பாக்கியலட்சுமி சீரியல்: என் புருஷனுக்கு கோபி கொள்ளி வைக்க கூடாது.. அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக காணப்பட்டது. ராமமூர்த்தியின் மறைவு பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரையும் நிலைகுலைய செய்துள்ளது. இந்நிலையில் அவரது இறுதி சடங்குகளை செய்வதற்கு கோபியை பழனிச்சாமி அழைக்கிறார்.

தன்னுடைய கணவரின் முன்பு அழுதுக் கொண்டிருக்கும் ஈஸ்வரி, இந்த நேரத்தில் அதிரடியாக பேசுகிறார். தன்னுடைய கணவர் ராமமூர்த்திக்கு கோபி இறுதிச் சடங்குகளை செய்யக்கூடாது என்று ஈஸ்வரி தீர்மானமாக கூறுகிறார். இதனால் பாக்கியா மட்டுமில்லாமல் எழில், செழியன், பழனிச்சாமி ஆகியோரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர்.

baakiyalakshmi serial vijay tv

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ஏராளமான ரசிகர்களை கலவரத்துடன் பார்க்க வைத்துள்ளது/ இந்த சீரியலில் பாக்கியாவிற்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் உறுதுணையாக இருந்த ராமமூர்த்தி தாத்தா உயிரிழந்துள்ளார். தன்னுடைய எண்பதாவது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக தன்னுடைய குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் இணைந்து கொண்டாடி மகிழ்ந்த ராமமூர்த்தி, அன்றைய இரவு தூங்குவதற்கு கூட மனமில்லாமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் பேசி சிரித்தபடி இருக்கிறார்.

ராமமூர்த்தியின் மறைவு: தூங்க செல்ல முயற்சிக்கும் அனைவரையும் இழுத்து உட்கார வைத்து ராமமூர்த்தி பேசியதையும் கலகலப்பாக சிரித்ததையும் சில தினங்களுக்கு முன்பு வெளியான எபிசோடில் பார்க்க முடிந்தது. ஒரு கட்டத்தில் செல்வி, பாக்கியா என அடுத்தடுத்து அவர் தனித்தனியாக கூப்பிட்டு பேசுகிறார். மற்றவர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை வாழாமல் விட்டு விட வேண்டாம் என்று பாக்கியாவிற்கு அறிவுரை கூறுகிறார். இதையடுத்து தூக்கத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அனைவரும் நிலைகுலைந்து போகின்றனர். குறிப்பாக தன்னுடைய அனைத்து பிரச்சினைகளிலும் உடனிருந்த தன்னுடைய மாமனாரை இழந்து பாக்கியா, மிகப்பெரிய அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாகிறார்.

ஈஸ்வரி அதிரடி முடிவு: பேராண்டி என்று தன்னுடைய பேரன்களை செல்லம் கொஞ்சிய ராமமூர்த்தி தற்போது இல்லை என்பதை செழியன் மற்றும் எழிலாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆயினும் அவர்கள் அழுதபடி இந்த விஷயத்தை ஏற்கவே செய்ததை பார்க்க முடிந்தது. இந்த நேரத்தில் பாக்கியா குடும்பத்திற்கு மிகப்பெரிய உதவியாக பழனிச்சாமி இருக்கிறார். ராமமூர்த்தி மறைவால் பாக்கியா உள்ளிட்ட அனைவரும் நிலைகுலைந்த நிலையில் அவரது இறுதி சடங்குகளை பழனிச்சாமி கவனித்துக் கொள்கிறார். கோபியை சடங்குகளை செய்ய அவர் அழைக்கும் நிலையில் அவரும் அதற்கு தயாராகிறார். ஆனால் இதற்கு ஈஸ்வரி மறுப்பு தெரிவிக்கிறார்.

மல்லுக்கு நிற்கும் கோபி: கோபி தன்னுடைய கணவருக்கு இறுதி சடங்குகளை செய்யக்கூடாது என்பதை ஈஸ்வரி மிகவும் தீர்மானமாக கூறுகிறார். இதனால் கோபி மட்டுமில்லாமல் உறவினர்கள் மற்றும் பாக்கியா உள்ளிட்ட அனைவருமே பயங்கர அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். எழில் மற்றும் செழியன் சம்பிரதாயங்களை மாற்ற வேண்டாம் என்றும் அப்பாவே செய்துவிட்டு போகட்டும் என்றும் கூறுகின்றனர். இதனிடையே தன்னுடைய பொறுப்பை தான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று தன்னுடைய அம்மாவிடம் கோபி மல்லுக்கு நிற்கிறார். தன்னுடைய அப்பாவின் இறுதி சடங்குகளை தான்தான் செய்வேன் என்றும் அவர் கூறுகிறார்.

ராமமூர்த்தி சொன்ன விஷயம்: ஈஸ்வரியை செழியன், எழில், ராதிகா, ஜெனியின் அப்பா, அம்மா பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் சமாதானப்படுத்த முயல்கின்றனர். ஆனால் சாவதற்கு முன்னதாக ராமமூர்த்தி தன்னிடம் கூறியதை அவர்கள் அனைவரிடமும் ஈஸ்வரி கூறுகிறார். அவருக்கு முன்னதாகவே தன்னுடைய முடிவு தெரிந்ததோ என்னவோ அவர் கோபி தனக்கு இறுதி சடங்குகளை செய்யக்கூடாது கொள்ளி வைக்க கூடாது என்று தன்னிடம் கூறியதாகவும் தன் கணவன் திருமணம் ஆனதிலிருந்து எதையுமே கேட்காத நிலையில் தற்போது அவர் கேட்ட இந்த விஷயத்தை தான் அவருக்கு செய்ய நினைப்பதாகவும் ஈஸ்வரி கூறுகிறார்.

முடிவில் மாறாத ஈஸ்வரி: இதனால் என்ன சொல்வது என்று தெரியாமல் பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் திகைக்கின்றனர். இந்நிலையில் கோபியின் மாமியார் கமலாவும் மகனை இறுதி சடங்கு செய்யக்கூடாது என்று கூறினால் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் ராமமூர்த்தியை மட்டுமில்லாமல் ஈஸ்வரியையும் தவறாக பேசுவார்கள் என்று கூறுகிறார். இதனால் ஈஸ்வரி வழிக்கு வருவார் என்று அனைவருமே நினைக்கின்றனர். ஆனால் தன்னுடைய முடிவில் தீர்மானமாக இருக்கிறார் ஈஸ்வரி. கண்டிப்பாக தன்னுடைய முடிவில் மாற்றம் இல்லை என்று அவர் கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X