Baakiyalakshmi serial: 27 வருஷமா அம்மாவை பாக்கியா எப்படித்தான் சமாளித்தாளோ.. கோபி ஆச்சர்யம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக 1100க்கும் மேற்பட்ட எபிசோட்களை தாண்டி தன்னுடைய ஒளிபரப்பை தொடர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் கோபி, பாக்கியா, ராதிகா, ஈஸ்வரி என முன்னணி கேரக்டர்களை மையமாகக் கொண்டு அடுத்தடுத்த எபிசோட்களை சுவாரசியமாக கொடுத்து வருகிறார் இயக்குனர்.

ஜெனி மற்றும் செழியன் இடையில் தொடர்ந்து பிரச்சினைகள் காணப்படும் சூழலில் இன்றைய தினம் ஜெனியை இரவு டின்னருக்கு வெளியில் அழைத்து செல்கிறார் செழியன். இதனிடையே தன்னுடைய அம்மாவிற்கும் மாமியாருக்கும் இடையில் அடுத்தடுத்து சண்டை வரும் சூழலில் கடந்த 27 ஆண்டுகளாக தன்னுடைய அம்மாவை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பாக்கியா எப்படி சமாளித்தார் என்று கோபி தனக்குத்தானே ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Television Baakiyalakshmi serial Vijay tv

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் சிறப்பாகவே அமைந்திருந்தது. கல்லூரியில் தன்னுடைய ப்ராஜெக்ட்டை சமர்ப்பிக்க இன்னும் ஒரு நாளே இருக்கும் சூழலில் இனியா மிகவும் பயத்துடன் காணப்படுகிறார். இந்நிலையில் அங்கு வரும் பழனிச்சாமியின் அக்கா மகன் விமல், இனியாவை சமாதானப்படுத்தி அவருக்காக தான் செய்து முடித்த ப்ராஜெக்ட்டையும் கொடுக்கிறார். ஒரே நாளில் எப்படி அதை செய்தாய் என்று கேட்கிறார் இனியா. முன்னதாக கால் செய்த போது இனியா புலம்பியதையடுத்து தன்னுடைய நண்பனின் உதவியுடன் இதை செய்து முடித்ததாக விமல் கூறுகிறார்.

இனியா -விமல் நட்பு: இதையடுத்து இனியா மற்றும் விமல் பேசி சிரித்து கொண்டிருக்க அங்கு வரும் பாக்கியா தன்னுடைய மகள் விமலுடன் பேசி சிரிப்பதை பார்க்கிறார். இதையடுத்து விமல் ஏன் அங்கு வந்தார் என்று பாக்கியா கேட்க இனியாவிற்கு ப்ராஜெக்ட்டில் சந்தேகம் இருந்ததாகவும் அதை தீர்த்து வைத்ததாகவும் விமல் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. அவர் கிளம்பியதும் தான் விமலுடன் சாதாரணமாக தான் பழகுவதாகவும் பாக்கியா எதையும் யோசிக்க வேண்டாம் என்றும் இனியா தெளிவு படுத்துகிறார். இதையடுத்து வீட்டில் அனைவரும் பேசி சிரித்துக்கொண்டிருக்க அங்கு வரும் செழியன், தானும் ஜெனியும் இரவு வெளியில் டின்னருக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்.

ஜெனி -செழியன் டின்னர் பார்ட்டி: இதையடுத்து கேன்டில் லைட் டின்னருக்கு ஜெனியை அழைத்து செல்லும் செழியன், முன்னதாகவே டேபிளை புக் செய்தது குறித்து ஜெனி ஆச்சரியப்படுகிறார். தொடர்ந்து ஜெனிக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்கிறார். இதையெல்லாம் நீ இன்னமும் ஞாபகம் வைத்திருக்கிறாயா என்று ஜெனி மேலும் தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்துவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது. முன்னதாக எப்போதும் போல ஈஸ்வரி மற்றும் கமலா இருவரும் வீட்டில் சண்டை இடுவதாக காணப்படுகிறது. ஈஸ்வரிக்கும் சேர்த்து இரவு உணவை கமலா செய்திருந்த நிலையில் கோபி தன்னுடைய கிளவுட் கிச்சனிலிருந்து தனக்கும் தன்னுடைய அம்மாவிற்கும் உணவு எடுத்து வருகிறார்.

கோபி ஆச்சர்யம்: இதனால் ராதிகா மிகுந்த கடுப்பாகிறார். கமலாவோ அனைவருக்கும் சேர்த்து உணவு சமைத்து வைத்த தான் பைத்தியக்காரியா என்று கேள்வி எழுப்புகிறார். அவர் பைத்தியக்காரி தான் என்பதில் என்ன சந்தேகம் என்று ஈஸ்வரியும் கலாய்ப்பதாக காணப்பட்டது. இந்நிலையில் ராதிகா இரண்டு நாளிலேயே ஈஸ்வரியை சமாளிக்க முடியாமல் தான் முழிக்கும் நிலையில் பாக்கியா இத்தனை ஆண்டுகளாக எப்படித்தான் அவரை சமாளித்தாரோ என்று கோபியிடம் கேள்வி எழுப்புகிறார். இந்நிலையில் கோபியும் இதே விஷயத்தை யோசிக்கிறார். கடந்த இரு நாட்களிலேயே கமலாவிற்கும் ஈஸ்வரிக்கும் அடுத்தடுத்து சண்டை வரும் சூழலில் பாக்கியா ஈஸ்வரியை கடந்த 27 ஆண்டுகளாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் எப்படி சமாளித்தார் என்று தனக்குத்தானே கோபி கேள்வி எழுப்புவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X