பாக்கியலட்சுமி: பாக்கியாதான் சடங்குகளை செய்யனும்.. ஈஸ்வரியின் தீவிரமான முடிவு.. கொந்தளித்த கோபி!

சென்னை: விஜய் டிவியின் பரபரப்பான எபிசோட்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பாகி வரும்நிலையில், இன்றைய எபிசோடிலும் அது தொடர்ந்து வருகிறது. ராமமூர்த்தி காலமான நிலையில், அவரது இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது. இந்த சடங்குகளை கோபி செய்யக்கூடாது என்று ஈஸ்வரி தீவிரமாக கூறுகிறார்.

இதற்கு இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த உற்றார் உறவினர்கள் ஒப்புக் கொள்ளாத நிலையில், இந்த விஷயத்திற்கு உடன்படாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இங்கிருந்து செல்லலாம், நானே தனியாக என்னுடைய கணவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்துக் கொள்கிறேன் என்று ஈஸ்வரி திட்டவட்டமாக கூறுகிறார். தொடர்ந்து கோபி அழுது, ஆர்ப்பாட்டம் செய்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடும் தாத்தாவின் இறுதிச்சடங்குகளை ஒட்டியே காணப்பட்டது. 80வது பிறந்தநாளை மிகவும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்த ராமமூர்த்தி, வீட்டிற்கு வந்தும் அனைவருடனும் மகிழ்ச்சியாக பேசிச்சிரித்து பொழுதை போக்குகிறார். இரவு வெகு நேரமாகியும் அனைவருடனும் உற்சாகமாக அவர் பேசிக் கொண்டிருக்கிறார். பாக்கியா, செல்வி உள்ளிட்டவர்களுக்கும் அவர் அட்வைஸ் செய்கிறார். முன்னதாக கோயிலில் வைத்து எழிலிடமும் அவரது கேரியர் குறித்து நம்பிக்கை கொடுக்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

காலமான ராமமூர்த்தி: இந்நிலையில் அன்றிரவு வெகு நேரம் முழித்துக் கொண்டிருக்கும் அவர், ஒரு கட்டத்தில் தூங்க செல்கிறார். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிய, பாக்கியா, ஈஸ்வரி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் நிலை குலைகின்றனர். இந்நிலையில் தாத்தாவின் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை பழனிச்சாமி, ஜெனியின் அப்பா உள்ளிட்டவர்கள் அனைவரும் சேர்ந்து மேற்கொள்கின்றனர். இறுதிச்சடங்கை செய்ய கோபி தயாரான நிலையில், அவர் ராமமூர்த்திக்கு எந்த சடங்கும் செய்யக்கூடாது, கொள்ளி வைக்கக்கூடாது என்று ஈஸ்வரி உறுதியாக கூறுகிறார். இதனால் கோபி அதிர்ச்சிக்குள்ளாகிறார். இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த உறவினர்களும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர்.

baakiyalakshmi serial vijay tv

அம்மாவிடம் கதறி அழும் கோபி: இதையடுத்து பாரம்பரியமாக நடக்கும் சடங்குகளை மகனை வைத்துதான் செய்ய வேண்டும் என்று அனைவரும் ஈஸ்வரிக்கு அறிவுறுத்துகின்றனர். ஆனால் வாழும்போது தன்னுடைய கடமையை சரியாக செய்யாத கோபி, அவர் இறந்தபின்பு செய்வதால் என்ன பயன் என்று கூறும் ஈஸ்வரி, யாருக்கெல்லாம் தன்னுடைய இந்த முடிவில் உடன்பாடில்லையோ, அவர்கள் அங்கிருந்து சென்றுவிடலாம் என்றும் தானே தன்னுடைய கணவனின் இறுதிச்சடங்கை செய்துக் கொள்வதாகவும் கூறுகிறார். இதனிடையே, இதுபோன்ற தண்டனையை தனக்கு தர வேண்டாம் என்று கோபி மன்றாடுகிறார்.

baakiyalakshmi serial vijay tv

இறுதிச்சடங்கை செய்யும் பாக்கியா: இதையடுத்து ராமமூர்த்திக்கு ஒரே மகன்தான் இருப்பதால், கோபி செய்யவில்லை என்றால் அவருக்கான சடங்குகளை யார் செய்வார்கள் என ராதிகா உள்ளிட்ட அனவைரும் கேட்கின்றனர். இதற்கு தங்களின் மகளாக, தங்களை எப்போதும் அரவணைத்து செல்லும் பாக்கியாதான் ராமமூர்த்தியின் இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்று ஈஸ்வரி உறுதியாக கூறுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். ஈஸ்வரி அடுத்தடுத்து தவறான முடிவை எடுப்பதாக ராதிகா கூறுகிறார். இது தன்னுடைய முடிவில்லை, மரணத்திற்கு முன்பு தன்னுடைய கணவரின் முடிவு என்று ஈஸ்வரி கூறுகிறார்.

கொந்தளிக்கும் கோபி: இதைக் கேட்டு கொந்தளிக்கிறார் கோபி. தன்னுடைய அப்பாவிற்கு செய்ய வேண்டிய இறுதிச்சடங்கை செய்ய விடாமல் பாக்கியா சதி செய்துவிட்டதாகவும், அவரது நடிப்பை அனைவரும் நம்புவார்கள், ஆனால் தான் நம்பமாட்டேன் என்றும் கூறுகிறார். இதையடுத்து பாக்கியாவை இறுதிச் சடங்கை செய்ய ஈஸ்வரி அனுப்புகிறார். நீண்ட அதிர்ச்சிக்கு பிறகு ஈஸ்வரியின் முடிவை ஏற்று நீர் மாலை எடுக்க செல்கிறார் பாக்கியா. இவ்வாறு இன்றைய எபிசோட் மிகவும் சென்டிமெண்ட்டாக காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X