Baakiyalakshmi serial: சாரி பாஸ் முடியாது.. முகத்திலடித்தபடி பேசிய பாக்கியா.. அதிர்ந்த கோபி!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் அடுத்தடுத்து செழியன், கோபி, பாக்கியா உள்ளிட்டவர்களை மையமாக கொண்டு ஒளிபரப்பானது. ஜெனியை டின்னருக்கு அழைத்துச் சென்ற செழியனுக்கு, அதன் மூலம் மோசமான அனுபவமே கிடைக்கிறது. ஜெனியின் சந்தேகம் மேலும் அதிகரிக்க இந்த டின்னரும் காரணமாக அமைகிறது.
இதனிடையே தன்னுடைய அம்மா ஈஸ்வரியை வந்து அழைத்துச் செல்லுமாறு கோபி பாக்கியாவிடம் கேட்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து ஈஸ்வரிக்கும் கமலாவிற்கும் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் அதன்மூலம் ராதிகாவிடம் தான் திட்டும் அடியும் வாங்குவதாகவும் அவர் புலம்பி தள்ளுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் சிறப்பாகவே காணப்பட்டது. இன்றைய எபிசோடில் தன்னுடைய மனைவி ஜெனியை அழைத்துக்கொண்டு இரவு விருந்துக்கு ரெஸ்டாரண்ட்டிற்கு சென்றிருந்த செழியன், அவரை கவரும் வகையில் தன்னுடைய அடுத்தடுத்த நடவடிக்கைகளால் மாஸ் காட்டுகிறார். தொடர்ந்து ஜெனிக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து, அதை ஜெனிக்கு ஊட்டவும் செய்கிறார். இந்த விஷயங்களால் ஜெனி மிகவும் இம்ப்ரஸ் ஆன நிலையில் அங்கு வந்தது பிரச்சனை. செழியனின் அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஷில்பா என்பவர் அந்த ரெஸ்டாரண்டிற்கு தன்னுடைய நண்பர்களுடன் வந்த சூழலில் செழியனை பார்த்து விட்டு நலம் விசாரிக்கிறார்.
ஜெனி சந்தேகம்: தொடர்ந்து ஜெனி குறித்தும் பல விஷயங்களை கேட்கும் ஷில்பா, ஒரு கட்டத்தில் செழியனை பார்த்து மிகவும் ஹாண்ட்சம்மாக உள்ளதாக கூறிவிட்டு செல்கிறார். பதிலுக்கு செழியனும் அவரும் அழகாக இருப்பதாக கூறுகிறார். இதை பார்த்துக் கொண்டிருக்கும் ஜெனிக்கு மீண்டும் சந்தேகம் தலை தூக்குகிறது. ஷில்பா குறித்து பல விஷயங்களை கேட்கும் ஜெனி அந்த இரவு விருந்தை சுவாரஸ்யம் இல்லாமல் கழிக்கிறார். தொடர்ந்து மறுநாள் காலையில் செழியன் அலுவலகத்திற்கு கிளம்பும்போது எங்கே செல்கிறாய்? என்ன, ஏது என்று பல கேள்விகளை அடுக்கும் ஜெனி ஒரு கட்டத்தில் லைவ் லொகேஷனை அனுப்புமாறு செழியனிடம் கூறுகிறார்.
கோபி புலம்பல்: ஜெனியின் சந்தேகம் அதிகரிக்கும் நிலையில் இதனால் அதிர்ச்சிக்குள்ளாகும் செழியன், அதே வருத்தத்தில் கீழே ஹாலில் வந்து தன்னுடைய அம்மா மற்றும் தாத்தா முன்னிலையில் வருத்தமாக அமர்ந்திருப்பதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது. முன்னதாக தன்னுடைய மாமனாருடன் வாக்கிங் செல்கிறார் பாக்கியா. அங்கு வாக்கிங் வரும் கோபி, பாக்கியா தனியாக இருக்கும் சூழலில் அவரிடம் சென்று தன்னுடைய அம்மாவிற்கும் மாமியாருக்கும் தொடர்ந்து சண்டை வருவதாகவும் இதையடுத்து ராதிகா தன்னை பிழிந்து எடுப்பதாகவும் நிம்மதியே இல்லாமல் நாட்கள் கழிவதாகவும் தூங்கி பல நாட்கள் ஆனதாகவும் புலம்பித் தீர்க்கிறார்.
மறுக்கும் பாக்கியா: இதையெல்லாம் அக்கறையுடன் கேட்டுக்கொள்ளும் பாக்கியாவிடம் இந்த விஷயத்தில் பாக்கியா தனக்கு உதவி செய்ய முடியும் என்று கூறும் கோபி, தான் வற்புறுத்தி அழைத்துச் சென்ற அம்மாவை தானே திருப்பி அனுப்புவது சரியாக இருக்காது என்றும் அதனால் பாக்கியா வந்து தன்னுடைய அம்மா ஈஸ்வரியை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் பாக்யா கூப்பிட்டால் மட்டுமே ஈஸ்வரி வருவார் என்றும் கூறுகிறார். ஆனால் இதற்கு பாக்கியா மறுப்பதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.
பாக்கியா அட்வைஸ்: சாரி பாஸ், உங்க பிரச்சனையை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் என்று அழைத்துச் சென்ற நிலையில் அதை சிறப்பாக செயல்படுத்துங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து பாக்கியா நகர்வதாகவும் காணப்பட்டது. தொடர்ந்து அக்கறையுடன் கேட்டுக்கொண்ட பாக்கியா இவ்வாறு நடந்து கொண்டது குறித்து கோபி புலம்பி தீர்ப்பதாகவும் இன்றைய எபிசோடு காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











