Baakiyalakshmi serial: குழப்பிய மாலினி.. விவாகரத்து வேண்டும் என அடம்பிடிக்கும் ஜெனி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்து ரசிகர்களை கவரும் வகையில் எபிசோடுகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு சிறப்பாக அமையும் வகையில் காணப்படுகிறது. இன்றைய தினம் ஜெனி மற்றும் செழியனின் விவாகரத்து வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதில் இருவரும் பங்கேற்ற நிலையில் மீண்டும் கவுன்சிலிங்கிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முன்னதாக தன்னுடைய மகளின் மனதை பாக்கியா மாற்ற முயற்சிப்பதாக நினைக்கும் ஜெனியின் அப்பா ஜோசப் மாலினியை வரவழைத்து அவரிடம் பேச வைக்கிறார்.

செழியன் திருமணமான விஷயத்தை மறைத்து தன்னை ஏமாற்றியதாக மாலினி பொய்க்கதைகளை பரப்பிய நிலையில் ஜெனி குழப்பத்தில் தள்ளப்படுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. மாலினி மற்றும் செழியனின் ரிலேஷன்ஷிப் குறித்து தெரிந்தே முன்னதாக ஜெனி வீட்டை விட்டு தன்னுடைய குழந்தையுடன் வெளியேறிய நிலையில் தற்போது மீண்டும் அந்த விவகாரத்தை கையில் எடுக்கிறார் ஜோசப். இதனால் செழியன் விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திணறுகிறார் ஜெனி. தன்னுடைய மாமியார் பாக்யா, கொடுத்த அறிவுரையையும் அவர் ஏற்க முடியாமல் தவிக்கிறார்.

Vijay TV s Baakiyalakshmi serial today 5th March 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். பெங்காலி சீரியலில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட போதிலும் தமிழ் ரசிகர்களுக்கு இந்த சீரியல் சிறப்பான தருணங்களை கொடுத்து வருகிறது. இந்த சீரியலில் பாக்கியா தன்னுடைய மகன்கள் செழியன் மற்றும் எழிலின் வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பங்களை தீர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். ஒரு பக்கம் குடும்பத்தை கவனித்துக் கொண்டாலும் மறுபக்கம் தன்னுடைய ரெஸ்டாரெண்ட் திறப்பிலும் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

கோபியின் சதி: இந்நிலையில் இந்த ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவை சீர்குலைக்கும் வகையில் கோபியும் தன்னுடைய நண்பன் செந்திலுடன் இணைந்து சதி வேலையில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, தன்னுடைய விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் முந்தைய தினம் செழியன் கண்கலங்குகிறார். அவரைத் தேற்றும் பாக்கியலட்சுமி ஜெனிக்கும் வாய்ஸ் நோட் மூலம் தான் நினைக்கும் விஷயங்களை வெளிப்படுத்துகிறார். தான் சுயநலமாக முடிவெடுத்தாலும் செழியனுடன் ஜெனி இணைந்து வாழ வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பமாக உள்ளதாக அவர் கூறுகிறார்.

மாலினியின் குற்றச்சாட்டு: இந்த வாய்ஸ் நோட்டை கேட்கும் ஜெனிக்கு அடுத்த அதிர்ச்சியை அவரது அப்பா ஜோசப் கொடுக்கிறார். ஜெனி வீட்டுக்கு வரும் மாலினி செழியன் தனக்கு திருமணமானதை மறைத்து தன்னை ஏமாற்றியதாக குற்றம் சாட்டுகிறார். அவரிடம் கோபப்பட்டு பேசினாலும் ஜெனி அவருடைய பேச்சால் மீண்டும் குழப்பம் அடைகிறார். இந்நிலையில் இவர்களது வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வருகிறது. இருவருக்கும் கவுன்சிலிங்கை மீண்டும் நீதிபதி பரிந்துரைக்கிறார். இருவரும் கவுன்சிலிங் சென்ற நிலையில் அங்கு தான் ஜெனி இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றும் தன்னுடைய தவறுக்காக தான் மனம் வருந்துவதாகவும் செழியன் கூறுகிறார்.

ஜெனியின் தீர்க்கமான முடிவு: ஆனால் தான் செழியனுடன் இணைந்து வாழ முடியாது என்று தீர்க்கமான முடிவை வெளிப்படுத்துகிறார் ஜெனி. இதனால் இவர்களது முடிவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் கவுன்சிலிங் வர மருத்துவர் பரிந்துரைக்கிறார். இந்நிலையில் வெளியில் வரும் தன்னுடைய மகள் ஜெனியை பாக்கியா, செழியனிடம் பேசவிடாமல் கட்டாயமாக அங்கிருந்து அழைத்துச் செல்கிறார் ஜோசப். இப்படி இன்றைய எபிசோடு காணப்பட்டுள்ளது. முன்னதாக கணேஷ் மூலம் எழில் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தற்போது அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதே போல செழியன் வாழ்க்கையிலும் மீண்டும் ஜெனி இணையும் வகையில் பிரச்சனை தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் செழியன் -ஜெனி வாழ்க்கையில் என்ன மாதிரியான முடிவு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X