Baakiyalakshmi serial: கத்தியை காட்டி மிரட்டிய பாக்கியா.. அரண்டுபோன கோபி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல், இந்த சீரியலில் தொடர்ந்து அடுத்தடுத்து எபிசோடுகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இயக்குனர். இந்த சீரியலில் ராதிகாவின் கர்ப்பம் குறித்து பாக்கியாவிற்கு தெரிய வருகிறது, இதனால் கோபி மீது தொடர்ந்து ஆத்திரப்படுகிறார் பாக்கியா. அதையொட்டிய மன உளைச்சலிலேயே அவர் தொடர்ந்து இருப்பதை பார்க்க முடிகிறது.
இதனால் ரெஸ்டாரன்ட்டிற்கு வரும் பழனிசாமியையும் பாக்கியா, சரியாக கவனிக்காத சூழல் காணப்பட்டது. இந்நிலையில் பாக்கியா சமையலறையில் இருக்கும் போது அங்கு வந்து முந்திரி, பாதாம் எங்கே என்று கோபி தேடுகிறார். தொடர்ந்து பாக்கியாவிடமும் கேட்கும் சூழலில் அதையெல்லாம் பார்ப்பது தான் தன்னுடைய வேலையா என்று பாக்கியா கோபத்துடன் கோபியிடம் பேசுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது, அவரது கோபத்தால் கோபி மிகுந்த மன உளைச்சலில் காணப்படுகிறார்,

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து சில ஆண்டுகளாக மாஸ் காட்டி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. தன்னுடைய கெட்டப்பை மாற்றிக்கொண்டு யூத்தாக டீ-ஷர்ட், ஜீன்ஸ் போன்றவற்றை அணிந்து கொண்டு பாக்கியாவை பார்க்க கிளம்புகிறார் பழனிச்சாமி. அவரது இந்த கெட்டப்பை பார்த்து அவரது அம்மா மிகவும் சந்தோஷப்படுகிறார். அவருக்கு முத்தம் கொடுக்கும் அவர், தொடர்ந்து பாக்கியாவை சீக்கிரமே வீட்டுக்கு அழைத்து வருமாறு கூறுகிறார். இதையடுத்து கூலர்ஸ் போன்றவற்றையும் அணிந்து கொண்டு பாக்கியாவை பார்க்க கிளம்புகிறார் பழனிச்சாமி.
கெட்டப்பை மாற்றிய பழனிச்சாமி: அவர் காரை விட்டு இறங்கும்போது லவ்வுல லவ்வுல லவ்வுல விழுந்துட்டேன் என்ற பாடல் பின்புலத்தில் இசைக்கப்படுகிறது. தொடர்ந்து மிகுந்த உற்சாகத்துடன் பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு அவர் செல்கிறார். அங்கு செல்வி, அமிர்தா உள்ளிட்ட அனைவரும் அவரது கெட்டப் மாற்றத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர். ஆனால் யாருடைய பாராட்டிற்காக பழனிச்சாமி அங்கு சென்றாரோ அது அவருக்கு கிடைக்காத சூழல் காணப்படுகிறது. இதனால் பழனிச்சாமி ஏமாற்றத்திற்கு உள்ளாகிறார். சிறிது நேரம் பாக்கியாவையே சுற்று சுற்றி வருகிறார். அவர் தன்னுடைய கெட்டப்பை பாராட்டி ஏதாவது சொல்லுவார் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
கோபியை முறைக்கும் பாக்கியா: தொடர்ந்து பாக்கியாவிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார். இதையடுத்து காரில் தனியாக அவர் புலம்புவதையும் பார்க்க முடிந்தது. தொடர்ந்து காரில் சோகப்பாடலாக இசைத்துக் கொண்டு அவர் செல்கிறார். மணலை எங்கே கொட்டுவது என்று அவரது ஊழியர் ஒருவர் கால் செய்து கேட்க, தன் தலையில் கொட்டுமாறு அவர் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே வீட்டில் தன்னுடைய சமையலறையில் பாக்கியா வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். அங்கு வரும் கோபி தண்ணீரை எடுத்துக் குடிக்கிறார். ஆனால் பாக்கியா தொடர்ந்து அவரை முறைப்பதாக காணப்படுகிறது.
கத்தியை காட்டி மிரட்டல்: ஒரு கட்டத்தில் தன்னுடைய உணவுகளை கோபி தொடுவதை பார்த்து அது தான் சமைத்தது என்று கறாராக பாக்கியா கூறுவதாக காணப்படுகிறது. இதையடுத்து பாக்கியா தன்னிடம் ஏன் தொடர்ந்து கோபமாக நடந்து கொள்கிறார் என்று புரியாமல் கோபி தான் வைத்த முந்திரி, பாதாம் உள்ளிட்டவற்றை தேடுகிறார். பாக்கியாவிடமும் கேட்கிறார். அதையெல்லாம் பார்ப்பது தான் தன்னுடைய வேலையா என்று பாக்கியா கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து சமையல் ரூமுக்கு போகும் கோபி, அங்குள்ள கப்போர்டுகளில் முந்திரியை தேடுகிறார். ஆனால் கையில் கத்தியுடன் அவரை மிரட்டும் தொனியில் பாக்கியா, தான் இன்னும் பத்து நிமிடத்தில் அங்கிருந்து சென்று விடுவேன் என்றும் அதன் பின்பு அவர் அவற்றை எல்லாம் தேடிக் கொள்ளலாம் என்றும் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது,


Click it and Unblock the Notifications











