Baakiyalakshmi: ரணகளத்திலும் குதூகலம்.. ரெஸ்டாரெண்ட் திறப்பு பிசியிலும் ரொமான்சில் எழில் -அமிர்தா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை அதிகமாக உணர்ச்சி வசப்படும் வைக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியலில் பாக்கியாவின் ரெஸ்டாரெண்ட் திறப்புக்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் அனைவரும் இணைந்து செய்கின்றனர். அமைச்சரின் வருகைக்காகவும் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அமைச்சரை இந்த நிகழ்ச்சிக்கு வர விடாதபடி சூழ்ச்சி செய்யும் கோபி அதை அடுத்தடுத்து அமைச்சரின் பிஏவிடம் உறுதி செய்கிறார். இந்நிலையில் இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தன்னுடைய அப்பாவின் பேச்சையும் கேட்காமல் ஜெனி தன்னுடைய குழந்தையுடன் கிளம்புகிறார்.
இதனால் ஜெனியின் அப்பா ஜோசப் கடுப்புக்கு உள்ளாகிறார். மேலும் இந்த விஷயத்தில் யோசித்து தான் செயல்பட வேண்டும் என்று ஜெனியின் அம்மா அவரிடம் கூறுகிறார். ஆனாலும் இந்த ஏமாற்று குடும்பத்தில் மீண்டும் ஜெனி மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் தான் உறுதியாக உள்ளதாக ஜோசப் கூறுகிறார். இந்நிலையில் கடை திறப்புக்கு வந்த ஜெனி மற்றும் குழந்தையை குடும்பத்தினர் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்கின்றனர். பாக்கியா ஆனந்த கண்ணீருடன் ஜெனியை கட்டிக் கொள்கிறார். ஆனால் குழந்தையுடன் கொஞ்சிப் பேச முடியாத நிலையில் செழியன் எட்டி நிற்கிறார். அவரது இந்த நிலைமை ஜெனியை மட்டுமில்லாமல் குடும்பத்தினரையும் சங்கடத்திற்கு உள்ளாக்குகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. தற்போது ரெஸ்டாரெண்ட் துவக்க விழாவிற்காக பாக்கியா மற்றும் குடும்பத்தினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஜெனியுடனான விவாகரத்து வழக்கு இருந்தாலும் இந்த ரெஸ்டாரெண்ட் திறப்பிற்கு தன்னுடைய அம்மாவிற்கு பக்கபலமாக இருக்கிறார் செழியன். எழில், அமிர்தா, செல்வி மற்றும் பாக்கியாவின் மாமனார், மாமியார் என அனைவரும் இந்த திறப்புவிழாவில் மிகவும் உற்சாகமாக பங்கேற்கின்றனர். இந்நிலையில் கோபி வழக்கம்போல பாக்கியாவின் வளர்ச்சியை குலைக்க சதித்திட்டம் தீட்டுகிறார்.
சதித்திட்டம் தீட்டும் கோபி: கோபி தன்னுடைய நிறுவனத்தை மூடியதை தொடர்ந்து வேலையில்லாமல் அவதிக்குள்ளான நிலையில் அவருக்கு உதவும் நோக்கத்தில் தன்னுடைய ரெஸ்டாரெண்ட்டில் அவர் மேனேஜர் போஸ்ட்டில் வேலை செய்வாரா என்று பாக்கியா கேட்டதை தனக்கான அவமானமாக கருதும் கோபி, பாக்கியாவின் ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவிற்கு அமைச்சர் வரமுடியாதபடி சதி செய்கிறார். அமைச்சரின் பிஏவை வைத்து அவர் இதை செயல்படுத்துகிறார். மேலும் அடுத்தடுத்து அமைச்சரின் பிஏவிடம் கால் செய்து இதை உறுதிப்படுத்துகிறார். இதை அறியாத அமைச்சரும் பாக்கியா ரெஸ்டாரெண்ட்டுக்கு வராமல், பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு செல்கிறார்.
ரெஸ்டாரெண்ட் திறப்புவிழா: இந்நிலையில் பாக்கியாவின் ரெஸ்டாரெண்ட் திறப்புவிழாவிற்கு தன்னுடைய குழந்தையுடன் செல்ல முற்படுகிறார் ஜெனி. ஆனால் இதை பிடிக்காத அவரது அப்பா, அவர் செல்வது குறித்து கோபத்துடன் கேள்வி எழுப்புகிறார். ஆனால் தன்னுடைய குழந்தையுடன் ஜெனி விழாவிற்கு புறப்பட்டு செல்கிறார். இதனால் ஜோசப் கடுப்பாகிறார். இதையடுத்து அவரிடம் பேசும் ஜெனியின் அம்மா, ஜெனி எந்த காலத்திலும் செழியனை விவாகரத்து செய்ய மாட்டாள் என்றும் இந்த விஷயத்தில் யோசித்துதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார். ஆனால் இதை ஏற்காத ஜோசப், செழியன் மற்றும் ஜெனிக்கு உடனடியாக விவாகரத்து கிடைக்க தான் ஏற்பாடு செய்யப் போவதாக கூறுகிறார்.
எழில் -அமிர்தா ரொமான்ஸ்: இதனிடையே ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவில் பம்பரமாக வேலை செய்கின்றனர் அமிர்தா மற்றும் எழில். ஆனாலும் இடையில் அமிர்தாவை பார்க்கும் எழில், அன்றைய தினம் அவர் மிகவும் அழகாக இருப்பதாக கூறுகிறார். கோபியின் சதியால் இந்த ரெஸ்டாரெண்ட் திறப்புக்கு அமைச்சர் வருவாரா, திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ரணகளத்திலும் எழில் மற்றும் அமிர்தாவின் இந்த ரொமான்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு ஜெனி குழந்தையுடன் வருவதாகவும் அவரை எப்படி எதர்கொள்வது என்பது தெரியாமல் செழியன் தவிப்பதும் இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.
திறப்பு விழாவிற்கு வந்த ஜெனி: இதனிடையே ஜெனியை பாக்கியா, அமிர்தா, எழில், இனியா உள்ளிட்டவர்கள் உற்சாகத்துடன் எதிர்கொள்கின்றனர். ஜெனியை கட்டிப்பிடித்து தன்னுடைய ஆதங்கத்தை கண்ணீருடன் வெளிப்படுத்துகிறார் பாக்கியா. இதனால் அந்த இடத்தில் நெகிழ்ச்சியான சூழல் ஏற்படுகிறது. குழந்தையை அமிர்தா, இனியா, பாக்கியா என மாற்றி மாற்றி கொஞ்சுகின்றனர். ஆனால் தன்னுடைய குழந்தையை தன்னுடைய கையால் தொட முடியாத நிலையில் செழியன் தன்னுடைய தவிப்பை வெளிப்படுத்துகிறார். இதை பார்க்கும் எழில் என்ன சொல்வதென்று தெரியாமல் தவிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











