Baakiyalakshmi serial: ஜெனியை இயல்பாக்கும் பாக்கியா.. இப்படி ஒரு மாமியார் கிடைச்சா வாழ்க்கை சூப்பர்தான்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னதாக மாலினியுடனான செழியனின் தொடர்பால் ஜெனி, உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் செழியன் அவரை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் சமாளிக்கும் வழியும் தெரியாமல் தவிக்கிறார்.
செழியன் யாருடன் பேசினாலும் அதற்கு கண், காது, மூக்கு வைத்து ஜோடனை செய்யும் ஜெனி, தொடர்ந்து அவர் செல்லும் லைவ் லொகேஷனை கொடுக்குமாறு டார்ச்சர் செய்ததையும் அதனால் செழியன் முகம் வாடியதையும் பார்க்கும் பாக்கியா, இதுகுறித்து தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் அடுத்தடுத்த பிரச்சனைகள் ஏற்பட்ட சூழலில் அதை பழனிச்சாமி உதவியுடன் பாக்கியா, தீர்த்து வைப்பதாக காணப்பட்டது. ரெஸ்டாரெண்ட் பக்கத்தில் பார் ஒன்று ஓபன் செய்யப்பட அதை யாரோ கம்ப்ளெயிண்ட் செய்து மூட வைக்கிறார்கள். ஆனால் பாக்கியாதான் அதை செய்ததாக அவர் குற்றம் சாட்டுவதாக காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் செழியன் மற்றும் ஜெனியின் பிரச்சனைகள் குறித்த காட்சிகள் ஒளிபரப்பாகின.
செழியனுக்கு டார்ச்சர்: மாலினியுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக செழியனுடன் சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து பெரும் நடவடிக்கையில் ஜெனி ஈடுபட்ட சூழலில் தற்போது அவருடன் மீண்டும் இணைந்துள்ளார். இருந்தபோதிலும் மாலினி -செழியன் உறவு குறித்த அடுத்தடுத்த சந்தேகங்களை அவர் தொடர்ந்து செழியனிடம் கேட்டு டார்ச்சர் செய்கிறார். தான் ஏதோ மனநிலையில் அதை செய்து விட்டதாகவும் தனக்கு எப்போதும் தன்னுடைய மனைவிதான் பிடித்தமானவள் என்றும் செழியன் தன்னுடைய நிலைப்பாட்டை ஜெனிக்கு உறுதிப்படுத்த முயன்றாலும் அதை ஏற்கும் மனநிலை ஜெனிக்கு காணப்படவில்லை.
உளவியல்ரீதியான பாதிப்பு: உளவியல்ரீதியாக அவர் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில் செழியன் அலுவலகத்திற்கு செல்லும் லைவ் லொகேஷனை தன்னுடன் பகிருமாறு அவர் செழியனிடம் கேட்டதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இதை பார்க்கும் பாக்கியா, ஜெனியின் மனநிலையை மாற்ற முற்படுகிறார். நீண்ட நாட்களாக ஜெனி வாக்கிங் போகவில்லை என்றும் தன்னுடன் வருமாறு கூறும் பாக்கியா, புடவையுடன் வேண்டாம் என்றும் வாக்கிங்கிற்கான உடையுடன் வருமாறு கூற, அவர் அந்த உடையுடன் வருவதை பார்க்கும் செழியன் மிகவும் உற்சாகம் அடைகிறார். இதனிடையே, வாக்கிங்கின் போது பலவிதமான கதைகளை பேசும் பாக்கியா, ஒரு கட்டத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து ஜெனி தன்னை எங்கேஜாக வைத்துக் கொள்ளுமாறு அட்வைஸ் செய்கிறார்.
பிரச்சினைக்கு தீர்வு: வேலைக்கு செல்லுமாறும் அல்லது தொடர்ந்து படிக்குமாறும் பாக்கியா கூறுகிறார். இதை ஏற்றுக்கொள்ளும் ஜெனி தான் வீட்டில் சும்மா இருப்பதால்தான் செழியனை பலவாறு டார்ச்சர் செய்வதாக ஒப்புக்கொள்கிறார். இவ்வாறு செழியன் விவகாரத்தில் விரைவில் ஒரு முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் அடுத்ததாக இன்றைய தினமும் ஈஸ்வரி மற்றும் ராதிகாவின் அம்மா கமலா இருவரும் சண்டையிட்டுக் கொள்வதாக காணப்பட்டது. மயூவிடம் ஈஸ்வரி பேச முயல அவர்களிடம் பேச வேண்டாம் என்று கமலா கூறுகிறார். அவர் தன்னுடைய மகனின் வாரிசையே அழிக்க முயன்ற நிலையில் மயூவையும் ஏதாவது செய்துவிடுவார் என்று கமலா குற்றம் சாட்டுகிறார். இதனால் அவர்களுக்குள் சண்டை வலுக்கிறது.


Click it and Unblock the Notifications











