Baakiyalakshmi: மயூவிற்கு பாடம் சொல்லிக் கொடுத்த கோபி.. பொறாமையில் பொங்கிய இனியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து 1300 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகிவரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி மற்றும் அவரது சுயநலமான மனநிலை காரணமாக பாக்கியா மற்றும் ராதிகா என அவரது வாழ்க்கையில் இரு பெண்கள், கோபியின் குழந்தைகள் என அடுத்தடுத்த கதைக்களங்களில் எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
அந்த வகையில் பாக்கியலட்சுமியின் வளர்ச்சியை முறியடிக்கும் நோக்கில் அடுத்தடுத்து செயல்பட்டுவந்த கோபி, தற்போது தன்னுடைய மனநிலையில் மாற்றம் கண்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் போராடிக் கொண்டிருந்த நிலையில் அவரை காப்பாற்றி பாக்கியா அவர் உயிர்பிழைக்க காரணமான நிலையில் அவர் தன்னுடைய பழிவாங்கும் நோக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடர் 1300 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில், சீரியல் எண்ட் கார்ட் போடவுள்ளதாக கூறப்பட்டது. இதையொட்டி, கோபிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதும் அவரை காப்பாற்றி பாக்கியா உயிர்பிழைக்க வைத்ததும் நடந்தது. இதையடுத்து தொடர்ந்து பாக்கியாவை பழிவாங்கும் மனநிலையில் இருந்த கோபியும் மனம் மாறி பாக்கியாவின் நல்ல விஷயங்களை பார்க்கத் துவங்கினார். இவர்களை மீண்டும் இணைத்துப் பார்க்க ஈஸ்வரியும் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
1300 எபிசோட்கள்: ஆனால் இவற்றிலெல்லாம் சிக்கிக் கொள்ள விரும்பாத பாக்கியா தொடர்ந்து கோபியை தன்னுடைய அருகிலேயே வராதபடி பார்த்துக் கொண்டார். மீண்டும் கோபி -ராதிகா இணைய காரணமாக அமைந்தார். அவர்கள் தன்னுடைய வீட்டில் தங்கிய நிலையில், மாமியாரின் மன நிம்மதிக்காக அதை அனுமதித்தாலும் அவர்களிடம் தன்னுடைய வீட்டில் தங்க வாடகை வாங்கிக் கொண்டார். இவர்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் இப்படியாக நடக்க, தொடர்ந்து தன்னிடம் கோபத்தை காட்டிய ஈஸ்வரியையும் வழிக்கு கொண்டு வர முயற்சிக்கிறார் ராதிகா. அவரிடம் தனியாக அழைத்து சென்று மிரட்டும் தொனியில் அவரை கையாள்கிறார்.
கோபியால் ஏற்படும் சிக்கல்கள்: இதனால் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகும் ஈஸ்வரி, ஒரு கட்டத்தில் ராதிகா அங்கு தங்க காரணமான பாக்கியாவிடம் எரிந்து விழுவதாக காணப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய கணவரிடம் தான் இணைவதை ஈஸ்வரி தடுப்பதை கண்டுக் கொள்ளும் ராதிகா, கோபியை விட்டு அகலாமல் நடந்துக் கொண்டதையும் பார்க்க முடிந்தது. இன்றைய தினம் வாக்கிங் செல்ல ஈஸ்வரியும் கோபியும் முயல, அவர்களை தடுத்து கோபியை தன்னுடன் வாக்கிங்கிற்கு அழைத்து செல்கிறார் ராதிகா. இதனால் செய்வறியாமல் முழி பிதுங்குகிறார் ஈஸ்வரி.
பொறாமையால் பொங்கிய இனியா: இதனிடையே கோபி, மயூவிற்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். இதை பார்க்கும் ராதிகா மற்றும் பாக்கியா இருவரும் திருப்தி அடைகின்றனர். ஆனால் ஈஸ்வரியோ கோபத்துடன் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அங்குவந்து இதை பார்க்கும் இனியாவிற்கு பொறாமை ஏற்படுகிறது. கோபியை தன்பக்கம் திருப்பும்வகையிலி கல்லூரியில் நடந்த விஷயங்களை ஒவ்வொன்றாக கூறிக் கொண்டிருக்கிறார். கோபி தொடர்ந்து பாடம் சொல்லிக் கொடுக்கும் நிலையில் இனியாவும் தொடர்ந்து ஈஸ்வரியும் கோபியிடம் கோபம் கொள்வதாக காணப்படுகிறது. இவ்வாறாக இன்றைய எபிசோடில் ஒருவரின் இரு மனைவிகள் ஒற்றுமையாக இருந்தாலும் அவரது குடுமபத்தினர் அதை சாத்தியப்படுத்த மாட்டார்கள் என்பது தெரியவருகிறது.


Click it and Unblock the Notifications











