தில் ஈஸ்வரி: இந்நிலையில் கும்பகோணத்தில் தன்னுடைய சிறு வயது தோழி சாவித்திரியை பார்க்கும் ஈஸ்வரி, இதனால் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளார். தன்னுடைய மருமகள், கணவர் மற்றும் பேத்தி இனியாவுடன் அவர் தன்னுடைய இளமை கால நினைவுகளை தொடர்ந்து பகிர்ந்து வருவதாக காணப்படுகிறது. ஆனால் தற்போது அந்த வாழ்க்கை கிடைக்காது என்றும் தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்துகிறார். இதையடுதது பாக்கியா மற்றும் இனியா அவரை சமாதானப்படுத்துகின்றனர். தொடர்ந்து ஈஸ்வரி பள்ளிக்காலத்தில் நடந்த இனிமையான நிகழ்வுகளை கூற, அதனை அனைவரும் ஆர்வத்துடன் கேட்கின்றனர்.

ஜெனியிடம் கோபப்படும் அமிர்தா: இதனிடையே, அடுப்பில் பாலை வைத்துவிட்டு ஜெனி, தன்னுடைய குழந்தையை கவனிக்க சென்றுவிடுகிறார். இதனால் பால் பொங்கி, அடுப்பு அணைந்துவிட, கேஸ் லீக்காகிறது. தொடர்ந்து சமையலறைக்கு வரும் அமிர்தா, நடந்ததை பார்த்து, உடனடியாக அடுப்பை அணைத்து, ஜன்னல்களை திறந்து விடுகிறார். தொடர்ந்து அங்குவரும் ஜெனியிடம் சிறிது கோபத்துடன் பேசுகிறார். இதையடுத்து அமிர்தா தனக்குதான் எல்லாம் தெரியும் என்பது போல நடந்துக் கொள்வதாக ஜெனி பதிலுக்கு கோபப்படுகிறார். இதையடுத்து அங்குவரும் எழில் மற்றும் செழியன் அவர்களை சமாதானப்படுத்துகின்றனர்.

மீண்டும் கோபி ஆத்திரம்: இந்நிலையில் கிளவுட் கிச்சனிலிருந்து ஒரு பைலை எடுப்பதற்காக வீட்டிற்கு வரும் கோபி, வீட்டில் ராதிகா இல்லாதது குறித்து கமலாவிடம் கேள்வி எழுப்புகிறார். கமலாவோ வீட்டில் இருந்தால் நிம்மதி இல்லை மூச்சு முட்டுகிறது என்று ராதிகா வெளியில் சென்றதாக கூறுகிறார். உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவளை எதற்காக தனியாக அனுப்பினீர்கள் என்று கோபி கேள்வி எழுப்ப, குடிகார புருஷன் மற்றும் கொலைகார மாமியார் என இவர்களுடன் இருக்கும் நிலையில் ராதிகா என்ன செய்வாள் என்று கேட்பதாகவும் இதை கேட்கும் கோபி மீண்டும் ஆத்திரப்படுவதாகவும் இன்றைய எபிசோட் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X