Baakiyalakshmi: இருவீட்டு பிரச்சினை.. தீர்த்துவைத்த பழனிச்சாமி.. கடுப்பான கோபி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் எழிலின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா மற்றும் அதை ஒட்டிய நிகழ்வுகள் காணப்பட்டன. ஜோசப் மற்றும் ஈஸ்வரி இருவரும் குழந்தைக்கு தங்கள் முறைப்படி பெயர் வைக்க வேண்டும் என்று மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொள்ள அந்த சூழலை அங்கு வரும் பழனிச்சாமி மிகவும் சுலபமாக கையாளுவதாக காணப்பட்டது.
இருவருக்கும் இடையில் சுமூகமான சூழலை பழனிச்சாமி ஏற்படுத்துவதை பார்க்க முடிகிறது. இதனால் செழியன், ஜெனி, பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் இதை பார்க்கும் கோபி வழக்கம் போல பழனிச்சாமியை கடுப்புடன் பார்ப்பதையும் பார்க்க முடிந்தது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோட் செழியனின் குழந்தையின் பெயர் சூட்டு விழாவை ஒட்டி அமைந்திருந்தது. தங்கள் முறைப்படி தான் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று ஜெனியின் அப்பா ஜோசப் மற்றும் ஈஸ்வரி இருவரும் மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொள்கின்றனர். இதனால் நிகழ்ச்சி நடப்பது கேள்விக்குறியாகிறது. இதை எப்படி தடுப்பது என்று புரியாமல் செழியன், ஜெனி, பாக்கியா உள்ளிட்ட அனைவரும் திகைக்கின்றனர். இந்நிலையில் அங்கே தன்னுடைய அம்மா மற்றும் அக்காவுடன் என்ட்ரி கொடுக்கிறார் பழனிச்சாமி.
பழனிச்சாமி மீது கடுப்பாகும் கோபி: இதையடுத்து அவரை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடக்கிறது. அவர் தன்னுடைய மகன் போன்றவர் என்று ராமமூர்த்தி கூற, கோபியின் கடுப்பு அதிகமாகிறது. தொடர்ந்து குழந்தைக்கு பெயர் வைக்கும் விஷயம் குறித்து மீண்டும் ஜோசப் மற்றும் ஈஸ்வரி இருவரும் சண்டை போடுகின்றனர். இதனிடையே அவர்கள் இருவருக்கும் இடையில் நுழையும் பழனிச்சாமி குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி சிறப்பாக எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதை இருவருக்கும் புரிய வைக்கிறார். தொடர்ந்து ஜெனி போன்ற அருமையான பெண்ணை அந்த வீட்டிற்கு ஜோசப் கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறார்.
அழகான பெயர் என பாராட்டு: இதைக் கேட்டவுடன் ஜோசப் நெகிழ்ச்சி அடைகிறார். உடனே அவரது கோபம் கொஞ்சம் தணிகிறது. தொடர்ந்து ஈஸ்வரி குழந்தைக்கு வைத்த பெயர் குறித்து கூறுகிறார். யாழினி என்ற பெயரை குழந்தைக்கு ஈஸ்வரி வைக்கிறார். யாழினி என்பது மிக அழகான தமிழ் பெயர் என்றும் இசையின் மூலம் என்றும் பழனிச்சாமி கூற, ஜோசப் மேலும் நெகிழ்ச்சியடைகிறார். உடனே அவரும் இந்த பெயரை ஏற்றுக்கொள்கிறார். இதையடுத்து அந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடக்கிறது. அனைவரும் யாழினி என்ற பெயரை குழந்தையின் காதில் மூன்று முறை கூறுகின்றனர்.
சிறப்பாக நடந்த நிகழ்ச்சி: பழனிச்சாமியையும் குழந்தையின் காதில் பெயரை கூறுமாறு பாக்கியா கூறுகிறார். இதை பார்த்து கோபி கடுப்பாகிறார். முன்னதாக அனைவரிடமும் நல்ல பெயரை பழனிச்சாமி வாங்கியது அவருக்கு கடுப்பை ஏற்படுத்திய சூழலில் தற்போது தன்னுடைய குடும்பத்தை சேராத பழனிச்சாமியை குழந்தையின் காதில் பெயர் சொல்ல சொல்வது ஏன் என கேட்டு அவர் தன்னுடைய மனைவி ராதிகாவிடம் கோபப்படுகிறார். அதற்கு ராதிகாவோ குழந்தை காதில் பெயரை சொல்லாமல் மூக்கிலா சொல்ல முடியும் என்று பேசி கோபியை மேலும் கடுப்பேற்றுகிறார். இந்நிலையில் அனைவரும் பாக்கியா ஏற்பாடு செய்த சமையலை திருப்தியாக சாப்பிட்டு முடிக்க நிகழ்ச்சி நிறைவடைகிறது.
ஈஸ்வரியை காரில் அழைத்து செல்லும் கோபி: அனைவரும் திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பி செல்கின்றனர். வீட்டில் யாரும் இல்லாத சூழலில் தன்னுடைய அம்மாவை கூப்பிட்டுக்கொண்டு தனியாக காரில் ரைட் செல்கிறார் கோபி. ராதிகாவின் கர்ப்பத்தை வெளிப்படுத்த அவர் திட்டமிட்டு தன்னுடைய அம்மாவை தனியாக அழைத்துச் செல்வதாக இன்று எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே காரை ஓட்டிக்கொண்டு செல்லும் கோபியிடம் கடந்த ஒரு வாரமாகவே கோபியும் ராதிகாவும் சரியாக இல்லை என்று கூறும் ஈஸ்வரி, அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேட்பதாகவும் இன்றைய எபிசோடு காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











