Baakiyalakshmi: வாய் வண்டலூர் வரைக்கும் நீளுது.. பாக்கியா குறித்து அங்கலாய்த்த ஈஸ்வரி.. சிரித்த கோபி
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நிலை கொண்டு வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இதுவரை 1300 எபிசோட்களை ஒளிபரப்பியுள்ள இந்த தொடர் விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இதுகுறித்த எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடாமல் சீரியல் தொடர்ந்து ஒளிப்பரப்பாகி வருகிறது.
உடல்நிலை சரியில்லாத கோபியை காப்பாற்றி அவர் உயிர் பிழைக்க காரணமாக அமைகிறார் பாக்கியா. ஆனால் அவரை ராதிகாவுடன் அனுப்பாமல் வீட்டிற்கு ஈஸ்வரி அழைத்து வருகிறார். இதை எதிர்த்தாலும் ஈஸ்வரியின் அம்மா சென்டிமெண்டை தாங்காமல் அவர் தன்னுடைய வீட்டில் தங்க அனுமதிக்கிறார் பாக்கியா இதனிடையே ராதிகா மற்றும் மயூவையும் அங்கு தங்க அழைத்து வருகிறார் கோபி.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து பல ஆண்டுகளாக மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி தொடர். 1300 எபிசோட்களை தாண்டி இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வரும் சூழலில் இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக கடந்த சில மாதங்களாகவே கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்த கதைக்களத்தை களமிறக்கி வருகிறார் இயக்குநர். பாக்கியாவிற்கு தான் செய்த அநியாயங்களை இனியா மூலம் உணரும் கோபிக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது- அவரை காப்பாற்று உயிர் பிழைக்க காரணமாகிறார் பாக்கியா.
கோபத்தில் ஈஸ்வரி: இந்நிலையில் அவரது உடல்நலன் தேற வேண்டுமென்றால் அவரை தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி கோபியை பாக்கியா வீட்டிற்கு அழைத்து வருகிறார் ஈஸ்வரி. இதில் எந்தவிதமான உடன்பாடும் இல்லையென்றாலும் ஈஸ்வரிக்காக இதற்கு சம்மதிக்கிறார் பாக்கியா. ஒரு கட்டத்தில் ராதிகாவும் கோபியும் மீண்டும் இணையவும் காரணமாக அமைகிறார். கோபியை மீண்டும் பாக்கியாவுடன் இணைக்க முயற்சித்த ஈஸ்வரி இதனால் கடுப்பாகிறார். ராதிகாவையும் மயூவையும் கோபி மீண்டும் பாக்கியா வீட்டிற்கே அழைத்து வர, அவரது கோபம் மேலும் அதிகரிக்கிறது.
பணம் கேட்ட பாக்கியா: இந்நிலையில் கோபி, ராதிகா மற்றும் மயூ தன்னுடைய வீட்டில் தங்க வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும் என்று பாக்கியா கூறுகிறார். இதை ஏற்று கோபியும் பணத்தை கொடுக்க அதை எண்ணிப் பார்த்து வாங்கிக் கொள்கிறார் பாக்கியா. தொடர்ந்து மயூவை தன்னுடன் தூங்க வைக்கிறார். கோபியின் அறை சிறியதாக இருப்பதால் அவர் இவ்வாறு நடந்துக் கொள்ள மயூவிற்கு இதனால் போட்டி மற்றும் பொறாமை மனப்பான்மை ஏற்படுகிறது. மயூவை அவ்வாறு தங்க வைத்தது குறித்து தன்னுடைய கோபத்தை பாக்கியாவிடம் வெளிப்படுத்துகிறார். இதனிடையே வேலைக்கு செல்லும் அவசரத்தில் சிம்பிளாக சமையல் செய்துவிட்டு ராதிகா செல்கிறார்.
மலைப்பில் கோபி: இதனால் பாக்கியா சமைத்த உணவை கோபிக்கு கொடுக்க ஈஸ்வரி முயல்கிறார். ஆனால் ரெஸ்டாரெண்டிற்கு சென்றிருந்த பாக்கியா அந்த நேரத்திற்கு சரியாக வந்துவிட, வீட்டை பயன்படுத்திக் கொள்ளத்தான் தான் காசு வாங்குவதாகவும் தன்னுடைய சமையலை கோபி சாப்பிடக் கூடாது என்றும் கண்டிப்பாக கூறுகிறார். இதனால் கோபி மலைத்துப் போகிறார். ஒன்றுமே தெரியாமல் இருந்த பாக்கியாவா இது என்று கேள்வி எழுப்புகிறார். ஈஸ்வரியோ, தற்போதெல்லாம் தன்னுடைய வார்த்தைகளை பாக்கியா மதிப்பதே இல்லை என்றும் வாய் வண்டலூர் வரைக்கும் செல்வதாகவும் அங்கலாய்ப்புடன் கூறுகிறார். இதை கேட்டு கோபி சிரிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











