Baakiyalakshmi: வாழ்க்கையை காப்பாற்ற இதுதான் வழி.. போலீஸ் புகார் குறித்து ராதிகாவிற்கு கமலா சமாதானம்
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கட்டி போட்டது. ராதிகாவின் அம்மாவிடம் மீண்டும் கோபி சண்டையிடுகிறார். தன்னுடைய அம்மா ஈஸ்வரி குறித்து தொடர்ந்து பேசினால் கமலாவை கொன்று விடுவேன் என்றும் அவர் உடனடியாக வீட்டை விட்டு கிளம்ப வேண்டும் என்றும் கோபி எச்சரிக்கை விடுகிறார்.
இதனால் ஆத்திரமடையும் ராதிகாவின் அம்மா கமலா, போலீஸ் நிலையத்திற்கு சென்று கோபியின் அம்மா ஈஸ்வரிமீது புகார் அளிக்கிறார். அவர் தன்னுடைய மகள் ராதிகாவை கொலை செய்ய முயன்றதாகவும் இதனால் ராதிகாவின் கரு கலைந்ததாகவும் அவர் குற்றம் சாட்ட போலீசார் ஈஸ்வரியை தேடி வீட்டுக்கு வருகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி மீது கமலா கொலை குற்றம் சாட்டி புகார் கொடுத்த நிலையில் அது குறித்து விசாரித்து ஈஸ்வரியை கைது செய்ய போலீசார் பாக்கியா வீட்டுக்கு வருகின்றனர். அவர் வீட்டில் இல்லாதது குறித்து தெரிந்து கொண்டு தொடர்ந்து விசாரிக்கின்றனர். யார் கம்ப்ளைண்ட் கொடுத்தது என்று கேட்கும் செழியன், கமலாவின் பெயரை போலீசார் கூறியதும் அது யார் என்று கேட்பதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது. இந்நிலையில் செல்வி அது ராதிகாவின் அம்மா என்று கூறுவதாக காணப்பட்டது.
பாக்கியா அதிர்ச்சி: இந்நிலையில் கும்பகோணத்திற்கு சென்று ஈஸ்வரியை கைது செய்து சென்னை கொண்டுவர போலீஸ் அதிகாரி திட்டமிடுகிறார். ஆனால் மறுநாள் காலையில் ஈஸ்வரி வந்து விடுவார் என்று கூறும் செழியன் மற்றும் எழில், கும்பகோணம் சென்று கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றனர். இதையடுத்து மறுநாள் காலையில் தாங்கள் வந்து ஈஸ்வரியை கைது செய்வதாக கூறிவிட்டு போலீசார் செல்கின்றனர். இதனிடையே இந்த விஷயம் குறித்து பாக்கியாவிற்கு தெரியப்படுத்துகிறார் செழியன். இதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சியும் பதற்றமும் அடைகிறார்.
ராதிகா ஆத்திரம்: தன்னுடைய மாமியார். மாமனார் இனியா என மூவரும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும் பாக்கியா, அடுத்து என்ன நடக்கும் என்று தனக்குத்தானே கேட்டுக் கொள்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே அலுவலகத்தில் இருந்து வீடு வரும் ராதிகாவிடம் கோபி தன்னிடம் நடந்து கொண்ட விஷயத்தை கூறுகிறார் கமலா. தொடர்ந்து தன்னுடைய அம்மா குறித்து பேசினால் அவரை கொலை செய்து விடுவேன் என்று கோபி கூறியதை கமலா சொன்னதும் மிகுந்த ஆத்திரத்துக்கு உள்ளாகும் ராதிகா கோபிக்கு கால் செய்து அவரை உண்டு இல்லை என்று செய்து விடுகிறேன் என்று கூறுகிறார்.
ராதிகா அதிர்ச்சி: அவரை தடுக்கும் கமலா, தொடர்ந்து தான் காவல் நிலையத்தில் ஈஸ்வரி குறித்து புகார் அளித்ததையும் கூறுகிறார். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகும் ராதிகா, என்ன செய்திருக்கிறாய் என்று கமலாவிடம் கேட்பதாக காணப்பட்டது. இந்நிலையில் தான் எது செய்தாலும் ராதிகாவின் நல்லதுக்கு தான் செய்வேன் என்று கூறும் கமலா, ஈஸ்வரியை காவல் நிலையத்தில் புகார் செய்து வைத்தால் தான் கோபிக்கு தான் செய்த தவறு தெரியவரும் என்றும் சுட்டிக்காட்டுவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது. இந்நிலையில் இரவு முழுவதும் டிராவல் செய்து ஈஸ்வரி, பாக்கியா, இனியா மற்றும் ராமமூர்த்தி நால்வரும் வீடு வந்து சேர்கின்றனர்.
நடக்காமல் போன எழிலின் முயற்சி: நடந்த விஷயம் தெரியாமல் மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரி. இந்நிலையில் போலீஸ் அதிகாரி எழிலுக்கு கால் செய்து பாட்டி வந்து விட்டாரா என்று கேட்கிறார். வந்துவிட்டதாக அவர் கூற தான் இன்னும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வருவேன் என்று அவர் தெரிவிப்பதாக இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது. முன்னதாக வக்கீலை சந்தித்து எழில் மற்றும் செழியன் இருவரும் பேச கிளம்புவதாகவும் காணப்பட்டது. இந்த பிரச்சனைகளால் எழில் தயாரிப்பாளரிடம் கதை சொல்ல திட்டமிட்டிருந்தது நடக்காமல் போனதாகவும் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











