Baakiyalakshmi serial: இனியாவின் விபரீத முடிவு.. பாக்யாவிடம் மன்னிப்பு கேட்ட ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. சாகும் முடிவுடன் கடிதம் எழுதி வைக்கும் இனியா, அதை தன்னுடைய அம்மாவின் டேபிளிற்கு பக்கத்தில் வைக்க முயல சத்தம் கேட்டு முழிக்கிறார் பாக்கியா. இதனால் நடக்க இருந்த விபரீதத்தை உணர்ந்து அவர் இனியாவை மீண்டும் திட்டுவதாகவும் கதறி அழுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

எவ்வளவு தான் பார்த்து பார்த்து செய்தாலும் ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால் அதற்காக திட்ட கூடாதா திட்டினால் உடனே இந்த முடிவை எடுப்பாயா என்பதாக பாக்கியா இனியாவை தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து தான் இனிமேல் இதுபோல் நடந்து கொள்ள மாட்டேன் என்று இனியா சத்தியம் செய்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Television Baakiyalakshmi serial Vijay Tv


பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. தன்னால் தன்னுடைய செயல்களால் தன்னுடைய அம்மா மட்டுமில்லாமல் குடும்பத்தினரும் மிகவும் அதிகமான சிரமத்திற்கு உள்ளாகி வருவதை பார்க்கும் இனியா, சாகும் முடிவை எடுக்கிறார். இதையடுத்து கடிதம் எழுதி வைத்துவிட்டு சாகும் முயற்சியில் இறங்க நினைக்கிறார். பாக்கியா மிகச் சிறந்த அம்மா என்றும் அவரைப் போன்ற அம்மா யாருக்கும் கிடைக்க மாட்டார்கள் என்றும் பலவாறாக கடிதம் எழுதும் இனியா, பாக்கியாவின் பக்கத்து டேபிளில் சென்று அந்த கடிதத்தை வைக்க முயற்சிக்கிறார். சத்தம் கேட்டு பாக்கியா எழுந்துக் கொள்கிறார்.

இனியாவின் விபரீத முடிவு: தொடர்ந்து இனியா ஏன் இவ்வளவு நேரம் தூங்காமல் முழித்திருக்கிறார் என்று பாக்கியா கேள்வி எழுப்புகிறார். இதனிடையே ஏதேதோ சொல்லி சமாளிக்கும் இனியாவின் கடிதத்தை பாக்கியா பார்த்து விடுகிறார். இதையடுத்து மிகுந்த முயற்சிக்குப் பிறகு அந்த கடிதத்தை இனியாவிடமிருந்து வாங்கும் பாக்கியா அதை படிக்கிறார். அதைப் படித்துவிட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறார். தான் எவ்வளவு தான் திட்டினாலும் அடித்தாலும் அவளுடைய பிரச்சனைகளில் குடும்பத்தினர் மொத்தமும் உடனிருப்பதாகவும் ஆனால் இனியா புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வதாகவும் பாக்கியா கூறுகிறார்.

கண்கலங்கிய பாக்கியா: சத்தம் கேட்டு அங்கே வரும் ஜெனியும் இனியாவிற்கு அறிவுரை கூறி, பாக்கியாவை சமாதானப்படுத்துகிறார். தொடர்ந்து இனியா எழுதிய கடிதத்தை கிழித்து போட செய்து, இனி இதுபோல நடந்து கொள்ள மாட்டேன் என்று பாக்கியாவிடம் இனியாவை சத்தியம் செய்ய வைக்கிறார். இதையடுத்து இனியாவை தூங்கவைக்கும் பாக்கியா, இரவு முழுவதும் தூக்கம் வராமல் தன்னுடைய மகள் தனக்கு கொடுத்த சந்தோஷ தருணங்களை நினைத்து கண்கலங்கி கொண்டிருக்கிறார். இனியா பள்ளியில் முதலிடம் பெற்றது உள்ளிட்ட பல விஷயங்கள் பாக்கியாவின் காட்சியில் வந்து செல்கின்றன.

சமாதானம் சொல்லும் ஈஸ்வரி: இந்நிலையில் மறுநாள் காலையில் பால் காய்ச்சிக் கொண்டிருக்கும் பாக்கியா, அது பொங்கியது கூட தெரியாமல் தொடர்ந்து இனியா குறித்த சிந்தனையில் மோதுகிறார். இதையடுத்து அங்கு வரும் ஈஸ்வரி பால் பொங்குவதை பார்த்து பாக்கியாவிடம் கூற, பாக்கியா அலறி அடித்துக் கொண்டு அடுப்பை அணைக்கிறார். பாக்கியா வருத்தத்தில் இருப்பதை பார்த்து ஈஸ்வரி கேள்வி எழுப்ப, இரவு நடந்த அனைத்தையும் அவரிடம் கூறுகிறார் பாக்கியா. இந்நிலையில் நான் சரியாக நடந்து கொள்ளவில்லையா எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது, தான் ரெஸ்டாரன்டை மூடிவிட்டு வீட்டிலேயே ஏதாவது சிறிய அளவில் பிசினஸ் செய்யட்டுமா என்பதாக பாக்கியா ஈஸ்வரியிடம் கேள்வி எழுப்புகிறார்.

பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கும் ஈஸ்வரி: தொடர்ந்து தானும் தன்னுடைய கணவர் ராமமூர்த்தியும் இணைந்து இனியாவை இனி தொடர்ந்து பார்த்துக் கொள்வதாக பாக்கியாவிற்கு ஈஸ்வரி சமாதானம் கூறுகிறார். இந்நிலையில் வயதான காலத்தில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தியை தான் மிகவும் கஷ்டப்படுத்துவதாகவும் தன்னை மன்னித்து விடும்படியும் பாக்கியா கூறுகிறார். இதையடுத்து பேசும் ஈஸ்வரி ஒரு கேடு கெட்டவனை மகனாக பெற்று அவனை உனக்கு திருமணம் செய்துவிட்டு, தான் மிகப்பெரிய பாவத்தை செய்து விட்டேன் என்று கூறுகிறார். தான் தான் பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஈஸ்வரி கூறுவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X