பாக்கியலட்சுமி தொடர்: கடைசியாக பாக்கியாவிடம் பேசிய ராமமூர்த்தி.. செய்த செயல்.. தாத்தாவிற்கா இந்த நிலைமை?
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மிகவும் டச்சிங்காகவும் ரசிகர்களை உருக செய்யும் வகையிலும் அமைந்திருந்தது. தன்னுடைய 80வது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக தன்னுடைய உற்றார் உறவினர், நண்பர்கள், பேரன்கள், பேத்தி உள்ளிட்ட அனைவருடனும் கொண்டாடியுள்ளார் ராமமூர்த்தி.
இந்த சீரியலில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் மாறுபட்டு நடந்து வருகின்றனர். ஆனால் பாக்கியாவிற்கு அவரது செயல்பாடுகளுக்கு எப்போதுமே ராமமூர்த்தியும் மகன் எழிலும்தான் துணை நின்று வருகின்றனர். இந்நிலையில் எழில் தற்போது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பாக்கியாவிற்கு ஆதரவாக உள்ள ராமமூர்த்தியும் உயிரிழப்பதாக பிரமோவில் காட்டப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மிகவும் உருக்கமாக காணப்பட்டது. இந்த சீரியலில் பாக்கியாவின் செயல்களுக்கு எப்போதுமே உறுதுணையாக இருந்து வருபவர் ராமமூர்த்தி. தன்னுடைய மகன் கோபி பாக்கியாவிற்கு எதிராக செய்யும் விஷயங்களை முதல் ஆளாக கேள்வி கேட்பவராகவும் ராமமூர்த்தி காணப்படுகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான இந்த தொடரின் பிரமோவில், அவர் உயிரிழப்பதாக காட்டப்பட்டுள்ளது. இன்றைய எபிசோடிலும் அவரது இறுதி தருணங்களை ஒட்டிய காட்சிகள் ஒளிபரப்பாகின.
தாத்தாவின் 80வது பிறந்தநாள்: தன்னுடைய 80வது பிறந்தநாளை தன்னுடைய உற்றார், உறவினர் மற்றும் பேரன்கள், பேத்தி, பாக்கியா உள்ளிட்டவர்களுடன் கோயிலில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் ராமமூர்த்தி. ஆயினும் இந்த நிகழ்ச்சியில் ஒரு கரும்புள்ளியாக கோபியின் வருகை அமைந்தது. அவரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்று ராமமூர்த்தி கூறியதை பார்க்க முடிந்தது. முன்னதாக தன்னுடைய மரணத்தில் கோபி மகனாக பங்கேற்கக்கூடாது என்றும் கொள்ளி வைக்கக்கூடாது என்றும் அவர் ஆத்திரத்துடன் பேசியதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் அதற்கான காலம் தற்போது வரவுள்ளது.
தாத்தாவின் இறுதி தருணங்கள்: 80வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ராமமூர்த்தி, வீட்டிற்கு வந்தும் யாரையும் தூங்கவிடாமல் தொடர்ந்து பேசி சிரித்துக் கொண்டிருக்கிறார். ஈஸ்வரி தூங்க செல்வதாக கூறிய நிலையிலும் அவரை தூங்க விடாமல் தொடர்ந்து தன்னுடைய பேரன், பேத்தி, பாக்கியா உள்ளிட்ட அனைவருடனும் பேசிக் கொண்டிருக்கிறார். மனது நிறைந்துள்ளதாகவும் அவ்வப்போது கூறுகிறார். தனக்கு மனது சந்தோஷமாக உள்ளதால் தூக்கம் வரவில்லை என்றும் கூறுகிறார். தொடர்ந்து செல்வியிடமும் பாக்கியாவின் அனைத்து செயல்பாடுகளிலும் உடனிருக்குமாறு நெகிழ்ச்சியுடன் பேசுகிறார்.

பாக்கியாவிடம் உருக்கம்: இதையடுத்து பாக்கியாவிடம் பேசும் ராமமூர்த்தி, பாக்கியா எப்போதும் மற்றவர்களுக்காக ஓடிக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் தன்னுடைய வாழ்க்கையையும் வாழ வேண்டும் என்றும் கூறுகிறார். பாக்கியா மிகவும் நல்லவர் என்று கூறும் ராமமூர்த்தி, கோபிக்கு அவரை திருமணம் செய்து வைத்து அவரது வாழ்க்கையை தான் பாழாக்கி விட்டதாகவும், மகளாகவே நினைத்து வேறு ஒருவருக்கு பாக்கியாவை தான் திருமணம் செய்து வைக்க தவறிவிட்டதாகவும் தன்னுடைய வருத்தத்தை கூறுகிறார். பாக்கியா அவரை சமாதானப்படுத்தி தூங்க செல்ல சொல்கிறார். இதனிடையே, தூங்கிக் கொண்டிருக்கும் அவருக்கு மாரடைப்பு வருவதாக இன்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











