Baakiyalakshmi: லீவ் போட்ட செஃப்.. முழி பிதுங்கிய கோபி.. பாக்கியா சொன்னது நடந்துடுச்சே!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆயிரம் எபிசோட்களை கடந்த போதிலும் இந்த சீரியல் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக தொடர்ந்து விஜய் டிவியின் இரண்டாவது இடத்தில் மாஸ் காட்டி வருகிறது. இந்த சீரியலில் பாக்கியா, கோபி, ராதிகா என முன்னணி கேரக்டர்களை கொண்டு சீரியல் வெற்றி நடைப்போட்டு வருகிறது. இந்த சீரியலில் மசாலா பிசினஸில் தன்னுடைய கேரியரை துவங்கிய பாக்கியா, தொடர்ந்து கேன்டீன் காண்ட்ராக்ட், சமையல் காண்ட்ராக்ட், என மாஸ் காட்டி தற்போது ரெஸ்டாரெண்டை துவங்கி உள்ளார்.
இந்த ரெஸ்டாரெண்டிலும் பல பிரச்சனைகளை அவர் சந்தித்து வருகிறார். தொடர்ந்து அதிகமான வாடிக்கையாளர்கள் ரெஸ்டாரெண்டிற்கு வராத சூழல் காணப்படுகிறது. இதற்கான தீர்வில் தற்போது பாக்கியா, பழனிச்சாமி, எழில் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டு பாக்கியாவின் ரெஸ்டாரெண்டிற்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மிகவும் சிறப்பாக செயல்பட்டுவரும் கோபியின் கிளவுட் கிச்சனில் இன்றைய தினம் மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. செஃப் வராததால், சமையல் எதுவும் நடைபெறாமல் கோபி முழி பிதுங்கியதை பார்க்க முடிந்தது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியல் ஆயிரம் எபிசோட்கள் வெற்றிகரமாக கடந்த நிலையில். விரைவில் இந்த சீரியல் நிறைவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதையொட்டி தற்போது எழில் மற்றும் செழியன் வாழ்க்கை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் எழிலின் மனைவி அமிர்தாவிடம் ஈஸ்வரி குழந்தை குறித்து கேள்வி எழுப்ப, அவர் கதிரிடம் இது குறித்து அழுகையுடன் பேசுகிறார். குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அமிர்தா கூறும் சூழலில் அதற்கு தற்போது அவசியம் இல்லை என்று அவரை தேற்றுகிறார் எழில்.
பாட்டியிடம் ஆத்திரப்படும் எழில்: இந்நிலையில் இது குறித்து தன்னுடைய பாட்டி ஈஸ்வரியிடம் எழில் கோபத்துடன் பேசுகிறார். தங்களுக்கு குழந்தை வேண்டும் என்றால் தாங்கள் அதுகுறித்து தீர்மானம் செய்வோம் என்றும் இந்த விஷயத்தில் தன்னுடைய மனைவியை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் எழில் ஈஸ்வரியிடம் கூறுகிறார். இந்நிலையில் இது குறித்து அமிர்தாவிடம் மீண்டும் ஆத்திரத்துடன் பேச ஈஸ்வரி முயல்கிறார். அப்போது அங்கு இருக்கும் பாக்கியாவிடம் அவர் இது குறித்து பேச, எந்த பிரச்சினை வந்தாலும் தன்னுடைய மனைவியுடன் நிற்கும் வகையில் தான் தன்னுடைய மகனை வளர்த்துள்ளதாகவும் இது குறித்து தான் சந்தோஷம் அடைவதாகவும் பாக்கியா உறுதியுடன் பதிலளிக்கிறார்.
விடுப்பெடுத்த செஃப்: இதனால் கடுப்பாகும் ஈஸ்வரி அங்கிருந்து செல்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து கோபியின் கிளவுட் கிச்சனில் இன்றைய தினம் தன்னுடைய மனைவியின் உடல்நிலை காரணமாக செஃப் விடுப்பு எடுக்கிறார். இதனால் அங்கு சமையல் வேலைகள் எதுவும் நடக்காமல் முடங்குகிறது. செஃப்பிற்கு அசிஸ்டெண்ட்கள் இருந்த போதிலும் அவர் சொல்லும் வேலைகளை மட்டுமே அவரது அளவுகளின்படி தாங்கள் செய்வதாகவும் தங்களுக்கு சுயமாக சமைக்கும் அளவிற்கு திறன் கிடையாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதனால் டேக் அவே மட்டும் இல்லாமல் ராதிகாவின் அலுவலகத்திற்கு கொடுக்க வேண்டிய மதிய உணவும் பாதிக்கப்படுகிறது.

பார்க்கிங் பிரச்சினைக்கு தீர்வு: இதனால் கோபி முழி பிதுங்குவதாகவும் இன்றைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது. முன்னதாக பாக்கியாவின் ரெஸ்டாரெண்ட் குறித்து கோபி இழிவுபடுத்திய நிலையில் அப்போது பாக்கியா, கோபியின் கிளவுட் கிச்சனில் செஃப் ஒரு நாள் லீவ் போட்டாலும் கோபி செயலற்று போவார் என்று கூறிய நிலையில் தற்போது அது நடந்தேறியுள்ளது. இந்நிலையில் பாக்யாவின் ரெஸ்டாரெண்டில் காணப்படும் பார்க்கிங் பிரச்சனையை தீர்த்து வைக்கும் முயற்சியில் பழனிச்சாமி ஈடுபடுகிறார். பக்கத்தில் இருக்கும் ஒரு கிரவுண்டை அவர் வாடகைக்கு கேட்ட நிலையில் அந்த கிரவுண்டின் உரிமையாளர் முப்பது ஆயிரம் ரூபாய் மாத வாடகையாக கேட்கிறார்.
பாக்கியாவிற்கு தீர்வு கொடுத்த பழனிச்சாமி: ஆனால் அவரை பல வகையில் கன்வின்ஸ் செய்யும் பழனிச்சாமி, அந்த வாடகையை பத்தாயிரம் ரூபாயாக குறைக்கிறார். அவரது இந்த திறமையை பார்த்து எழில் மற்றும் பாக்கியா அதிசயிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து பார்க்கிங் பிரச்சினைக்கு இதன் மூலம் தீர்வு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல சமையலை கொடுத்தாலும் அமைச்சரை வைத்து துவங்கினாலும் பார்க்கிங் பிரச்சினையால் பாக்கியாவின் ரெஸ்டாரெண்டில் அதிகமான வாடிக்கையாளர்கள் வராத சூழல் இருந்தது. இந்நிலையில் இந்தப் பிரச்சினைக்கு பழனிச்சாமி தீர்வை கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











