Baakiyalakshmi serial: ராதிகா கர்ப்பத்தை வெளிப்படுத்திய கோபி.. திணறிப்போன ஈஸ்வரி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் சிறப்பாகவே அமைந்திருந்தது. நீண்ட நாட்களாக தன்னுடைய அம்மா மற்றும் குடும்பத்தினரிடம் ராதிகாவின் கர்ப்பம் குறித்து வெளிப்படுத்தாமல் மறைத்து வந்தார் கோபி. இந்நிலையில் செழியன் மகளின் பெயர் சூட்டு விழா நிறைவடைந்ததை தொடர்ந்து சந்தர்ப்ப சூழல் பார்த்து தன்னுடைய அம்மாவை தனியாக அழைத்து சென்று ராதிகாவின் கர்ப்பம் குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.
ராதிகாவின் கர்ப்பம் குறித்து கேட்டு ஈஸ்வரி மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். இந்த விஷயம் கோபியின் மகன்களுக்கு தெரிந்தால் அவரை அவர்கள் வெறுத்து விடுவார்கள் என்று கூறுகிறார் ஈஸ்வரி. மேலும் இந்த குழந்தை விவகாரம் இனியாவின் திருமணத்தையும் பாதிக்கும் என்று சுட்டிக் காட்டுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது. இன்றைய எபிசோடில் நீண்ட நாட்களாக தன்னுடைய அம்மாவிடம் மறைத்து வந்த ராதிகாவின் கர்ப்பம் குறித்த ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார் கோபி. செழியன் மகளின் பெயர் சூட்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்ததை அடுத்து வீட்டில் அனைவரும் இல்லாத சூழலில், தன்னுடைய அம்மா ஈஸ்வரியை காரில் அழைத்து செல்கிறார் கோபி. காரில் வைத்து இந்த விஷயம் குறித்து பேசுகிறார்.
அமிர்தா கர்ப்பமா என கேள்வி: கோபியின் முகம் கடந்த ஒரு வாரமாக சரியாக இல்லை என்றும் ராதிகாவின் முகமும் மாறியுள்ளதாகவும் கூறும் ஈஸ்வரி, அவர்களுக்குள் பிரச்சனையா என்று கேட்கிறார். இதற்கு பதில் கூற முடியாமல் திகைக்கும் கோபி, தொடர்ந்து தன்னுடைய வீட்டில் புதிதாக குழந்தை வர போவதாக கூறுகிறார். எழிலின் மனைவி அமிர்தா தான் கர்ப்பமாகியுள்ளதாக நினைக்கும் ஈஸ்வரி, உடனடியாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். உடனே கோபி அமிர்தா கர்ப்பமாக இருந்தால் ஏழில் உடனடியாக தன்னுடைய அம்மா பாக்கியாவிடம் தான் கூறுவான் என்றும் தன்னிடம் கூற மாட்டான் என்றும் தெளிவு படுத்துகிறார்.
திகைப்பில் ஈஸ்வரி: இதை கேட்டதும் உண்மையை உணரும் ஈஸ்வரி திகைப்புடன் கோபியை பார்க்க, உங்கள் மகன் தான் அப்பாவாக போகிறான் என்று கூறுகிறார் கோபி. இதைக் கேட்கும் ஈஸ்வரி திகைக்கிறார். அந்த காலத்தில் அம்மாவும் மகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருப்பார்கள், இதெல்லாம் சகஜம்தான், ஆனால் இந்த காலகட்டத்தில் கோபி தாத்தாவாகியுள்ள சூழலில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக மாறுவது சரியாக இருக்காது என்றும் ஏற்கனவே கோபியின் இரண்டாவது திருமணம் தங்களது குடும்பத்தை பாதித்துள்ளதாகவும் ஈஸ்வரி சுட்டிக்காட்டுகிறார். மேலும் கோபியின் அடுத்தடுத்த இரண்டு மகன்களுக்கு திருமணமான சூழலில் இன்னும் சில வருடங்களில் இனியாவிற்கும் திருமணம் நடக்கும் என்றும் கோபியின் இந்த விஷயம் இனியாவின் திருமணத்தை பாதிக்கும் என்றும் ஈஸ்வரி கூறுகிறார்.
ஆத்திரமடையும் ஈஸ்வரி: தொடர்ந்து இந்த குழந்தை வேண்டாம் என்றும் தான் இது குறித்து ராதிகாவிடம் பேசுகிறேன் என்றும் தான் கூறினால் ராதிகா ஒப்புக்கொள்வார் என்றும் ஈஸ்வரி கூறுகிறார். தான் முன்னதாகவே ராதிகாவிடம் இது குறித்து பேசியதாகவும் ஆனால் அவள் தங்களுடைய உறவுக்கு ஆதாரமாக இந்த குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதாகவும் ராதிகாவின் அம்மாவும் இதையே கூறுவதாகவும் கோபி ஈஸ்வரியிடம் தெரிவிக்கிறார். இதைக்கேட்டு ஈஸ்வரி ஆத்திரமடைகிறார். அம்மாவுக்கும் பெண்ணுக்கும் பைத்தியமா பிடித்திருக்கிறது என்று கேட்கிறார். தொடர்ந்து இருவரும் வீடு வந்து சேர்கின்றனர்.
ராதிகா ஆத்திரம்: அங்கு வந்தவுடன் சொம்பு நிறைய தண்ணீர் வாங்கி குடிக்கும் ஈஸ்வரி மிகவும் பதட்டத்துடன் இருப்பதை பார்த்து பாக்கியா என்ன ஆயிற்று என்று அடுத்தடுத்து விசாரிக்கிறார். இந்நிலையில் ராதிகாவை பார்க்க அவரது அறைக்கு செல்கிறார் ஈஸ்வரி. மூட்டுவலியையும் மீறி மாடியேறி சென்று ராதிகாவை சந்திக்கிறார். ராதிகாவிடம் தனக்கு உண்மை தெரியும் என்று கூறும் ஈஸ்வரி, இந்த குழந்தை வேண்டாம் என்று கூறுகிறார். இதைக் கேட்டு ஆத்திரமடையும் ராதிகா, குழந்தை வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து தானும் கோபியும் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உறுதியாக கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
எழில் -செழியன் ரியாக்ஷன்?: தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி ராதிகாவின் கர்ப்பத்தை குடும்பத்தினரிடமும் குறிப்பாக தன்னுடைய அம்மாவிடமும் மறைத்து வந்தார் கோபி. இந்நிலையில் ஒரு வழியாக சந்தர்ப்பம் சூழல் பார்த்து அவர் தன்னுடைய அம்மாவிடம் ராதிகாவின் கர்ப்பம் குறித்து கூறுகிறார். இந்நிலையில் ஈஸ்வரி மிகப்பெரிய அதிர்ச்சியடைகிறார். தொடர்ந்து குடும்பத்தில் உள்ளவர்கள் குறிப்பாக கோபியின் மகன்கள் இதைக் கேட்டால் கோபியை வெறுத்து விடுவார்கள் என்று ஈஸ்வரி கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது. உண்மையில் அவர்களுக்கு அடுத்தடுத்த எபிசோடுகளில் விஷயம் தெரிய வரும்போது என்ன மாதிரி ரியாக்ட் செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











