Baakiyalakshmi serial: மயங்கி விழுந்த ஈஸ்வரி.. என்ன நடக்குமோ.. குடும்பத்தினர் பரிதவிப்பு!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் பரபரப்பான காட்சிகளுடன் காணப்பட்டது. இன்றைய எபிசோடிலும் தொடர்ந்து வழக்கம் போல ஈஸ்வரி மற்றும் கமலா இருவரும் சண்டையிட்டு கொள்கின்றனர். இதையடுத்து அங்கு வரும் ராதிகா, அவர்கள் இருவரிடமும் ஆத்திரத்துடன் கத்துகிறார். இதனால் இருவருமே மனவருத்தம் கொள்வதாக காணப்பட்டது.

இதனிடையே தன்னுடைய அறைக்குள் சென்று ஈஸ்வரி கதவை சாத்தி கொள்கிறார். தொடர்ந்து அவர் இரவு வரை எதுவும் சாப்பிடாத நிலையில் அவருக்கு லோ சுகர் ஏற்பட்டு மயக்கம் அடைகிறார். மாலை தன்னுடைய அலுவலக வேலைகளை நிறைவு செய்து விட்டு வரும் கோபி தன்னுடைய அம்மாவின் நிலைமையை பார்த்து விட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.

Television Baakiyalakshmi serial Vijay TV

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மிகச் சிறப்பாக மற்றும் பரபரப்பாக அமைந்திருந்தது. இன்றைய தினம் எப்போதும் போல ஈஸ்வரி மற்றும் கமலா இருவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். முன்னதாக தங்களுக்குள் நடந்த சண்டையை தன்னுடைய மகனிடம் கூறி அதை பெரிதாக்கியது குறித்து கமலா ஈஸ்வரியிடம் கேள்வி கேட்டு சண்டை இடுகிறார். இதற்கு பதில் சொல்லும் ஈஸ்வரி, தான் தன்னுடைய மகனிடம் சாதாரணமாகத்தான் கூறியதாகவும் ஆனால் அவர் இவ்வளவு தூரம் கமலாவிடம் சண்டை போடுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கூறுகிறார்.

ஆத்திரப்படும் ராதிகா: இதையடுத்து கமலா நேரடியாகவே ஈஸ்வரியிடம் அந்த வீட்டை விட்டு எப்போது கிளம்புவீர்கள் என்று கேட்கிறார். இதற்கு பதிலளிக்கும் ஈஸ்வரியும் கமலாவை அந்த வீட்டை விட்டு துரத்தாமல் தான் அங்கிருந்து வெளியேற மாட்டேன் என்று கூறுவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது. இதனிடையே அங்கு வரும் ராதிகா, அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்வதை பார்த்து தன்னை இருவரும் எப்போதுமே நிம்மதியாக இருக்க விட மாட்டீர்களா என்று ஆத்திரத்துடன் கத்தியபடி கேட்கிறார். இதனால் ஈஸ்வரி மற்றும் கமலா இருவருமே மன வருத்தம் கொள்கின்றனர்.

வருத்தத்தில் சாப்பிடாத ஈஸ்வரி: கமலா, ஈஸ்வரி இருவருமே அழுதபடி அந்த இடத்தை விட்டு நகர்கின்றனர். தொடர்ந்து தன்னுடைய அறைக்கு சென்று கதவை சாத்திக் கொள்ளும் ஈஸ்வரி, மதியமும் சாப்பிடாமல் அப்படியே தொடர்ந்து தன்னுடைய அறையிலேயே முடங்குகிறார். இதனுடைய மாலை தன்னுடைய அலுவலக வேலைகளை நிறைவு செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் கோபி தன்னுடைய அம்மா மதியம் முதல் சாப்பிடாமல் இருப்பது குறித்து கேள்விப்பட்டு, அவருக்கு சுகர் இருப்பதாகவும் அவரை எப்படி அப்படியே விட்டு விட்டாய் என்று தன்னுடைய மனைவி ராதிகாவிடம் சண்டையிடுகிறார்.

ஈஸ்வரி உடல்நிலை பாதிப்பு: தொடர்ந்து அறைக்குள் சென்று ஈஸ்வரியை பார்க்கும் கோபி, அவர் பேச்சு மூச்சின்றி கிடப்பதை பார்க்கிறார். தொடர்ந்து ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனையில் சேர்க்கிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விஷயம் கேள்விப்பட்டு ராமமூர்த்தி, பாக்கியா உள்ளிட்டவர்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர். ராமமூர்த்தி தன்னுடைய மகனிடம் ஆத்திரப்படுவதாகவும் இன்றைய எபிசோடு காணப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைக்குப் பின்பு ஈஸ்வரிக்கு நினைவு திரும்புகிறது. இதனிடையே, மருத்துவமனைக்கு ராதிகாவும் வர தன்னுடைய அம்மாவிற்கு ஏதாவது ஆனால் அவரையும் அவரது அம்மா கமலாவையும் தான் சும்மா விடமாட்டேன் என்று கோபி ஆத்திரப்படுவதாக இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X