அனல் கக்கும் ஈஸ்வரி.. மல்லுகட்டும் கமலா -ராதிகா.. வீட்டைவிட்டு வெளியேற்றக்கூறும் ஈஸ்வரி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை தொடர்ந்து கவரும் வகையில் அமைந்திருந்தது. தொடர்ந்து பாக்கியலட்சுமி தொடர்பான காட்சிகளை ஒளிபரப்பி வந்த இந்த சீரியலில் தற்போது ஈஸ்வரி மற்றும் ராதிகாவின் அம்மா கமலா இருவரும் மல்லு கட்டுவது குறித்த காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்த காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தாலும் தொடர்ந்து திரும்பத் திரும்ப ஒரே காட்சிகளாக காணப்படுவது ரசிகர்களை கடுப்பேற்றவே செய்கிறது. இருந்த போதிலும் கடந்த டிஆர்பியில் இந்த சீரியல் அதிகமான புள்ளிகளை பெற்ற சூழலில் இந்த வாரமும் டிஆர்பியில் சிறப்பாகவே அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் பரபரப்பான காட்சிகளுடன் அமைந்திருந்தது. இந்த எபிசோடில் அடுத்தடுத்து ஈஸ்வரி மற்றும் ராதிகாவின் அம்மா கமலாவிற்கு இடையில் பிரச்சினைகள் வெடித்ததை பார்க்க முடிந்தது. ஈஸ்வரியை பழிவாங்கும் நோக்கத்தில் அவரிடம் காபியை கொடுத்துவிட்டு, அவர் பிடிக்கவில்லை என்று கூற, அதை தட்டியும் விடுகிறார் கமலா. இதனால் தன்னுடைய மகன் கோபியை உடனடியாக அலுவலகத்தில் இருந்து அழைத்து பஞ்சாயத்து செய்கிறார் ஈஸ்வரி. ஏற்கனவே அலுவலகத்தில் சரியான நேரத்தில் உணவு சப்ளை செய்ய முடியாமல் பல்வேறு விஷயங்களை சமாளித்து வரும் கோபிக்கு அவர் உடனடியாக அழைத்து அழைத்தது மேலும் பிரச்சினையை ஏற்படுத்துகிறது.
சமாதான முயற்சியில் கோபி: இருந்தபோதிலும் வீட்டிற்கு வரும் கோபி, தன்னுடைய அம்மாவிற்கும் கமலாவிற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைக்க நினைக்கிறார். ஆனால் அவர்கள் இருவரும் தொடர்ந்து எலியும் பூனையுமாக சண்டையிடுவதை பார்த்து கோபிக்கு மேலும் மன உளைச்சல் ஏற்படுகிறது. ராதிகாவும் தன்னுடைய அம்மாவிற்கு சப்போர்ட் செய்து பேசுவதை பார்த்த கோபி, உடனடியாக தன்னுடைய அம்மா ஈஸ்வரியை அழைத்துக் கொண்டு தன்னுடைய கிளவுட் கிச்சனுக்கு கிளம்புகிறார். அங்கு கோபி தன்னுடைய வேலைகளை அடுத்தடுத்து சமாளிக்கும் சூழலில் அதுவரை ஈஸ்வரி அங்கேயே அமர்ந்து கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஈஸ்வரியை வம்பிழுக்கும் கமலா: ஈஸ்வரிக்கு மூட்டு வலி இருக்கும் சூழலில் அவரால் தொடர்ந்து ஒரு இடத்தில் உட்கார முடியவில்லை என்பதையும் அவர் தன்னுடைய மகனிடம் கூறுகிறார். இதையடுத்து அவசர அவசரமாக தன்னுடைய வேலைகளை முடிக்கும் கோபி தன்னுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். வீட்டுக்கு வந்ததும் பிரச்சனைகள் ஓயும் என்று நினைத்து கோபி பிரஷ் ஆகிவிட்டு வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். ஆனால் கமலாவோ மீண்டும் ஈஸ்வரியை வம்புக்கிழுக்கிறார். ஸ்கூல் பிள்ளை போல தன்னுடைய மகனுடன் கிளவுட் கிச்சனுக்கு சென்றாரே திரும்பி ஏன் வந்தார் என்பது போல கமலா பேச தொடர்ந்து அவரிடம் ஆத்திரப்படுகிறார் ஈஸ்வரி.
ராதிகாவிடம் அனல் கக்கும் ஈஸ்வரி: தான் ஒன்றும் முன்னதாக திருமணமான மகளுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்கவில்லை என்பதாக ஈஸ்வரி பேச, இதனால் கடுப்பாகும் கமலா மற்றும் ராதிகா இருவரும் மீண்டும் சண்டைக்கு தயாராகின்றனர். உடனடியாக அங்குவரும் கோபி, தன்னுடைய அம்மாவை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். இதையடுத்து ராதிகாவை அந்த வீட்டை விட்டு வெளியேற்றுமாறு ஆத்திரத்துடன் ஈஸ்வரி கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது. இதையடுத்து அது தன்னுடைய வீடு என்று ராதிகா கூற, இதனால் ஈஸ்வரியின் கோபம் மேலும் அதிகரிக்கிறது.
உடல்நிலை பாதித்த தாத்தா: இந்நிலையில் தாத்தாவிற்கு மாத்திரை கொடுக்காமல் ஜெனி தூங்கியதால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. இதையடுத்து அங்குவரும் பாக்கியா, எழில் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். இதனால் அவர் உடல்நிலை சரியாகிறது. இந்நிலையில் தாத்தாவின் இந்த நிலைக்கு தான் தான் காரணம் என்று ஜெனி தொடர்ந்து கண்கலங்கி செழியனிடம் புலம்புகிறார். இதனிடையே அங்கு வரும் பாக்கியா ஜெனியை சமாதானப்படுத்துவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











