Baakiyalakshmi serial: பழனிச்சாமி சார் ஸ்பெஷல்தான்.. செல்வியிடம் பாக்கியா சொன்ன விஷயம்!

சென்னை: விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. பழனிச்சாமியின் 45வது பிறந்த நாளையொட்டி அதன் சமையல் காண்ட்ராக்ட் பாக்கியா கையில் வருகிறது. இதையடுத்து அவரது பிறந்த நாளை எப்படி எல்லாம் உணவால் சிறப்பாக்கலாம் என்பதாக அவர் தொடர்ந்து யோசிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

இந்நிலையில் திடீரென விடுப்பு எடுத்த கிளவுட் கிச்சனின் செஃப்பை கூப்பிட்டு கோபி சரமாரியாக திட்டுகிறார். இதனால் ஆத்திரமடையும் ராதிகா, எதையுமே எக்ஸ்ட்ரீம் லெவலில் கோபி செய்வதாகவும் அதிகமாக திட்டவும் கூடாது அதிகமாக பாராட்டவும் கூடாது என்றும் பாடம் எடுக்கிறார். இதனிடையே முன்னதாக செழியனை மிகவும் சுதந்திரமாக விட்ட ஜெனி, அதன் மூலம் மாலினி -செழியன் உறவுக்கு காரணமாக அமைந்த நிலையில் தற்போது எடுத்ததற்கெல்லாம் செழியனை கேள்வி கேட்கிறார். இதுகுறித்து இருவருக்கும் பிரச்சினைகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்.

Vijay TV s Baakiyalakshmi serial today 9th April 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்த தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. பழனிசாமியின் பிறந்த நாளை, அவரது அம்மா விழாவாக ஏற்பாடு செய்கிறார். அதில் சமைக்க பாக்கியலட்சுமியிடம் அவர் கேட்டுக்கொள்கிறார். பழனிச்சாமி மற்றும் பாக்கியா இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அவர்களது ஜோடி பொருத்தத்தை பார்த்து அவர் பூரிப்படைவதாக நேற்றைய எபிசோடில் காணப்பட்டது.

பழனிச்சாமியின் பிறந்தநாள்: இந்நிலையில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமியின் பிறந்தநாளுக்கு எந்தெந்த டிஷ்களை சமைக்கலாம் என்பது குறித்து செல்வி மற்றும் அமிர்தாவிடம் பாக்கியா ஆலோசனை மேற்கொள்கிறார். தான் புதுவிதமான இனிப்பு ஒன்றை யோசித்து வைத்துள்ளதாகவும் அதை பழனிச்சாமியின் பிறந்தநாளுக்கு ட்ரை செய்ய உள்ளதாகவும் அவர் கூறுகிறார். இந்நிலையில் பழனிச்சாமியின் அம்மாவிற்கு பிடித்தமான தேங்காய்ப்பால் சாதம் மற்றும் பழனிச்சாமிக்கு பிடித்தமான மலாய் கோப்தா மற்றும் மதுரை கறி தோசை ஆகியவற்றை அவர் இந்த நிகழ்ச்சியில் முக்கியமான டிஷ்ஷாக சமைக்கலாம் என்று பேசுகிறார்.

பழனிச்சாமி ஸ்பெஷல்தான்: மேலும் தனக்கு நண்பராக அவர் அறிமுகமானது முதல் தற்போது வரை தன்னுடைய கேரியரிலும் சொந்த வாழ்க்கையிலும் ஏற்பட்ட பல பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளதாகவும் அவருக்கு தன்னால் பதிலுக்கு எந்த உபகாரமும் செய்ய முடியவில்லை என்றும் கூறும் பாக்கியா, இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை தான் தன்னுடைய பதில் உபகாரம் செய்யும் தருணமாக எடுத்துக் கொள்ள உள்ளதாக கூறுகிறார். அந்த வகையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தனக்கு ஸ்பெஷல் என்று கூறுகிறார். இதை செல்வி கலாய்க்கிறார். அப்போது ஆமாம் பழனிசாமி சார் தனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான். என்று அரிதியிட்டுக் கூறுகிறார் பாக்கியலட்சுமி.

ராதிகாவிடம் திட்டுவாங்கும் கோபி: இந்நிலையில் தொடர்ந்து மெனுவை பாக்கியலட்சுமி தயாரிப்பதை அமிர்தாவிடம் சுட்டிக்காட்டும் செல்வி, பாக்யாவின் உற்சாகத்தை சுட்டிக் காட்டி, பழனிச்சாமி மற்றும் பாக்கியா இடையில் நட்பை மீறிய ஏதோ ஒன்று இருப்பதாக கூறுகிறார். இதனிடையே, திடீரென விடுப்பெடுத்த செஃப்பை கூப்பிட்டு திட்டி தீர்க்கிறார் கோபி. இதைப் பார்க்கும் ராதிகா பதிலுக்கு கோபியை திட்டுகிறார். ஸ்டாஃப்களை ரொம்ப ஓவராக பாராட்டவும் கூடாது, ரொம்ப ஓவராக கண்டிக்கவும் கூடாது என்பதை புரிய வைக்கிறார். இதனிடையே வீட்டிற்கு செழியன் தாமதமாக வர, இதனால் ஜெனி மிகுந்த அலைகழிப்பிற்கு உள்ளாகிறார். தொடர்ந்து செழியனிடம் கோபமடைவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X