Baakiyalakshmi serial: சினிமா ஆசையை தூக்கிப்போடு.. எழிலை கடுமையாக பேசிய ஈஸ்வரி!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் புதிதாக ஒரு புரொடியூசரை சந்தித்து கதை சொல்ல முற்படுகிறார் எழில். ஆனாலும் அவரது முயற்சியில் அவர் தீவிரமாக இயங்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டுவதாக புதிய புரொட்யூசர் குற்றம் சாட்டுகிறார்.
முன்னதாக அமிர்தாவை திருமணம் செய்வதற்காக தயாரிப்பாளர் ஒருவரின் மகளை திருமணம் செய்யாததால் எழிலில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தொடர்ந்து அவருக்கு தள்ளிப் போய் வருகின்றன. இதனால் தன்னுடைய கனவை நனவாக்க முடியாமல் தவித்து வருகிறார் எழில். இந்நிலையில் சினிமா ஆசையை தூக்கிப் போடுமாறு தொடர்ந்து ஈஸ்வரி அவரை திட்டுவதையும் பார்க்க முடிகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை சிறப்பாக கவரும் வகையில் அமைந்திருந்தது. ஈஸ்வரி மற்றும் இனியா தொடர்பான பிரச்சனைகளை அடுத்தடுத்து எதிர்கொண்ட பாக்கியா மற்றும் குடும்பத்தினர் தற்போது ஆசுவாசப்பட்டு வருகின்றனர். ஆனால் எழிலின் இயக்குநர் கனவு அவரை விட்டு தொலைதூரத்தில் போவதாக அடுத்தடுத்த நிகழ்வுகள் காணப்படுகின்றன. முன்னதாக தயாரிப்பாளர் ஒருவரிடம் கதையை பைனல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் ஈஸ்வரியின் கைது பிரச்சனை வந்ததால் எழிலால் தயாரிப்பாளரை சந்தித்து பேச முடியவில்லை.
கடுப்பேற்றிய தயாரிப்பாளர்: இதனால் எழிலின் அடுத்தப்படம் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் புதிய தயாரிப்பாளர் ஒருவரை எழில் சந்திக்கிறார். அவரிடம் தன்னுடைய சூழ்நிலையை விளக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவர் எதிலும் பிரச்சனையை யோசிக்காமல் உண்மையாக சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பேன் என்றும் பொழுதுபோக்குகளுக்காக எழில் சினிமாவிற்கு வந்துள்ளதாகவும் கூறி அவரை வெளியேற்றுகிறார். இதனால் வருத்தத்துடன் வெளியேறும் எழில் தன்னுடைய நண்பனிடம் இது குறித்து கூறி குறைபட்டுக் கொள்கிறார்.
அதிர்ச்சி கொடுத்த ஜெனி: இதனிடையே, வீட்டில் அனைவரும் ஒவ்வொரு வேலையும் செய்து கொண்டிருக்க, ஒவ்வொருவராக சென்று தான் உதவி செய்யட்டுமா என்று இனியா கேட்பதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது. தன்னுடைய அம்மாவிடம் தனக்கு சமையல் கற்று தரும்படி கேட்கிறார் இனியா. செமஸ்டர் லீவில் தான் கற்றுக் கொடுப்பதாக பாக்கியா உறுதி அளிக்கிறார். இந்நிலையில் இனியாவை அழைத்து பேசும் ஜெனி, அவருக்கு தான் சமையல் கற்றுக் கொடுப்பதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். இந்நிலையில் தன்னுடைய அம்மாவிடம் வீட்டு செலவிற்காக காசு கொடுக்கிறார் செழியன்.
எழிலிடம் ஈஸ்வரி கடுமை: ஏற்கனவே அக்கவுண்டில் காசு போடும் நிலையில் இது எதற்கு என்று பாக்கியா செழியனிடம் கேட்கிறார். அக்கவுண்டில் போடும் காசை பாக்கியா எடுப்பதே இல்லை என்றும் அதனால்தான் கையில் காசு கொடுப்பதாகவும் செழியன் கூறுகிறார். பாக்கியா வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தும் அவர் கையில் காசை திணிக்கிறார் செழியன். இதை வெளியில் இருந்தபடி எழில் பார்க்கிறார். இந்நிலையில் தான் வீட்டிற்கு காசு கொடுக்காதது குறித்து அவர் வருத்தத்துடன் யோசிக்கிறார். அவர் வீட்டுக்கு உள்ளே வரும் சூழலில் அவரிடம் ஈஸ்வரி கடுமையாக பேசுகிறார்,

சினிமா ஆசையை தூக்கிப்போடு: சினிமா ஆசையை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு எழில் தகுதிக்கு ஏற்றபடி வேலையில் அமரும்படி ஈஸ்வரி கூறுகிறார். எழில் வயதில் அனைவரும் இரண்டு குழந்தைகளுடன் செட்டில் ஆகி உள்ள நிலையில் எழில் சினிமா ஆசையில் சுற்றிக்கொண்டு இருப்பதாக கடுமையாக கூறுகிறார். செழியன் வீட்டிற்கு காசு கொடுக்கும் நிலையில் எழில் அதுபோல எந்த உதவியும் செய்யாமல் இருப்பது குறித்தும் சுட்டிக்காட்டுகிறார். இதைப் பார்க்கும் ராமமூர்த்தி, பாக்கியா அவரை தடுக்கின்றனர். இருந்தபோதிலும் ஈஸ்வரி தான் கூறுவது கஷ்டமாக இருந்தாலும் அதில் உள்ள நியாயத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து கூறுகிறார். இதனால் எழில் மிகுந்த வருத்தத்திற்குள்ளாகிறார்.


Click it and Unblock the Notifications











