பாக்கியலட்சுமி சீரியல்: அப்பா செத்துட்டாரா.. நம்ப மறுக்கும் கோபி.. நிலைகுலைந்த ஈஸ்வரி & பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து சேனலின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் அடுத்தடுத்த பல பரபரப்பான திருப்பங்கள் சேர்க்கப்பட்டு ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது. தொடர்ந்து சேனலின் இரண்டாவது முன்னணி சீரியலாக டிஆர்பியில் மாஸ் காட்டி வருகிறது.
இந்த சீரியலில் அடுத்தடுத்து ராதிகாவின் கருச்சிதைவு, ஈஸ்வரியின் கைது, நீதிமன்ற காவல், போலீசிடம சிக்கும் இனியா என பரபரப்பான சம்பவங்கள் இணைந்த நிலையில், ஒரு கட்டத்தில் ஜெனியின் இரண்டாவது கர்ப்பம், ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாள் என அடுத்தடுத்த இனிமையான தருணங்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது தாத்தாவின் இறப்பு பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினரை உலுக்கியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த பரபரப்பான கட்டங்களுடன் ரசிகர்களை கவர்ந்து முன்னணி சீரியலாக மாஸ் காட்டி வருகிறது. இந்த சீரியல் அதிகமான டிஆர்பி புள்ளிகளுடன் சேனலின் இரண்டாவது முன்னணி தொடராக இருந்து வருகிறது. இந்த சீரியலில் அடுத்தடுத்த பிரச்சினைகளை கொண்டு எபிசோட்களை கொடுத்து வந்தார் இயக்குநர். ராதிகாவின் கருச்சிதைவில் துவங்கியது பிரச்சினை. தொடர்ந்து அந்த விஷயத்தில் ஈஸ்வரியின் கைது, நீதிமன்ற காவல் மற்றும் அவரை மீட்பதற்கான போராட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த விஷயத்தில் தன்னை நம்பாத கோபியை தலை முழுகுகிறார் ஈஸ்வரி.
80வது பிறந்தநாள் கொண்டாட்டம்: இந்த விஷயத்தில் தன்னுடைய மகன் கோபியை வெறுத்த ராமமூர்த்தி, தான் இறந்தாலும் அவர் தனக்கு கொள்ளி வைக்கக்கூடாது என்று வயிறெரிந்து பேசினார். இந்நிலையில் அவரது 80வது பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோயிலில் வைத்துதான் இந்த கொண்டாட்டம் நடந்தது என்றபோதிலும் தன்னுடைய பேரன்கள், பேத்தி என அனைவரும் சூழ, உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வந்ததால் ராமமூர்த்தி மிகவும் நெகிழ்ச்சியடைந்ததை பார்க்க முடிந்தது. கொண்டாட்டம் முடிந்து வீட்டிற்கு வந்தும் யாரையும் தூங்கவிடாமல் மனநிறைவுடன் அவர் அனைவருடனும் கலகலப்பாக பேசினார்.
தூக்கத்திலேயே மறைந்த ராமமூர்த்தி: இந்நிலையில், நீண்ட நேரம் தூக்கம் வராமல் உலவிக்கொண்டிருந்த அவர் ஈஸ்வரி வற்புறுத்தியதால் தூங்க செல்வதாக காட்டப்பட்டது. இந்நிலையில் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. இதை மருத்துவரும் உறுதி செய்த நிலையில், குடும்பத்தினர் அனைவரும் நிலை குலைந்து போகின்றனர். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் ஈஸ்வரி காணப்படுகிறார். பாக்கியாவோ, அதிர்ச்சியடைந்து, ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அழுது தீர்க்கிறார். கண்ணீருடன் காணப்படும் இனியாவிற்கு ஆறுதல் கூறுகிறார். இதனிடையே வாசலில் இருந்து பார்க்கும் கோபி, வீட்டிற்குள் வந்து விஷயத்தை தெரிந்துக் கொள்கிறார்.
திணறும் கோபி: அவரும் தன்னுடைய அப்பா இறந்ததை கிரகிக்க முடியாமல் திணறுகிறார். தன்னுடைய அப்பா உயிரிழந்திருக்க மாட்டார் என்றும், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் களைப்பில் அவர் படுத்துக் கொண்டிருப்பதாகவும் செழியனிடம் கூறும் கோபி, தண்ணீர் தெளித்து அப்பாவை எழுப்ப முயல்கிறார். ஒரு கட்டத்தை உண்மையை உணரும் அவர், வீட்டிற்கு சென்று ராதிகாவை அழைத்து வருகிறார். ஆனாலும் அவரும் அதிர்ச்சியில் உறைந்து போவதாக இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன. தன்னுடைய இறுதி சடங்கை கோபி செய்யக்கூடாது என்று ராமமூர்த்தி இறுதியாக சொன்ன நிலையில், அடுத்ததாக ஈஸ்வரி என்ன முடிவெடுப்பார் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











