Baakiyalakshmi serial: எங்கம்மாவை கொலைகாரின்னு சொல்வீங்களா.. மாமியாரிடம் சண்டைக்கு போன கோபி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை சிறப்பாக கவரும் வகையில் காணப்பட்டது. இந்த சீரியலில் இதற்கு ஒரு எண்டே கிடையாதா என்று கேட்கும்வகையில் ஈஸ்வரி மற்றும் ராதிகாவின் அம்மா இடையிலான சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் மயூவிடம் ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்க அங்கே வரும் கமலா, அவரிடம் பேச வேண்டாம் என்றும் அவர் மயூவை ஏதாவது செய்து விடுவார் என்று கூறுவதாகவும் நேற்றைய எபிசோடில் காணப்பட்டது. இதுகுறித்து அப்போது கோபியிடம் ஈஸ்வரி எதுவும் கூறவில்லை. இரவு முழுவதும் அவர் இதுகுறித்து யோசித்து தூங்காமல் இருப்பதாக காணப்பட்டது.

Television Vijay TV Baakiyalakshmi serial

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவர்ந்துவரும் சூழலில் இன்றைய எபிசோடில் கோபி, ராதிகா, ஈஸ்வரி, பாக்கியா மற்றும் ஜெனி உள்ளிட்டவர்களின் காட்சிகள் அதிகமாக காணப்பட்டன. செழியன் -ஜெனி இடையிலான பிரச்சினைகள், மனக் குழப்பங்கள் குறித்து ஜெனியிடம் பேசுகிறார் பாக்கியா. நீண்ட நாட்களாக வாக்கிங் வராத ஜெனியை அழைத்துக் கொண்டு வாக்கிங் செல்லும் பாக்கியா, ஜெனி தன்னை எப்போதும் என்கேஜாக வைத்துக் கொள்ளும்படி கூறுகிறார். வேலைக்கு செல்லும்படியும் அல்லது மேற்படிப்பு ஏதாவது படிக்கும்படியும் ஆலோசனை கூறுவதாக நேற்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாக்கியா குறித்து ஈஸ்வரி பாராட்டு: அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கு கோபியுடன் ஈஸ்வரியும் வாக்கிங் வருகிறார். ஈஸ்வரி ஒரு இடத்தில் அமர்ந்திருக்க அங்கு வரும் ஜெனி மற்றும் பாக்கியா இருவரும் அவரை சந்தித்து பேசுகின்றனர். ஜெனி வாக்கிங்கிற்கான உடையுடன் இருக்க, இதை பார்க்கும் ஈஸ்வரி, தான் அந்த வீட்டில் இல்லாததால் கண்டபடி உடை அணிகிறாயா என்று கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து உடனிருக்கும் பாக்கியா, அவரை பலவாறாக பேசி சமாளிக்கிறார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து செல்கின்றனர். தொடர்ந்து அங்கு வரும் கோபியிடம் தான் இரவெல்லாம் தூங்கவில்லை என்பதை தன்னை பார்த்தவுடன் பாக்கியா கண்டுபிடித்து விட்டதாக ஈஸ்வரி பெருமையுடன் கூறுகிறார்.

கோபி ஆத்திரம்: இதையடுத்து கோபி, அதை கேட்டு வருத்தப்பட வைக்க வேண்டாம் என தான் யோசித்ததாக கூறி சமாளிக்கிறார். இந்நிலையில் ஈஸ்வரி தூங்காததற்கான காரணத்தை கோபி கேட்க, கோபியின் மாமியார் தான் மயூவிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தன்னிடம் மயூ பேச வேண்டாம் என்றும் தான் மயூவை ஏதாவது செய்துவிடுவேன் என்றும் கூறியதை போட்டுடைக்கிறார் ஈஸ்வரி. இதனால் கோபமடையும் கோபி, வீட்டிற்கு வந்து தன்னுடைய மாமியார் கமலாவிடம் ஆத்திரத்துடன் சண்டையிடுகிறார். தன்னுடைய அம்மாவை கொலைகாரி போல சித்தரித்து பேசியதை கண்டிக்கிறார்.

பணத்தை வாங்கிக் கொடுக்கும் பழனிச்சாமி: இதனால் கோபமடையும் ராதிகாவும் மயூவை கூப்பிட்டு விசாரித்து, தன்னை நிம்மதியாக இருக்க விடுமாறு தன்னுடைய அம்மாவிடம் கத்தியபடி கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதையடுத்து பாக்கியாவின் ரெஸ்டாரெண்டை அடுத்த பாரை காலி செய்யும் அதன் ஓனரிடம் சென்று திறப்பு விழாவின்போதுதான் சமைத்ததற்கான பணத்தை கேட்கிறார் பாக்கியா. ஆனால் அவரோ, தான் கண்டிப்பாக கொடுக்க முடியாது என்று கறாராக கூறுகிறார். இதனால் ஆத்திரமடையும் பாக்கியா, அவரிடம் கத்தி பேச, அங்கு வரும் பழனிச்சாமி, அவரை உள்ளே அனுப்பிவிட்டு, பார் ஓனரிடம் பேசி பணத்தை கொடுக்க வைப்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X