Baakiyalakshmi serial: எல்லாரையும் விட்டு நான் போறேன்.. இனியா எடுத்த அதிரடி முடிவு!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகள் காணப்பட்டன. கல்லூரி முதல்வர் மற்றும் தன்னுடைய குடும்பத்தினர் தன்னை அவமானப்படுத்திய நிலையில் அது குறித்து ராதிகாவிடம் பேசி அவரின் ஆத்திரத்திற்கும் உள்ளாகிறார் கோபி. இந்நிலையில் கிளவுட் கிச்சனுக்கு வரும் செந்தில், கோபியை சமாதானப்படுத்துவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
இனியாவின் பிரச்சினைகளால் அடுத்தடுத்து பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் மிகுந்த அலைகழிப்பிற்கு உள்ளான சூழலில் ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி இருவரும் கோபி குறித்து மிகுந்த ஆத்திரமடைவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில் இனியாவும் அடுத்த பிரச்சனைக்கு தயாராவதாக அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகளுடன் காணப்பட்டது. தான் கல்லூரி முதல்வர் மற்றும் தன்னுடைய குடும்பத்தினரிடம் பட்ட அவமானத்தை மிகுந்த மன உளைச்சலுடன் ராதிகாவிடம் பேசுகிறார் கோபி. ஆனால் ராதிகாவோ தன்னையும் தன்னுடைய மகள் மயூவையும் குறித்த எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் கோபி தொடர்ந்து தன்னுடைய அப்பா அம்மா மற்றும் குழந்தைகள் குறித்தே யோசிப்பதாகவும் தனக்கு எந்த விதமான அங்கீகாரமும் அவர் தரவில்லை என்றும் அவரை திருமணம் செய்ததால் தன்னுடைய வாழ்க்கை முற்றிலும் மோசமாகியுள்ளதாகவும் கூறுகிறார்.
புலம்பும் கோபி: இந்நிலையில் தன்னுடைய கிளவுட் கிச்சனில் இது குறித்து யோசித்து கொண்டு உட்கார்ந்து இருக்கிறார் கோபி. அப்போது அங்கு வரும் அவருடைய நண்பர் செந்தில் அவருக்கு சமாதானம் கூறுகிறார். அவருடைய கிளவுட் கிச்சன் சென்னையின் அடையாளமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பேப்பரில் இது குறித்து செய்திகள் வந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டுகிறார். ஆனாலும் இதை கொண்டாடும் மனநிலையில் தான் இல்லை என்று கோபி கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து தன்னுடைய அப்பா அம்மா மற்றும் மகன்கள் என அனைவரும் தன்னை வெறுத்து ஒதுக்கி விட்டதாகவும் அவர் வருத்தப்படுகிறார்.

ராமமூர்த்தி -ஈஸ்வரி வேதனை: அவர்களுக்கு தான் துரோகம் செய்த நிலையில் அவர்களின் மனநிலை சரியானது என்று கூறும் கோபி, ஆனால் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட ராதிகாவும் தன்னை வெறுத்து விட்டதாகவும் கூறி தன்னுடைய கவலையை செந்திலிடம் பகிர்ந்து கொள்கிறார். இதையடுத்து செந்தில் கோபிக்கு சமாதானம் கூறி தன்னுடைய குடும்பத்தை யோசித்து தன்னுடைய முந்தைய பிசினஸை கைவிட்டதை போல தற்போது கிளவுட் கிச்சனையும் அதேபோல கைநழுவ விட்டு விட வேண்டாம் என்று செந்தில் கூறுவதாக அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன. இந்நிலையில் இனியாவை கல்லூரியில் இருந்து அழைத்துவரும் ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி கால் வலி உள்ளிட்டவற்றால் மிகவும் வேதனை படுவதாக காணப்படுகிறது.
பாக்கியா கோபம்: ஈஸ்வரிக்கு காலில் தைலம் தடவி விட்டு அவரை ரூமில் சென்று ரெஸ்ட் எடுக்க சொல்கிறார் பாக்கியா. தொடர்ந்து இனியா பாக்கியாவிடம் நடந்த அனைத்திற்கும் மன்னிப்பு கேட்கிறார். இதையடுத்து பேசும் பாக்கியா, ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி இருவரும் வேண்டிய அளவிற்கு உழைத்து விட்டதாகவும் தற்போது அவர்கள் ஓய்வெடுக்க வேண்டிய சூழலில் இனியாவிற்காக ஓடியாடுவதாகவும் கோபத்துடன் பேசுகிறார். இந்நிலையில் இரவு தூங்காமல் ராமமூர்த்தி அமர்ந்திருப்பதை பார்த்து என்ன ஆயிற்று என்று ஈஸ்வரி கேட்க, தனக்கு உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மனதில் தான் பிரச்சனை என்றும் கூறுகிறார் ராமமூர்த்தி.

ராமமூர்த்தி ஆத்திரம்: இதையடுத்து இனியாவின் திருமணம் உள்ளிட்டவற்றை ஈஸ்வரி பேசுகிறார். முன்னதாக கோபி குழந்தைகளின் படிப்பு, வீட்டு நிர்வாகம் உள்ளிட்டவற்றை கவனித்துக் கொண்டபோது பிரச்சினைகள் இல்லாமல் இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறார். அவர் மறு திருமணம் செய்து கொண்டு சென்றவுடன் தான் அனைத்து சுமைகளும் பாக்கியா தலையில் வந்து விழுந்ததாகவும் கூறுகிறார். இதைக் கேட்கும் ராமமூர்த்தி மிகுந்த ஆத்திரத்துடன் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கோபி தான் காரணம் என்றும் தான் இறந்தாலும் அவன் தன்னை வந்து பார்க்க கூடாது என்றும் தனக்கு கொள்ளி வைக்க கூடாது என்றும் ஆத்திரத்துடன் பேசுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

இனியாவின் முடிவு: இந்நிலையில் பாக்கியா மற்றும் இனியா தூங்கிக் கொண்டிருக்க, இனியா தூக்கம் வராமல் நடந்த விஷயங்கள் அனைத்தையும் நினைத்து அழுது கொண்டிருக்கிறார். தன்னுடைய அம்மாவிற்கு தான் தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சினைகளை ஏற்படுத்தியது குறித்து வருத்தத்துடன் அழுது கொண்டிருக்கும் இனியா தான் இனிமேல் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று தனக்குள் பேசிக் கொள்கிறார். தொடர்ந்து அவர் கடிதம் எழுதுவதாகவும் இன்றைய எபிசோடு காணப்பட்டது. அடுத்தடுத்த பிரச்சினைகளால் குடும்பத்தினரை அழைக்கழித்து வரும் இனியா தற்போது அடுத்த பிரச்சனைக்கு தயாராவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











