Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா குறித்து அம்மா போடும் கணக்கு.. நிறைவேறுமா கல்யாண கனவு?
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து பல ஆண்டுகளாக வெற்றி நடை போட்டு வரும் பாக்கியலட்சுமி தொடர் 1000 எபிசோடுகளை கடந்து ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது. ஸ்ரீமோயி என்ற பெங்காலி சீரியலை தழுவி பாக்கியலட்சுமி தொடர் எடுக்கப்பட்டு வரும் சூழலிலும் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் இதில் ஏராளமான சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன.
தன்னுடைய கணவனை விட்டு பிரிந்த போதிலும் அவருடைய அம்மா, அப்பாவை தன்னுடைய சொந்தங்களாக நினைத்து அவர்களையும் சேர்த்து வாழ வைத்து வருகிறார் பாக்கியா. இருந்தபோதிலும் தன்னுடைய மகனின் வளர்ச்சிக்காகவே ஈஸ்வரி தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். இது குறித்து தெரிந்த போதிலும் அது குறித்து கவலை கொள்ளாமல் பாக்கியா தொடர்ந்து தன்னுடைய வெற்றியையும் குடும்ப சந்தோஷத்தையும் மட்டுமே பிரதானமாக கொண்டு நடந்து வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி தொடர் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது. சேனலின் இரண்டாவது முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி தொடர், விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ளதாக கூறப்பட்டாலும் அதற்கான எந்த முகாந்திரமும் இந்த சீரியலில் காணப்படவில்லை. செழியன் மற்றும் எழில் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட சூழலில் தற்போது அவர்களது வாழ்க்கையில் அடுத்த பிரச்சினைகளை புகுத்தி வருகிறார் இயக்குனர்.
பாக்கியா நம்பிக்கை: இதனிடையே பாக்கியலட்சுமி ரெஸ்டாரெண்ட் பார்க்கிங் பிரச்சினை பழனிச்சாமியால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது, இருந்தபோதிலும் தொடர்ந்து அவரது ரெஸ்டாரெண்டிற்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வராத சூழல் காணப்படுகிறது. விரைவில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் பாக்கியா. இந்நிலையில் பழனிச்சாமியின் 45வது பிறந்த நாளை விமரிசையாக ஏராளமானவர்களை கூப்பிட்டு நடத்த வேண்டும் என்று அவரது அம்மா திட்டமிடுகிறார். இதையொட்டி பாக்கியாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து பேசும் அவர், இந்த கொண்டாட்டத்தின் சமையல் கான்டிராக்டை பாக்கியாதான் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.
பருப்பு உருண்டை குழம்பு +மட்டன் தொக்கு: இதற்கு ஒப்புக்கொள்ளும் பாக்கியா முன்னதாக பழனிச்சாமியின் அம்மாவை பார்ப்பதற்காக பருப்பு உருண்டை குழம்பும் மட்டன் தொக்கும் செய்து எடுத்து வருகிறார். இதை கேட்டு பழனிச்சாமி மற்றும் அவரது அம்மா இருவரும் உற்சாகம் கொள்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே பாக்கியாவையும் பழனிச்சாமியும் உட்கார்ந்து பேசுமாறு கூறிவிட்டு அவரது அம்மா அங்கிருந்து நகர்கிறார். தொடர்ந்து பழனிச்சாமியும் பாக்கியாவும் தனியாக பேசுவதை பார்த்து அவரது மனம் வேறு மாதிரியான கணக்கு போடுகிறது. அவர்களது ஜோடிப் பொருத்தத்தை மகிழ்ச்சியுடன் பார்க்கிறார் அவர்.
அம்மா போடும் கணக்கு: முன்னதாக பாக்கியாவிடம் அவரது வயது என்ன என்று கேட்கிறார். அதற்கு 43 என்று பாக்கியா கூற பழனிச்சாமியை விட இரு வயது சிறியவர்தான் என்று பழனிச்சாமியின் அம்மா கூறுவதாக இந்த எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் எண்ணம் அவருக்கு தோன்றியுள்ளதாக தெரிகிறது. முன்னதாக பழனிச்சாமி மற்றும் பாக்கியா இருவரும் நெருங்கி பழகுவதாகவும் அதை அவர் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோபி, அவரிடம் வந்து சண்டை போட்டுவிட்டு சென்ற சூழலில் அவர்கள் இருவரும் விரும்பும் பட்சத்தில் இந்த திருமணத்தை தானே நடத்தி வைப்பேன் என்று அதிரடியாக அவர் கூறினார்.
பழனிச்சாமி பிறந்தநாள்: இந்நிலையில் தற்போது பழனிச்சாமியின் பிறந்த நாளை வெகு விமர்சியாக கொண்டாட திட்டமிடும் அவர், அந்த தருணத்தில் வைத்து இதுகுறித்து பாக்கியாவிடம் ஏதாவது பேசுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முன்னதாக தன்னுடைய கணவனை மிகவும் ஃபிரியாக விட்டுவைத்திருந்த ஜெனி, தற்போது தொட்டதெற்கெல்லாம் செழியனிடம் கேள்வி எழுப்புவதையும பார்க்க முடிந்தது. தன்னுடைய மனைவியின் கேள்விகளுக்கு செழியனும் பொறுமையாக பதிலளிப்பதையும் பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











