Baakiyalakshmi: கடவுள் ரொம்ப மோசம் இல்ல அத்தை.. ஈஸ்வரியை நக்கல் செய்த பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து அடுத்தடுத்த எபிசோடுகளை சிறப்பான வகையில் கொடுத்து வருகிறது. இந்த சீரியல் ஆயிரம் எபிசோட்களை கடந்த சூழலில் தொடர்ந்து சேனலில் இரண்டாவது சீரியலாக முன்னணியில் உள்ளது. அதிகமான டிஆர்பி புள்ளிகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் தன்னுடைய கிளவுட் கிச்சனை துவங்கி நான்கு நாட்களே ஆன நிலையில் தான் ஏற்ற ஆர்டர்களை சப்ளை செய்ய முடியாத சூழலுக்கு கோபி தள்ளப்படுகிறார். அவர் முழுமையாக செஃப்பை மட்டுமே நம்பி இந்த தொழிலை துவங்கிய நிலையில் அன்றைய தினம் அவர் லீவ் போட்டதால் எதையும் செயல்படுத்த முடியாமல் போனது.
இந்நிலையில் அவர் தன்னுடைய மனைவி ராதிகாவிற்கு கால் செய்கிறார். அவர் அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் இருப்பதாக கூறிவிடுகிறார். தொடர்ந்து அம்மாவின் உதவியை கேட்கிறார். இதையடுத்து அங்கு வரும் ஈஸ்வரி பாக்கியவிடம் மதிய உணவுக்கான ஆர்டரை கொடுக்கிறார். தான் ஒரு ஃபங்ஷனுக்காக இந்த ஆர்டரை கொடுப்பதாக ஈஸ்வரி கூறிய சூழலில், அவர் கோபிக்காக தான் மதிய உணவுக்கான ஆர்டரை கொடுத்தார் என்பதை பாக்கியா அறிந்து கொள்கிறார். இதனால் கோபி மட்டும் இல்லாமல் ஈஸ்வரியும் திருட்டு முழி முழிப்பதாக இன்றைய எபிசோடில் காண்ப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக காணப்பட்டது. இந்த சீரியலில் எழில் மற்றும் செழியன் வாழ்க்கை சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ள சூழலில் அடுத்தடுத்த பிரச்சனைகளை உண்டு செய்யும் வகையில் காட்சி அமைப்புகள் கடந்த சில தினங்களில் காணப்பட்டன. அமிர்தா மற்றும் எழில் வாழ்க்கையில் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திரியை கொளுத்தி போட்டுள்ளார் ஈஸ்வரி. இதனால் அமிர்தா அழுததையும், எழில் ஈஸ்வரியிடம் சண்டை போட்டதையும் பார்க்க முடிந்தது.
மீண்டும் பிரச்சினை: இந்நிலையில் முன்னதாக செழியனை மற்றும் அவரது நடவடிக்கைகளில் கண்டு கொள்ளாமல் ரிலாக்சாக விட்டிருந்த ஜெனி, தற்போது ஒவ்வொரு விஷயத்தையும் குடைந்து குடைந்து கேள்வி கேட்டு வருகிறார். தற்போது ஆரம்ப கட்டமாக இருப்பதால் செழியன் ஒவ்வொன்றிற்கும் நிதானமாக பதில் சொல்வதை காணமுடிகிறது. தொடர்ந்து இது நீடித்தால் அவர் ஜெனியிடம் கோபப்படும் சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் தன்னுடைய ரெஸ்டாரெண்ட் பிரச்சினையை பழனிச்சாமி உதவியுடன் தீர்த்துள்ளார் பாக்கியா. இதனால் அவரது ரெஸ்டாரெண்ட்டிற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
சிக்கலில் கோபி: இந்நிலையில் தன்னுடைய கிளவுட் கிச்சன் துவங்கப்பட்டு நான்கு நாட்களே ஆன நிலையில் மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்துள்ளார் கோபி. அவருக்கு சமையல் பற்றி ஒன்றுமே தெரியாத சூழலில் செஃப்பின் உதவியுடன் அவர் சமைத்து வருகிறார். இந்நிலையில் செஃப் தற்போது லீவ் போட்டதை பார்க்க முடிகிறது. இதனால் அவரது உதவியாளர்களும் எதுவும் செய்ய முடியாமல் சும்மா இருப்பதை பார்க்க முடிகிறது. ஆர்டர் கொடுத்தால் மட்டுமே தாங்கள் சமைப்போம் என்றும் தங்களுக்கு சுயமாக சமைக்க தெரியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
கோபிக்காக சமைக்கும் பாக்கியா: இந்நிலையில் தன்னுடைய அம்மாவின் உதவியை கோபி நாடுகிறார். இதையடுத்து அங்கு வரும் ஈஸ்வரி, தனக்கு நூற்றுக்கணக்கில் ஆட்களுக்கு சமைக்க தெரியாது என்றும் பத்து பேருக்கு மட்டுமே தனக்கு சமைக்க தெரியும் என்றும் கூறுகிறார். அதுவும் சமீப காலங்களில் தான் சமைப்பதே இல்லை என்றும் பாக்கியா மட்டுமே சமைப்பதால் தனக்கு சமையலில் சுத்தமாக டச் இல்லாமல் போய்விட்டதாகவும் ஈஸ்வரி கூறுகிறார். இந்நிலையில் பிரச்சினையை தீர்க்கும்படி அம்மாவிடம் கேட்கிறார் கோபி.இதையடுத்து யோசிக்கும் ஈஸ்வரி மதிய உணவுக்கான ஆர்டரை பாக்கியாவிடம் கொடுக்கிறார்.

மூக்கறுபட்ட கோபி -ஈஸ்வரி: தான் விசேஷ வீட்டிற்க்காக ஆர்டர் கேட்பதாக அவர் கூறும் சூழலில் தானே வந்து ஆர்டரை வாங்கிக் கொள்வதாக ஈஸ்வரி கூறுகிறார். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் ஆனதால் சமைத்து முடித்துவிட்டு பாக்கியா அந்த அலுவலகத்திற்கு கால் செய்கிறார். அவர்கள் நேரடியாக எடுத்து வர சொல்கிறார்கள். இதனால் பாக்கியா தான் சமைத்த உணவுகளை நேரடியாக கோபியின் அலுவலகத்திற்கு கொண்டு வருகிறார். அங்கு கோபியும் ஈஸ்வரியும் இருப்பதை பார்க்கும் பாக்கியா இதை சற்றும் எதிர்பார்க்காமல் அவர்களைப் பார்க்கிறார். பாக்கியாவே நேரடியாக வந்ததால் தன்னுடைய குட்டு வெளியானதால் ஈஸ்வரி திகைக்கிறார்.
ஈஸ்வரியை நக்கலடித்த பாக்கியா: இதையடுத்து ஏன் பாக்கியாவிடம் ஆர்டர் கொடுத்தார் என்று கோபி, ஈஸ்வரியிடம் கேள்வி எழுப்புகிறார். தானே நேரில் சென்று ஆர்டரை எடுத்துக் கொள்வதாக கூறியதாகவும் ஆனால் அவரது ஸ்டாஃப்தான் சொதப்பியதாகவும் ஈஸ்வரி கூறுகிறார். இதையடுத்து வழக்கம்போல கோபி புலம்புவதை பார்க்க முடிகிறது. யாரிடம் தான் கெத்து காட்ட வேண்டும் என்று கோபி நினைத்தாரோ அவர்கள் முன்னிலையில் இப்படி அவமானப்பட்டதை நினைத்து அவர் உள்ளுக்குள் குமுறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதையடுத்து ஈஸ்வரியிடமம் பேசும் பாக்கியா, இந்த கடவுள் ரொம்ப மோசம் இல்ல அத்தை, நாம் மறைக்க நினைக்கும் விஷயத்தை அவர் வெளிப்படுத்தி விடுகிறார் என்று நக்கலடிப்பதாக இன்றைய எபிசேகாடில் காட்சிகள் காணப்பட்டன.


Click it and Unblock the Notifications











