Baakiyalakshmi serial: செழியன் குழந்தை எங்க வீட்டு வாரிசு.. பெயர் சூட்டு விழாவில் வெடித்த சண்டை!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் அமைந்திருந்தது. இன்றைய தினம் செழியன் மற்றும் ஜெனியின் மகளுக்கு பெயர் சூட்டும் விழாவிற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டுள்ளன. ஜெனியின் அப்பா ஜோசப் மற்றும் அம்மா மரியம் உள்ளிட்ட உறவினர்களும் பாக்கியா வீட்டிற்கு வருகின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே தங்கள் வீட்டில் இருக்கும்போது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்தப்பட்ட நிலையில் குழந்தையை ஈஸ்வரி மற்றும் செழியன் இருவரும் கடத்தி சென்றதை சுட்டிக்காட்டும் ஜோசப், தற்போது எதற்காக குழந்தைக்கு இரண்டாவது முறையாக பெயர் வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். இதனால் பிரச்சனை ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் பாக்கியா உள்ளிட்டவர்கள் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

Vijay TV s Baakiyalakshmi serial today 4th May 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்யும்வகையில் அமைந்திருந்தது. இன்றைய தினம் செழியனின் மகளுக்கு பெயர் சூட்டும் விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டிய விழா ஏற்பாடுகள் மற்றும் சண்டை சச்சரவுகள் உள்ளிட்டவை இன்றைய தினம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக அமிர்தா எழிலிடம் தன்னுடைய குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையை வெளிப்படுத்த அதை அவருக்கு தெளிவுபடுத்துகிறார் எழில். எழிலின் பக்குவம் இந்த இடத்தில் வெளிப்படுகிறது.

அமிர்தாவிடம் எழில் விளக்கம்: அமிர்தாவின் குழந்தை நிலாவை தங்களுடைய மகளாகவே மற்றவர்கள் பார்த்து வருவதாகவும் ஆனால் தங்களுக்கு என்று ஒரு குழந்தை பிறந்தால் இந்த மனநிலை மற்றவர்களிடம் கண்டிப்பாக மாறும் என்றும் எழில் தெளிவுபடுத்துகிறார். இதையெல்லாம் தங்களால் சமாளிக்க முடியும் என்று தோன்றும் போது அடுத்த குழந்தை குறித்து யோசிக்கலாம் என்றும் எழில் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே ராதிகாவிடம் பேசும் கோபி, செழியன் குழந்தை ஃபங்ஷனையொட்டி தான் ராதிகாவின் கர்ப்பம் குறித்து தற்போது தன்னுடைய அம்மாவிடம் பேசவில்லை என்றும் தனக்கு ஒரு நாள் டைம் கொடுத்தால் இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் தான் ராதிகா கர்ப்பம் குறித்து குடும்பத்தினரிடம் பேசுவதாகவும் கூறுகிறார்.

விழா ஏற்பாடுகள்: மேலும் நாளைய தினம் நிகழ்ச்சி நடக்கும் போது மற்றவர்கள் முன்னிலையில் ராதிகா வாந்தி எடுக்காமல் இருக்க வேண்டும் என்றும் கேட்கிறார். இதையடுத்து ராதிகா கோபப்படுகிறார். தான் வேண்டுமென்று இந்த விஷயத்தை செய்யவில்லை என்றும் அவர் கூறுகிறார். இதையடுத்து அவரிடம் இது குறித்து தொடர்ந்து பேச முடியாமல் தவிக்கிறார் கோபி. இந்நிலையில் இரவு அனைவரையும் அனுப்பிவிட்டு பாக்கியா மட்டும் தனியாக அமர்ந்து மறுநாள் நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார். தொடர்ந்து ஸ்வீட் செய்து வைக்கிறார். எழில் மற்றும் அமிர்தா பாக்கியாவிற்கு உதவி செய்ய வருகின்றனர்.

பாக்கியா கேள்வி: அப்போது அவர்களிடம் பேசும் பாக்கியா, கோபி உடல்நிலை சரியான நிலையிலும் ஏன் இந்த வீட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். மறுநாள் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அனைவரும் தன்னை கோபியின் முன்னாள் மனைவியாகவே பார்ப்பார்கள் என்றும் அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறுகிறார். எழிலும் இப்போதாவது இதுகுறித்து யோசித்தீர்களே என்று தன்னுடைய அம்மா பாக்கியாவிடம் கூறுகிறார். இந்நிலையில் மறுநாள் காலை அனைவரும் செழியன் குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்காக தயாராகின்றனர். அனைவரும் குடும்பத்துடன் இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

ஜோசப் கோபம்: அப்போது அங்கு ஜெனியின் தந்தை ஜோசப் தாய் மரியம் உள்ளிட்ட உறவினர்கள் வருகின்றனர். அவர்களை சிறப்பாக வரவேற்கும் பாக்கியா உள்ளிட்டவர்கள் அவர்களுக்கு காபி கொடுத்து உபசரிக்கின்றனர். இந்நிலையில் விரைப்பாகவே காணப்படுகிறார் ஜோசப். அவருக்கு செழியன் மீதான ஆத்திரம் குறையவில்லை என்பது தெரிய வருகிறது. இந்த நிலையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட குழந்தையை எடுத்து வருகிறார் ஜெனி. அப்போது கோபத்துடன் ஜோசப், ஏற்கனவே ஒரு முறை தங்கள் வீட்டில் இருக்கும்போது குழந்தைக்கு பெயரை தேர்ந்தெடுத்து பெயர் சூட்டு விழா வைத்திருந்த போது. குழந்தையை ஈஸ்வரி மற்றும் செழியன் கடத்தி சென்றதை சுட்டிக்காட்டி கோபப்படுகிறார்.

மூளும் சண்டை: அப்போது திட்டமிட்டபடி அந்த நிகழ்ச்சியில் நடந்திருந்தால் அந்தப் பெயர் தான் வைத்திருப்பார்கள் என்றும் தற்போது எதற்காக இரண்டாவது முறையாக குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்றும் அவர் கோபத்துடன் கேட்கிறார். இதையடுத்து பாக்கியா நடந்து முடிந்தவற்றை பற்றி இப்போது பேச வேண்டாம் என்று அனைவரிடமும் கூறுகிறார். இதனிடையே கோபப்படும் ஈஸ்வரி, செழியனின் மகள் இந்த வீட்டு வாரிசு என்றும் இந்த வீட்டு முறைப்படி தான் அவளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்றும் பேசுவதாக இந்த எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X