Baakiyalakshmi serial: கோபியின் தில்லாலங்கடி வேலை.. காதைப்பிடித்து திருகிய ராதிகா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி தொடர் இன்றைய தினம் நக்கலும் நையாண்டியுமாக காணப்பட்டது. கிளவுட் கிச்சன் துவங்கி சில தினங்களே ஆன சூழலில் கோபியின் செஃப் விடுப்பு எடுக்கிறார். இதனால் சமையல் குறித்து எதுவும் தெரியாத கோபியும் செஃப்பின் உதவியாளர்களும் ஒன்றும் செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. இதையடுத்து மகனுக்காக உதவ அங்குவருகிறார் ஈஸ்வரி. இதையடுத்து அவர், ஒரு ஐடியா செய்து பாக்கியலட்சுமியிடம் கோபியின் ஆர்டருக்கான உணவுகளை தயாரிக்க ஆடர் கொடுக்கிறார்.

பாக்கியாவிற்கு தெரியாமல் இந்த வேலைகளை ஈஸ்வரி செய்ய நினைக்கிறார். ஒரு கட்டத்தில் இது குறித்து பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. தனக்கு தெரியாமல் தன்னுடைய அம்மா செய்த இந்த காரியத்தை தெரிந்துக் கொள்ளும் கோபி, மிகவும் அவமானமாக உணர்கிறார். வீட்டிற்கு வரும் பாக்கியா, இதுகுறித்து தன்னுடைய மகன் மற்றும் மருமகள்களிடம் பேசுகிறார். இதனிடையே அங்குவரும் ராதிகாவிடம் செல்வி கோபியின் இந்த நடவடிக்கை குறித்து நக்கல் செய்வதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது. தொடர்ந்து எழிலும் தன்னுடைய அப்பாவிடம் இது குறித்து பேச ஆளாளுக்கு தன்னிடம் பஞ்ச் டயலாக் பேசுவதாக கோபி புலம்புகிறார்.

Vijay TV s Baakiyalakshmi serial today 6th April 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியலில் தன்னுடைய கிளவுட் கிச்சனை கோபி துவங்கி சில தினங்களே ஆன சூழலில் திடீரென அவரது செஃப் விடுப்பு எடுத்ததால் சமையல் குறித்து எதுவும் தெரியாத கோபி சிக்கலுக்கு உள்ளாகிறார். தான் எடுத்துக்கொண்ட ஆர்டர்களை எப்படி டெலிவரி செய்யப் போகிறேன் என்று அவர் தவிக்கும் சூழலில் ராதிகாவிற்கு இது குறித்து கால் செய்கிறார். ஆனால் ராதிகாவோ தான் முக்கியமான மீட்டிங்கில் இருப்பதாகவும் தன்னால் எந்த வகையிலும் உதவி செய்ய முடியாது என்றும் உறுதியாக கூறுகிறார்.

அவமானப்படும் கோபி: இதையடுத்து தன்னுடைய அம்மா ஈஸ்வரிக்கு கால் செய்யும் கோபி, அவரது உதவியை கேட்கிறார். தொடர்ந்து அவரது அலுவலகத்திற்கு செல்லும் ஈஸ்வரி, பாக்கியாவிடம் கோபியின் லஞ்ச் ஆர்டர்களுக்கான ஆர்டரை கொடுக்கிறார். தானே வந்து அந்த ஆர்டரை பெற்றுக் கொள்வதாக முன்னதாக பாக்கியாவிடம் ஈஸ்வரி கூறிய சூழலில் கோபியின் அலுவலக ஊழியர் பாக்கியாவை அவர்களது அலுவலகத்திற்கு உணவைக் கொண்டு வந்து கொடுக்குமாறு கூறுகிறார். இதனால் கோபி மற்றும் ஈஸ்வரியின் குட்டு வெளிப்படுகிறது இதையடுத்து மிகுந்த அவமானத்திற்கு உள்ளாகிறார் கோபி.

ஆத்திரமடையும் ராதிகா: இருந்தபோதிலும் தன்னுடைய இக்கட்டான சூழலில் அவரால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதையடுத்து அவர் பாக்கியாவிடம் அந்த உணவை பெற்று தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்கிறார். இந்நிலையில் இன்றைய தினம் பாக்கியா இது குறித்து தன்னுடைய மகன் எழில் மற்றும் மருமகள்களிடம் பேசுகிறார். இதையடுத்து அங்கு சமையல் செய்வதற்காக வரும் ராதிகாவிடம் செல்வி நக்கலுடன் நடந்த விஷயத்தை கூறுகிறார். இதனால் ஆத்திரமடையும் ராதிகா, தொடர்ந்து தன்னுடைய கணவனிடம் சென்று இது குறித்து விசாரிக்கிறார்.

கோபியின் காதை திருகிய ராதிகா: ஆனால் ராதிகாவிடம் கோபி மழுப்ப, தான் இதுவரை சந்தித்த நபர்களிலேயே இந்த அளவிற்கு பொய் சொல்பவர் வேறு யாரும் இருக்க முடியாது என்று கூறும் ராதிகா, தொடர்ந்து கோபியின் காதைப்பிடித்து திருகுகிறார். இதனால் செய்வதறியாது திகைக்கும் கோபி, தான் என்ன ஸ்கூல் பையனா என்றும் தன்னை காதை பிடித்து திருகுகிறாயே என்று அப்பாவித்தனமாக கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து ராதிகா தொடர்ந்து கோபத்துடன் ஈஸ்வரியிடமும் இது குறித்து சண்டை இடுகிறார். பாக்கியாவிடம் உணவு பெற வேண்டிய அவசியம் என்ன என்றும் வேண்டுமென்றால் மற்றவர்கள் யாரிடமாவது உணவு ஆர்டர் செய்திருக்கலாமே என்றும் அவர் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

பாக்கியா உற்சாகம்: இந்நிலையில் சமையலறைக்கு தண்ணீர் எடுப்பதற்காக வரும் கோபி, தான் பாக்கியாவிடம் ஆர்டர் கொடுத்ததாக தெரிந்திருந்தால் தன்னுடைய கிளவுட் கிச்சனையே மூடியிருப்பேன் என்று கூறுகிறார். இந்நிலையில் தான் தற்போது மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கேலி பேசியவர்களுக்கே உதவி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில் தன்னுடைய அருமை மற்றவர்களுக்கும் தெரிய வந்துள்ளதாகவும் பாக்கியா கூறுவதாகவும் இந்த எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X