Baakiyalakshmi: ராதிகா அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ்.. அதிர்ச்சியில் கோபி.. என்ன இப்படி ஆயிடுச்சு!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகளை ரசிகர்களை கவரும் வகையில் இயக்குநர் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இன்றைய எபிசோடும் பரப்பரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் காணப்பட்டது. கோபி வேண்டாம் என்று கூறிவிட்டு பாக்கியா வீட்டிலிருந்து ராதிகா கிளம்பிய நிலையில் தற்போது கோபியை பிரியும் முடிவிற்கு வந்த அவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதை இன்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது.
இதனால் கோபி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் குடும்பத்தினர் அனைவரும் ராதிகாவின் இந்த முடிவால் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். ராதிகாவை ஈஸ்வரி திட்டித் தீர்க்கிறார். ராதிகா தன்னுடைய மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்த நிலையில் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் அனைவரும் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏறக்குறைய 5 ஆண்டுகளை கடந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து அடுத்தடுத்து அதிரடிகளை கிளப்பி வருகிறது/ 1300க்கும் மேற்பட்ட எபிசோட்களை கொடுத்துள்ள இந்த சீரியல் விரைவில் நிறைவடைய உள்ளதாக தொடர்ந்து பல மாதங்களாக கூறப்பட்டு வந்தாலும் சீரியல் அதிகமான டிஆர்பிஐ பெற்று வருவதால் சீரியலை நிறைவு செய்யும் எண்ணம் சேனலுக்கு இல்லை என்று கூறப்படுகிறது/ இந்நிலையில் தொடர்ந்து பாக்கியாவிற்கும் அவரது வளர்ச்சிக்கும் குடைச்சல் கொடுத்து வந்த கோபி, பாக்கியா மூலமாக உயிர் பிழைத்ததை தொடர்ந்து ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்: உடல்நிலை சரியில்லாத கோபியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து பார்த்துக் கொள்கிறார் ஈஸ்வரி. முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்தாலும் தொடர்ந்து தன்னுடைய மாமியார் மற்றும் மகன், மகள் என அனைவரின் விருப்பத்திற்காக இதற்கு ஒப்புக்கொள்கிறார் பாக்கியா. தொடர்ந்து ராதிகா கோபியை பார்க்க முடியாதபடி ஈஸ்வரி தடுப்பதை கேள்வி கேட்கிறார். ராதிகாவை தன்னுடைய வீட்டிற்கு கோபி அழைத்து வரும் சூழலில் அதற்கும் ஒப்புதல் அளிக்கிறார் பாக்கியா. இந்நிலையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை கவரும் வகையில் காட்சிகளை கொண்டுள்ளது.
வீட்டைவிட்டு சென்ற ராதிகா: இதில் தன்னை விட்டு பிரிந்து போன ராதிகாவுடன் மீண்டும் சேர்வதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார் கோபி. ஆனால் மீண்டும் சேர்வது சாத்தியம் இல்லை என்று ராதிகா கூறுகிறார். இதனால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாகும் கோபி தன்னுடைய அம்மாவிடம் இது குறித்து பேசி ஆதங்கப்படுகிறார். கோபி குடித்துவிட்டு வரும் நிலையில் ராதிகாவை மறந்து விடும்படி ஈஸ்வரி அட்வைஸ் கொடுப்பதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் மீண்டும் இன்றைய எபிசோடில் ராதிகாவை அவரது வீட்டில் சென்று பார்க்க முயல்கிறார் கோபி. ஆனால் அங்கு ராதிகாவும் மயூவும் இல்லாத நிலையில் அவர்கள் எங்கே சென்றார்கள் என்பது தனக்கு தெரியாது என்று ராதிகாவின் அம்மாவும் கூறிவிடுகிறார்.
விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ராதிகா: இதையடுத்து குழப்பம் அடையும் கோபி, வீட்டிற்கு திரும்பி வரும் நிலையில் அங்கு அவருக்கு முன்னதாக வக்கீல் நோட்டீஸ் அவருக்காக காத்திருக்கிறது. அதில் ராதிகா கோபிக்கு விவாகரத்துக்கான நோட்டீஸ் அனுப்பியதை பார்க்க முடிகிறது. இதனால் கோபி மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் நிலையில், ஈஸ்வரி தன்னுடைய மகனை கொல்வதற்காகவே ராதிகா இத்தகைய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதாக கரித்துக் கொட்டுகிறார். இந்த வக்கீல் நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடையும் பாக்கியா தொடர்ந்து ராதிகாவிற்கு போன் செய்கிறார். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ராதிகாவின் இந்த வக்கீல் நோட்டீஸ் காரணமாக கோபி மட்டும் இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சிக்கும் குழப்பத்திற்கும் உள்ளாவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











