Baakiyalakshmi: மாலினி நினைப்பில்தான் ராகினி பேரை சொன்னியா.. செழியனை வறுத்தெடுக்கும் ஜெனி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல் வரிசையில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் தன்னுடைய மகள் இனியாவை வெளியில் அழைத்துச் செல்லும் கோபி அவரிடம் தன்னுடைய குழந்தை குறித்த விஷயத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் தொடர்ந்து இந்த விஷயத்தில் இனியா ஆர்வம் இல்லாததை வெளிப்படுத்துகிறார்.

இதனிடையே கோபி போன் பேசுவதற்காக வெளியில் சென்ற நிலையில் அங்கு வரும் பழனிச்சாமியின் அக்கா மகன் விமல், இனியாவிடம் பேச முற்படுகிறார். இதையடுத்து அங்கு வரும் கோபிக்கும் விமலிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகின்றன. தொடர்ந்து கோபியை டாடி என்று கூப்பிடும் விமல், ஒரு கட்டத்தில் அப்பா என்றும் தொடர்ந்து மாமா என்றும் கூப்பிட்டு கோபியை கடுப்பேற்றுகிறார்.

Vijay TV s Baakiyalakshmi serial today 3rd May 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல் வரிசையில் தொடர்ந்து இரண்டாவது இடத்தை பிடித்து வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி, பாக்கியா, ராதிகா உள்ளிட்ட கேரக்டர்களை வைத்து அடுத்தடுத்த எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் தன்னுடைய மகள் இனியாவை ரெஸ்டாரன்ட்டிற்கு அழைத்து போகிறார் கோபி. அங்கே சிறிது நேரம் அவரை தனியாக விட்டுவிட்டு போன் பேச செல்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் பழனிச்சாமியின் அக்கா மகன் விமல் இனியாவுடன் பேச முற்படுகிறார்.

விமலால் கடுப்பாகும் கோபி: அப்போது அங்கு வரும் கோபி, விமலை பார்த்து மிகவும் டென்ஷன் ஆகிறார். ஒரு பெண் தனியாக இருந்தால் பொறுக்காதே என்று பல்வேறு விதமாக கேள்விகளை எழுப்புகிறார். தான் இனியாவிற்கு தெரிந்த பையன் தான் என்று விமல் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசுகிறார். ஆனாலும் கோபிக்கு அவரை பிடிக்காமல் போகிறது. அவருடைய அந்த பேசும் விதத்தை இதற்கு முன் தான் யாரிடமோ கேட்டிருக்கிறோமே என்று கோபி கூறுகிறார். ஆனாலும் பழனிச்சாமி அவரது ஞாபகத்திற்கு வரவில்லை. இனியாகவும் விமல் பழனிச்சாமியின் அக்கா மகன் என்பதை வெளிப்படுத்தவில்லை.

செழியன் மகள் பெயர்சூட்டு விழா: இதனிடையே, முதலில் கோபியை இனியா கூப்பிடுவது போலவே டாடி என்று கூப்பிடும் விமல், தொடர்ந்து அடுத்தடுத்த உரையாடல்களில் அப்பா என்றும் மாமா என்றும் கூப்பிடுகிறார். இதனால் கோபி மேலும் கடுப்பாவதை பார்க்க முடிகிறது. ஒரு வழியாக விமலை அங்கிருந்து அனுப்பி வைக்கும் கோபி, அவனுடன் தொடர்ந்து பேசி பழக வேண்டாம் என்று இனியாவிற்கு அட்வைஸ் செய்கிறார். இதனிடையே அடுத்த நாள் செழியனின் மகளுக்கு பெயர் சூட்டும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் வீட்டை டெகரேட் செய்வதற்காக பலூன்கள் உள்ளிட்ட பல விஷயங்களை எழில் வாங்கி வருகிறார்.

செழியனை வறுத்தெடுக்கும் ராகினி: குடும்பத்தினருடன் இணைந்து அனைவரும் இந்த டெக்கரேஷன்களில் ஈடுபடுகின்றனர். பலூனை ஊதி ஆங்காங்கே செட் செய்கின்றனர். இதனிடையே குழந்தைக்கு பெயர் சூட்டும் பொறுப்பை ஈஸ்வரியிடம் கொடுத்துள்ளதால் அவர் என்ன பெயர் வைப்பார் என்று குடும்பத்தினர் அனைவரும் மாறி மாறி பேசுகின்றனர். ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான பெயர்களை கூறுகின்றனர். அப்போது செழியன், ராகினி என்ற பெயரை கூறுகிறார். இதனால் ஜெனியின் முகம் மாறுகிறது. இதையடுத்து ரூமிற்குள் தனியாக இருக்கும் போது மாலினி என்ற பெயரை வைத்துதானே ராகினி என்ற பெயரை கூறினாய் என்று செழியனிடம் கேட்கிறார் ஜெனி.

சரணடையும் செழியன்: இதனால் செய்வதறியாமல் திகைக்கும் செழியன் அம்மா, தாயே என்று ஜெனியிடம் சரணடைவதை பார்க்க முடிந்தது. இதனிடையே எழிலிடம் பேசும் அமிர்தா ஜெனியின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா வைத்துள்ளதை அடுத்து தனக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் தன்னுடைய குழந்தைக்கு இதுபோன்று பெயர் சூட்டு விழா நடத்த வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக கூறுகிறார். இதையடுத்து அமிர்தாவை சமாதானப்படுத்தும் எழில், தனக்கு சில கமிட்மெண்ட்ஸ் இருப்பதாகவும் அதை நிறைவு செய்துவிட்டு தான், தான் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து யோசிப்பேன் என்றும் மீண்டும் கூறுகிறார். இவ்வாறாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X