பாக்கியலட்சுமி: அப்பான்னு கூப்பிட்டுக்கிறேன்.. சுடுகாட்டில் கதறிய பாக்கியா.. மன்னிப்பு கேட்ட கோபி!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தியின் இறுதிப்பயணத்தையொட்டிய காட்சிகள் காணப்பட்டன. இந்த சீரியலில் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய 80வது பிறந்தநாளை குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாடிய ராமமூர்த்தி அன்றிரவே தூக்கத்திலேயே காலமானார்.
மிகவும் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்த ராமமூர்த்திக்கு மிகவும் அமைதியான மறைவு கிடைத்துள்ளதாக ஈஸ்வரி மட்டுமில்லாமல் பழனிச்சாமி, ஜெனியின் அப்பா உள்ளிட்ட அனைவரும் நிம்மதியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் கோபி ராமமூர்த்திக்கு கொள்ளி வைக்கக்கூடாது என்பதில் ஈஸ்வரி உறுதியாக இருந்து பாக்கியாவை சடங்குகள் அனைத்தையும் செய்ய வைத்தார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தியின் இறுதிப்பயணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. வழக்கமாக சீரியலில் ஒருவர் உயிரிழந்தால் அவரது சில சடங்குகளை மட்டுமே காண்பிப்பது வழக்கமாக உள்ள நிலையில், தற்போது இந்த சீரியலில் நடைமுறையில் உள்ள ஒவ்வொரு சடங்கையும் நடத்தி முடித்துள்ளனர். ராமமூர்த்தியின் உடலுக்கு எண்ணெய் சீயக்காய் வைப்பது முதல் குளிப்பாட்டுவது வரை அனைத்து சடங்குகளும் நடத்தப்பட்டுள்ளன. உண்மையில் ஒருவர் உயிரிழக்க நேர்ந்தால் என்னென்ன விஷயங்கள் செய்யப்படுமோ அனைத்தும் தற்போது இந்த சீரியலில் நடத்தப்பட்டுள்ளது.
ராமமூர்த்தி மறைவு: பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி கேரக்டர் மிகவும் பாசிட்டிவ்வாக துவக்கம் முதலே காட்டப்பட்டு வந்தது. பாக்கியாவிற்கு எதிராக கோபி, ஈஸ்வரி மட்டுமில்லாமல் செழியன், இனியாவும் நடந்த போதிலும் ராமமூர்த்தி மற்றும் எழில் என இருவரும் பாக்கியாவிற்கு எப்போதுமே சப்போர்ட்டாக இருந்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் ராமமூர்த்தியின் மறைவு பாக்கியாவிற்கு மிகப்பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது. கோபி ராமமூர்த்திக்கு கொள்ளி வைத்தால் அவரது கட்டை வேகாது என்பதில் ஈஸ்வரி மிகவும் உறுதியாக இருக்கிறார். கடைசியாக தன்னுடைய கணவன் தன்னிடம் கேட்டதை அவர் அப்படியே செயல்படுத்துகிறார்.
தள்ளி நின்ற கோபி: சாவிற்கு வந்த அனைவரும் பெண்கள் இத்தகைய சடங்குகளை செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க, அவர்களை காட்டிலும் ஈஸ்வரி மிகவும் உறுதியாக காணப்படுகிறார். இதையடுத்து மூன்றாவது மனிதன் போல கோபி தள்ளி நின்று தன்னுடைய அப்பாவின் இறுதிச் சடங்குகளை பார்த்ததை இன்றைய எபிசோடில் காண முடிந்தது. ராமமூர்த்தியின் இறுதிச் சடங்குகள் சிறப்பாக நடந்து சுடுகாட்டிலும் சடங்குகள் செய்யப்படுகின்றன. எப்போதும் ஒருவர் மறைந்துவிட்டால் அவரது இறப்பை காட்டிலும் இத்தகைய சடங்குகளே அதிகமானஅழுகையை வரவழைக்கும்.

அப்பா என்று அழைத்த பாக்கியா: அதே மனநிலையை தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. இந்த கேரக்டரில் நடித்துள்ள நடிகர் ரோசாரியோ நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டிக் கொள்ளும்வகையில் அடுத்தடுத்து அவருக்கு செய்யப்பட்ட சடங்குகள் ரசிகர்களை வதைத்துள்ளன. இதனிடையே சுடுகாட்டில் கடைசியாக ராமமூர்த்தியின் முகத்தை பார்க்கும் பாக்கியா, அனைத்து விஷயங்களிலும் தனக்கு சப்போர்ட்டாக இருந்த ராமமூர்த்தியை தான் எப்போதுமே மாமா என்றே அழைத்ததாகவும் அவரை அப்பா என்று அழைத்துக் கொள்வதாகவும் கூறி, அப்பா என்று கதறலுடன் அழைக்கிறார்.
ராமமூர்த்தியின் இறுதிப்பயணம்: தொடர்ந்து பாக்கியா ராமமூர்த்திக்கு கொள்ளி வைக்கிறார். ராமமூர்த்தியின் இறுதிப்பயணம் சிறப்பாகவே அமைகிறது. ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழலாம் என்பதற்கு உதாரணமாக இந்தக் கேரக்டர் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இந்த கேரக்டர் இனி இல்லை என்பதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, கோபியும் தன்னுடைய அப்பாவின் சிதையின் முன்பு மண்டியிட்டு வணங்கி, தான் செய்த தவறுகளை மன்னித்துவிடும்படி மன்றாடுவதாகவும் இன்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











