Baakiyalakshmi serial: Domestic violence Case.. ஈஸ்வரிக்கு ஜாமீன் கிடைக்காமல் திண்டாடும் எழில் & செழியன்!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி மீது கமலா கொடுத்த கொலை குற்றச்சாட்டை அடுத்து அவரை கைது செய்ய போலீசார் இன்னும் சில நிமிடங்களில் வருவதாக செழியனுக்கு போன் செய்கின்றனர். தாங்களே அழைத்து வந்து பாட்டியை விடட்டுமா என்று செழியன் கேட்க மறுமுனையில் கனெக்ஷன் கட் ஆகிறது.
இதனால் தொடர்ந்து போலீசாருக்கு கால் செய்தபடி செழியன் காணப்படுகிறார். இந்நிலையில் கும்பகோணத்திற்கு சென்று தன்னுடைய தோழியை பார்த்து மன நிம்மதியுடன் வீட்டுக்கு வந்த ஈஸ்வரி சிரித்தபடி தன்னுடைய பேரன்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர்களோ நடக்கப்போகும் விபரீதத்தை நினைத்து கண்கலங்கியபடி அவரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே பாக்கியாவும் தன்னுடைய கண்ணீரை அடக்க முடியாமல் சமையலறைக்கு செல்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் பரபரப்பான கட்டங்களை கொண்டிருந்தது. ஈஸ்வரி மீது ராதிகாவை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் கமலா புகார் செய்த நிலையில் அவரது வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்து விட்டு வருகின்றனர். மறுநாள் அவர் கும்பகோணத்திலிருந்து வருவதாக குடும்பத்தார் கூறும் நிலையில் அவர் வந்தவுடன் உடனடியாக தங்களுக்கு இன்ஃபார்ம் செய்ய வேண்டும் என்று போலிஸ் அதிகாரி கூறிவிட்டு வருகிறார். இந்நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ராதிகா தன்னுடைய அம்மா கமலாவிடம் அவர் அவசரப்பட்டு விட்டதாக கூறுகிறார்.
பிரச்சினையை சிக்கலாக்கிய கமலா: தன்னுடைய அம்மா ஈஸ்வரி மீது மிகுந்த பாசம் கொண்ட கோபி இந்த விஷயத்தை கேள்விப்பட்டால் மிகப்பெரிய பிரச்சினையாகிவிடும் என்றும் பிரச்சனையை தீர்ப்பதற்கு பதில் அதை மேலும் சிக்கலாக்கி விட்டதாகவும் தன்னுடைய அம்மா கமலாவை ராதிகா குற்றம் சாட்டுகிறார். இதனிடையே இரவு வீட்டிற்கு வரும் கோபி, தண்ணீரை குடித்துவிட்டு தூங்க செல்கிறார். அவருக்கு இந்த விஷயம் தெரியுமா தெரியாதா என்பது குறித்து தெரிந்து கொள்ள முடியாமல் ராதிகா குழப்பத்துடன் தன்னுடைய அறைக்கு செல்கிறார். இந்நிலையில் பாக்கியா வீட்டில் அனைவரும் தூங்காமல் சாப்பிடாமல் கவலையுடன் காணப்படுகின்றனர்.
Domestic violence case: வக்கீலை சந்தித்து விட்டு வருவதாக கூறி சென்ற எழில் மற்றும் செழியன் இருவரும் வீட்டிற்கு வந்த நிலையில் இது டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ் என்றும் அதனால் ஜாமீன் கிடைக்காது என்றும் வக்கில் கூறி விட்டதாக அவர்கள் இருவரும் கூறுகின்றனர். ஈஸ்வரியை கைது செய்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை பார்த்துக் கொள்ளலாம் என்று வக்கீல் கூறி விட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் வீட்டிற்கு கூட போகாமல் அங்கேயே இருக்கும் செல்வி, கோபியை நம்பி ஈஸ்வரி அவரது வீட்டிற்கு போனதற்கு அவர் நல்ல பலனை கொடுத்ததாகவும் ஈஸ்வரி கொஞ்சம் கோபமாக பேசுவார் ஆனால் மிகவும் நல்லவர் என்றும் கூறுகிறார்.
கண்கலங்கும் பாக்கியா: இந்நிலையில் மறுநாள் காலை ஈஸ்வரி, பாக்கியா, ராமமூர்த்தி மற்றும் இனியா என நால்வரும் வீடு வந்து சேர்கின்றனர். வீட்டுக்குள் வரும்போது சிரித்த முகத்துடன் வரும் ஈஸ்வரி. அனைவரையும் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்கிறார். இதனிடையே இனியாவும் கும்பகோணம் ட்ரிப் பெரியவர்களுடன் சென்றதால் மிகவும் போர் அடிக்கும் என்று நினைத்ததாகவும் ஆனால் முற்றிலும் ஃபன்னாக இருந்ததாகவும் கூறி பாட்டியின் பள்ளிக்கால கதைகளை பேசுகிறார். இந்நிலையில் ஈஸ்வரி சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து பாக்கியா கண்கலங்குகிறார்.
கமலா ஆத்திரம்: அடுத்ததாக என்ன நடக்குமோ என்று அவர் பேசிக் கொண்டிருக்கிறார். இதனிடையே அங்கு வரும் செல்வி பழனிச்சாமியிடம் பேசி விட்டாயா என்று கேட்க அவரிடமும் பேசி விட்டேன் ஆனால் இந்த விஷயத்தில் முதலில் ஒன்றும் செய்ய முடியாது கைது நடவடிக்கைக்கு பிறகு அவரை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று கூறிவிட்டதாக பாக்கியா கூறுகிறார். இதனிடையே பாக்கியாவின் வீட்டில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருப்பதை தன்னுடைய வீட்டின் வெளியில் வந்து பார்த்து செல்கிறார் கமலா. இதையடுத்து அவர் ராதிகாவிடமும் அவரது குழந்தையை அழித்த ஈஸ்வரி உள்ளிட்ட அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் இதன் மூலம் புத்தி வந்து கோபியும் அடங்கி இருப்பார் என்றும் கூறுகிறார்.
கோபி சந்தேகம்: இதையடுத்து இருவருமே வெளியில் வந்து பாக்கியா வீட்டை பார்த்துக் கொண்டிருப்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. இந்நிலையில் ஜாக்கிங் சென்று விட்டு வீடு திரும்பும் கோபி, அவர்கள் இருவரும் வாசலிலேயே நின்று கொண்டு பாக்கியா வீட்டை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து கோபி சந்தேகம் அடைவதாக இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











