Baakiyalakshmi: நான் உனக்கு அப்பனும் இல்லை.. நீ எனக்கு பிள்ளையும் இல்லை.. கோபியை வெறுத்த அப்பா!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு ராதிகாவை கொலை செய்ய முயன்றதாக கமலா கொடுத்த புகாரையடுத்து ஈஸ்வரியை போலீசார் கைது செய்து கொண்டு அழைத்துச் செல்வதாக காணப்பட்டது. இந்த விஷயம் எதுவுமே தெரியாமல் அங்கு வரும் கோபியை ராமமூர்த்தி, எழில், செழியன், இனியா என அனைவரும் திட்டுவதாகவும் வெறுப்புடன் பார்ப்பதாகவும் காணப்பட்டது.
இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு சென்ற ஈஸ்வரியை மீட்டுக் கொண்டு வருவதற்காக வக்கீலுடன் குடும்பத்தினர் அங்கு செல்கின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் நீதிமன்றத்தில் சென்று தான் எதையுமே எதிர்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞரும் கூறும் சூழலில் ஈஸ்வரியை போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவை கொலை செய்ய முயன்றதாக ஈஸ்வரி மீது கமலா கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்கின்றனர். இதையடுத்து வீட்டு வாசலில் வைத்து கோபியை ராமமூர்த்தி, செழியன், எழில், இனியா என அனைவரும் திட்டித் தீர்க்கின்றனர். கோபியை முழுமையாக நம்பிய ஈஸ்வரிக்கு சரியான பாடம் கற்றுக் கொடுத்ததாக கோபியை ராமமூர்த்தி ஆத்திரத்துடன் பேசுகிறார். இனிமேல் தான் கோபிக்கு அப்பாவும் இல்லை, அவர் தனக்கு மகனும் இல்லை என்று ஆத்திரத்துடன் அவர் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
கோபி சண்டை: இந்நிலையில் தன்னுடைய அம்மா கைது செய்யப்படுவதற்கு காரணம் தன்னுடைய மனைவி ராதிகா தான் என்று நினைத்து வீட்டிற்கு வந்து சண்டையிடுகிறார் கோபி. ராதிகாவிற்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தால் தான் தன்னுடைய அம்மாவை தான் வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் ஆனால் தற்போது உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அவர் மீது போலீசில் புகார் கொடுத்து கைது செய்ய ராதிகா காரணமாக இருந்தது குறித்தும் கோபி சண்டையிடுகிறார். இதற்காக வேலைக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு மறைமுகமாக சென்று புகார் அளித்தாயா என்பதாக அவர் பலவாறாக ராதிகாவிடம் கேள்வி எழுப்புகிறார்.
ஆத்திரத்தின் உச்சத்தில் கோபி: இதையடுத்து அங்கு வரும் கமலா, இந்த விஷயத்திற்கும் ராதிகாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தான்தான் அந்த புகாரை கொடுத்தேன் என்றும் கூறுகிறார். இதனால் கோபியின் ஆத்திரம் இன்னும் உச்சத்தை அடைகிறது. கமலாவால் தான் அந்த வீட்டின் நிம்மதி பறிபோனதாக கூறும் கோபி, தன்னுடைய அம்மாவிற்கு ஏதாவது ஒன்று நிகழ்ந்தால், ராதிகாவையும் கமலாவையும் தான் உயிரோடு விடமாட்டேன் என்று ஆத்திரத்துடன் கூறுகிறார் கோபி. இதனால் ராதிகா மிகுந்த பயத்துடன் காணப்படுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
ஈஸ்வரியிடம் ஸ்டேட்மெண்ட்: இந்நிலையில் பாக்கியா, ராமமூர்த்தி, எழில், செழியன் என அனைவரும் போலீஸ் நிலையத்திற்கு வக்கீலுடன் சென்று அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். அங்கு ஈஸ்வரியிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கிக் கொள்ளும் போலீஸ் அதிகாரி, நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த அழைத்து செல்கிறார். இதையடுத்து வெளியில் வரும் வழக்கறிஞர் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என்றும் நீதிமன்றத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார். இவ்வாறாக இன்றைய எபிசோடில் அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகள் காணப்படுகின்றன.
குடும்பத்தினர் பரிதவிப்பு: ஈஸ்வரி மிகவும் பயந்து போய்விடுவாள் என்று ராமமூர்த்தி வெளியில் நின்றபடி கதறிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ராதிகா மற்றும் கமலாவிடம் ஆத்திரத்துடன் பேசிவிட்டு காவல் நிலையத்திற்கு கோபியும் வருகிறார். அங்கு ராமமூர்த்தி அவரை சட்டையை பிடித்து கேள்வி எழுப்பி அங்கிருந்து செல்லுமாறு திட்டித் தீர்க்கிறார். தான் எதுவும் செய்யவில்லை என்று கோபி கூற முயன்ற நிலையில் அவரது பேச்சு அங்கு எடுபடாமல் போகிறது. இந்நிலையில் ஈஸ்வரியை நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து செல்கின்றனர்.இதை பார்த்து ராமமூர்த்தி, பாக்கியா உள்ளிட்ட அனைவரும் கதறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











