Baakiyalakshmi: என் முன்னாள் கணவருக்கு ஆறுதல் சொல்லும் அளவிற்கு நான் நல்லவ இல்ல.. பாக்கியா அதிரடி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் பாக்கியலட்சுமி சீரியல் 5 ஆண்டுகளை கடந்து 1300க்கும் மேற்பட்ட எபிசோட்களை கொடுத்துள்ள நிலையிலும் தொடர்ந்து அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. கோபியை ராதிகா பிரிந்து சென்ற நிலையில்,அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனால் கோபி மட்டுமில்லாமல் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து ராதிகாவை மீண்டும் அவரது வீட்டிற்கு சென்று பார்க்கிறார் கோபி. ஆனால் அங்கு அவர்கள் அனைவரும் வீட்டை காலி செய்துவிட்டு சென்றது தெரியவருகிறது. இதனால் மனமுடைகிறார் கோபி.

television baakiyalakshmi serial vijay tv

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து 5 ஆண்டுகளை கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். ரீமேக் சீரியலாக இருந்தபோதிலும் தமிழ் ரசிகர்களையும் அவர்களது விருப்பங்களையும் இந்தத் தொடர் பூர்த்தி செய்து வருகிறது. இதனிடையே, இந்த சீரியலில் அடுத்தடுத்த பரபரப்பான கதைக்களத்தை கொடுத்து வருகிறார் இயக்குநர். தன்னுடைய உயிரை காப்பாற்றிய பாக்கியாவை புதிய கண்ணோட்டத்தில் பார்க்கிறார் கோபி. அதனால் தொடர்ந்து பாக்கியாவை வளர விடாமல் செய்ய அவர் மேற்கொண்ட வில்லத்தனங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால் பாக்கியாவின் திறமைகளும் அவரது கண்ணுக்கு தற்போது தெரிகின்றன.

கோபியை பிரிந்த ராதிகா: கோபியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் பாக்கியா வீட்டிற்கு வருகிறார் ராதிகா. ஆனால் அவரால் அங்கு நீண்ட நாட்கள் இருக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கோபியை பிரியும் முடிவை எடுக்கிறார் ராதிகா. தொடர்ந்து கோபியை பாக்கியா வீட்டிலேயே விட்டுவிட்டு மயூவுடன் அங்கிருந்து புறப்படுகிறார். தொடர்ந்து கோபி சமாதானம் செய்ய அங்கு சென்ற நிலையில், அந்த வீட்டை காலி செய்யும் ராதிகா, கோபிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறார். ராதிகாவுடனான பிரிவு தற்காலிகமானதுதான் என்று நினைக்கும் கோபியின் நினைப்பில் மண் விழுகிறது. அவர் மட்டுமில்லாமல் பாக்கியா குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர்.

சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஈஸ்வரி: இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் ஈஸ்வர். தன்னுடைய மகனையும் ராதிகாவையும் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். கோபியின் உடல்நிலையை மனதில் கொள்ளாமல் பிரிந்து சென்ற ராதிகாவை மறந்துவிடும்படி கூறுகிறார். ஆனால் ராதிகாவை மறக்க முடியாமல் தவிக்கிறார் கோபி. தன்னுடைய மகனின் இந்த நிலைமையை நினைத்து இரவு முழுவதும் தூங்காத ஈஸவரி, மாடிக்கு சென்று இரவு முழுவதும் கோபியின் உடல்நிலை சரியாக உள்ளதா என்று பார்த்ததாக செல்வியிடம் கூறுகிறார். இதைக்கேட்டு பாக்கியா எந்தவிதமான ரியாக்ஷனும் காட்டாதது ஈஸ்வரிக்கு கடுப்பை ஏற்படுத்துகிறார்.

நான் நல்லவ இல்லை: சமீப காலங்களில் வீட்டில் நடக்கும் எந்த நிகழ்வுகளிலும் தலையிடாமல் பாக்கியா இருப்பதாக ஈஸ்வரி குற்றம் சாட்டுகிறார். கோபி உடைந்து போயிருப்பதாக ஈஸ்வரி கூற, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசும் பாக்கியா, தான் ஒட்ட வைக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்புகிறார். தன்னுடைய முன்னாள் கணவரையும் அவரது இந்நாள் மனைவியையும் சேர்த்து வைக்க வேண்டுமா என்றும் கேட்கிறார். தொடர்ந்து தனது முன்னாள் கணவருக்கு ஆறுதல் சொல்லும் அளவிற்கு தான் நல்லவள் இல்லை என்றும் ஈஸ்வரியின் முகத்தில் அடித்தாற்போல பாக்கியா கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X