Baakiyalakshmi serial: ஈஸ்வரியை கைது செய்த போலீஸ்.. நடுரோட்டில் கோபியை அடித்து உதைத்த அப்பா!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இன்றைய எபிசோடில் கும்பகோணத்திலிருந்து சென்னை வந்த ஈஸ்வரியின் வருகையை உறுதிப்படுத்திக் கொண்ட போலீசார் வீட்டுக்கே வந்து அவரை கைது செய்து அழைத்து செல்கின்றனர். இதனால் ராமமூர்த்தி, பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் பரிதவிக்கின்றனர்.
இதனிடையே எதுவும் தெரியாமல் அங்கு வரும் கோபி என்ன நடந்தது என்று செழியனிடம் விசாரிக்கிறார். இதையடுத்து தன்னுடைய மனைவி மீது மிகுந்த அன்பு கொண்ட ராமமூர்த்தி கோபியை அடித்து துவைப்பதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது. இதனிடையே தன்னுடைய மகன்தான் உலகம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஈஸ்வரி தான் அப்படி செய்யவில்லை என்று தொடர்ந்து பரிதவிப்புடன் ஜிப்பில் ஏறி போவதாக காணப்படுகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் கும்பகோணத்திலிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்த ஈஸ்வரி, தொடர்ந்து தன்னுடைய பேரன்கள், பேத்திகள் என குடும்பத்தினர் அனைவரிடமும் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய மகன் தன் மீது கொலை குற்றம் சாட்டி வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில் மனமுடைந்து காணப்பட்ட அவருக்கு இந்த கும்பகோணம் ட்ரிப் மிகப்பெரிய அளவில் மனமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில், ஈஸ்வரி வீடு வந்து சேர்ந்ததை உறுதிப்படுத்திக் கொள்ளும் போலீசார் வீட்டிற்கு வந்து கைது நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.
ஈஸ்வரியை கைது செய்த போலீஸ்: இதனால் குடும்பத்தினர் அனைவரும் பரிதவித்து ஒவ்வொருவரும் ஈஸ்வரி அப்படி செய்திருக்க மாட்டார் என்றும் அவரை விட்டுவிடும்படியும் கூறி போலீசாரிடம் கெஞ்சி கேட்கின்றனர். ஆனால் எதுவாக இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷனில் வந்து பேசிக் கொள்ளுங்கள் என்று போலீஸ் அதிகாரி கண்டிப்புடன் கூறுகிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பாக்கியா, எழில், செழியன் மற்றும் ராமமூர்த்தி என அனைவரும் கவலை, வருத்தம் என அனைத்தும் ஆட்கொள்ள தொடர்ந்து போலீசாரிடம் கெஞ்சி பேசுகின்றனர். இந்நிலையில் ஈஸ்வரியை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்து கொண்டு செல்கின்றனர்.
சந்தோஷத்தில் பூரித்த கமலா: இதனிடையே, ஈஸ்வரியை கைது செய்யும் நடவடிக்கையை தன்னுடைய மகள் ராதிகாவையும் அழைத்து வந்து பார்க்கிறார் கமலா. தொடர்ந்து ஈஸ்வரியை அரஸ்ட் செய்ததை பார்த்து அவர் வெற்றியுடன் புன்னகைக்கிறார். இதனிடையே கோபி அங்கு வருவதைப் பார்த்து அவர் கண்ணில் படாமல் கமலா நைசாக நழுவுகிறார். இதனிடையே, தான் அப்படி செய்யவில்லை என்று அழுகையோடு கூறும் ஈஸ்வரி வேறு வழி இல்லாமல் ஜீப்பில் ஏறி செல்கிறார். இந்நிலையில் நடந்த விஷயம் எதுவும் தெரியாமல் அங்கு வரும் கோபி பாக்கியா வீட்டிற்கு முன்பு போலீஸ் வாகனம் வந்து செல்வதை பார்த்துவிட்டு என்ன நடந்தது என்று செழியனிடம் விசாரிக்கிறார்.
கோபிக்கு விழுந்த அடி உதை: இதை பார்க்கும் ராமமூர்த்திக்கு ஆத்திரம் தலைக்கேற ஓடி வந்து கோபியை அடிக்கிறார். இதையடுத்து அனைவரும் அவரை தடுக்கின்றனர். தங்களுக்கு தொடர்ந்து நிம்மதி இல்லாத நிலையை ஏற்படுத்தும் கோபிக்கு, தாங்கள் செத்தால்தான் சந்தோஷமா என்று பலவாறாக பேசுகிறார். தொடர்ந்து பெற்றவர்களை இவ்வாறு நடத்தும் பிள்ளைகள் சந்தோஷமாக இருந்ததாக சரித்திரமே இல்லை என்றும் அவர் நன்றாக இருக்க மாட்டார் என்றும் ஆத்திரத்துடன் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











