Baakiyalakshmi: பேத்தியின் பேர் வைக்கும் நிகழ்ச்சி.. ராதிகா கர்ப்பத்தை தொடர்ந்து மறைக்கும் கோபி!
சென்னை: பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் சூழலில் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு சிறப்பாகவே அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் பாண்டிச்சேரிக்கு தன்னுடைய அலுவலக நண்பர்களுடன் சுற்றுலா கிளம்புவதற்காக செழியன் திட்டமிடுகிறார். இது குறித்து முன்னதாகவே அவர் ஜெனியிடம் கூறிவிட்டதாக நினைத்து பேசுகிறார். ஆனால் திடீரென அவர் கூறுவது ஜெனிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.
இதையடுத்து செழியன் எந்த சுற்றுலாவிற்கும் செல்ல வேண்டாம் என்று ஜெனி கூறிவிடுகிறார். ஜெனி இதுபோல நடந்துக் கொள்ள மாட்டார் என்பதால் செழியன் மிகப்பெரிய அதிருப்தி அடைகிறார். மாலினியுடன் அவருக்கு ஏற்பட்ட பழக்கம் மற்றும் அதன் காரணமாக ஜெனியுடனான பிரிவு என அடுத்தடுத்த விஷயங்கள் ஜெனிக்கு தொடர்ந்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து செழியன் எப்படி மீள போகிறார் என்பது குறித்து அவருக்கு தெரியவில்லை. இவ்வாறாக தொடர்ந்து அடுத்தடுத்து எபிசோடுகளை பார்க்க முடிகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து அடுத்தடுத்த காட்சிகளை சிறப்பாக கொடுத்திருந்தது. இன்றைய தினம் அலுவலகத்தில் செழியன் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து பாண்டிச்சேரிக்கு சுற்றுலாவிற்கு திட்டமிடுகிறார். இதுகுறித்து அவர் முன்னதாகவே ஜெனியிடம் கூறிவிட்டதாக நினைத்த சூழலில் அவர் கூறவில்லை என்று ஜெனி கூறுகிறார். இதனால் செழியனை பாண்டிச்சேரி ட்ரிப் எல்லாம் அனுப்ப முடியாது என்று ஜெனி கூறுகிறார்.
ஜெனி உறுதி: செழியனை சுற்றுலாவிற்கு அனுப்பி வைத்துவிட்டு அவர் யாருடன் சென்றார் என்பது குறித்து எல்லாம் யோசித்துக் கொண்டிருக்க முடியாது என்று ஜெனி, செழியனிடம் வாக்குவாதம் செய்கிறார். தன் மீது நம்பிக்கை இல்லையா என்று செழியன் அப்பாவியாக கேட்க, நம்பிக்கை இல்லை என்று கூறி அந்த வாக்குவாதத்தை முடிக்கிறார் ஜெனி. மேலும் அவர் வர முடியாது என்று தன்னுடைய நண்பர்களிடம் கால் செய்து கூறிவிடுமாறு அவர் கூறுகிறார். இதனால் செழியன் மிகுந்த ஏமாற்றத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகிறார். மிகவும் சுதந்திரமாக அவர் செல்லும் இடங்கள் குறித்து எதுவும் கேட்காமல் ஜெனி இருந்ததை முன்னதாக பார்க்க முடிந்தது.
செழியன் குழந்தைக்கு பெயர்சூட்டு விழா: ஆனால் மாலினியுடன் அவருக்கு ஏற்பட்ட உறவு அதன் காரணமாக ஜெனியுடன் ஏற்பட்ட பிரிவு ஆகிய விஷயங்களால் இவர்களது ரிலேஷன்ஷிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சனைகள் ஏற்படுவதை பார்க்க முடிகிறது. இதனிடையே ராதிகா குறித்து பேசுவதற்காக தன்னுடைய அம்மாவை கோபி தனியாக கூப்பிடுகிறார். காரில் ஒரு ரைடு போகலாம் என்று ஈஸ்வரிடம் அவர் கேட்கிறார். ஆனால் செழியன் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்காக மற்றவர்களை அழைப்பதில் ஈஸ்வரி பிசியாக காணப்படுகிறார் இதை பார்க்கும் கோபி செழியனின் குழந்தைக்கு பேர் வைக்கிறீர்களா எனக்கு தெரியாதே என்று கூறுகிறார்.
ராதிகாவின் கர்ப்பத்தை மறைக்கும் கோபி: தான் சொல்ல மறந்து விட்டதாக ஈஸ்வரி கூறும் சூழலில் இந்த நேரத்தில் ராதிகாவின் கர்ப்பம் குறித்து பேசுவது சரியாக இருக்காது என்று கோபி பின் வாங்குகிறார். தொடர்ந்து ஸ்டேஷனரி ஐட்டம் வாங்குவதற்காக தன்னுடைய அம்மாவுடன் செல்ல வேண்டும் என்று இனியா கூறுவதை கேட்கும் கோபி தானே அழைத்து செல்வதாகவும் தனக்கு இனியா மீது ரைட்ஸ் உள்ளதாகவும் கூறுகிறார். தொடர்ந்து தன்னுடைய மகளை அழைத்துச் செல்கிறார். தன்னுடைய குழந்தை குறித்து பேச முற்படுகிறார். ஆனால் வழக்கம் போல அவர் சுற்றி வளைத்து நீட்டி முழக்கி இந்த விஷயத்தை பேச முற்படுக்கையில் இது கன்றாவியான விஷயம் என்று இனியாவும் கூறுவதை பார்க்க முடிகிறது.
தம்பி வேண்டாம்.. இனியா உறுதி: இந்த வயதில் தனக்கு தம்பியோ தங்கையோ தேவைப்படாது என்றும் கோபி யாரையாவது தத்தெடுக்க போகிறாரா என்றும் இனியா கேட்பதையும் பார்க்க முடிந்தது. இதனால் இனியாவிடமும் இந்த விஷயத்தை ஓபன் செய்ய முடியாமல் தவிக்கிறார் கோபி. இதனிடையே ஜெனிக்கு ஜூஸ் போடுகிறார் பாக்கியா. இதையடுத்து கர்ப்பமாக இருக்கும் ராதிகாவும் ஜூஸ் போட முற்படுகிறார். ஆனால் அந்த நேரத்தில் கரண்ட் போவதால் தான் ஜெனிக்கு போட்ட ஜூசை ராதிகாவிற்கு கொடுக்கிறார் பாக்கியா. அவர் மிகவும் சோர்வாக இருப்பதை சுட்டிக்காட்டி ஜெனிக்கு தான் பழங்களை கட் செய்து கொடுப்பதாகவும் ராதிகா இந்த ஜூஸை குடித்துக் கொள்ளட்டும் என்றும் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











