அடுத்தக் குழந்தைக்கு தயாராகும் செழியன் -ஜெனி.. என்ன இவ்வளவு ஸ்பீடா இருக்கீங்க.. கலாய்த்த செல்வி!

சென்னை: விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் சென்டிமென்ட் சற்று தூக்கலாகவே காணப்பட்டது. தன்னுடைய இயக்குனர் கனவு தொடர்ந்து தகர்ந்து கொண்டே வரும் சூழலில் இது குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்க முடியாமல் எழில் தொடர்ந்து மன வருத்தத்தில் காணப்படுகிறார்.

ஆனால் ஈஸ்வரியோ சினிமா கனவை தூக்கிப் போட்டுவிட்டு வேறு வேலையில் சேரும்படி வற்புறுத்துகிறார். இதனால் தன்னுடைய மனைவி அமிர்தாவிடம் கண்ணீர் விட்டு, தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று ஏழில் வருத்தம் கொள்கிறார். இதையடுத்து அமிர்தா, எழிலை தேற்றுவதாக காணப்படுகிறது. இதனிடையே அங்கு வரும் பாக்கியாவும் எழில் கண்டிப்பாக இயக்குனராக சாதிப்பார் என்று நம்பிக்கை கூறுகிறார்.

Television Baakiyalakshmi serial Vijay tv


பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் சென்டிமென்ட் அதிகமான காட்சிகளுடன் காணப்பட்டது. புதிய தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்வதற்காக எழில் சென்ற நிலையில் அவர் முந்தைய தயாரிப்பாளரிடம் குறிப்பிட்ட நேரத்தில் கதை கூறாததை சுட்டிக்காட்டி, பொழுதுபோக்கிற்காக இயக்கத்தில் ஈடுபட நினைப்பவர்களுக்கு தான் எப்போதுமே துணை நிற்பதில்லை என்று கூறி எழிலை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுடன் வீட்டிற்கு வரும் எழில், தன்னுடைய அண்ணன் செழியன் தன்னுடைய அம்மாவிற்கு வீட்டு செலவிற்காக வற்புறுத்தி பணம் கொடுப்பதையும் தன்னால் அவ்வாறு கொடுக்க முடியாததையும் நினைத்து வருத்தம் கொள்கிறார்.

எழிலை தேற்றும் அமிர்தா: இதை ஈஸ்வரியும் சுட்டிக்காட்டி சினிமாவை தூக்கிப் போட்டுவிட்டு நல்ல வேலைக்கு செல்லுமாறு எழிலிடம் கடுமையாக கூறுகிறார். இதனால் மிகுந்த அவமானமும் குற்ற உணர்ச்சியும் மேலோங்க, அங்கிருந்து மொட்டை மாடிக்கு சென்று தனியே நடந்த சம்பவங்களை நினைத்து வருத்தப்படுகிறார் எழில். இதையடுத்து அங்கு வரும் அமிர்தா, எழிலை தேற்றுகிறார். கண்டிப்பாக அவர் நினைக்கும் அனைத்து விஷயங்களும் ஒரு நாள் நடக்கும் என்று கூறுகிறார். தன்னுடைய தாத்தா கூறுவது போல ஒரு கதவு அடைத்தால் மற்றொரு கதவு தனக்கு ஏன் திறக்கவில்லை என்றும் தன்னுடைய ராசி அப்படியா என்றும் எழில் மிகுந்த வருத்தத்துடன் கண்ணீர் விட்டு அமிர்தாவிடம் பேசுகிறார்.

இலக்கு முக்கியம்: இந்நிலையில் அங்கு வரும் பாக்கியாவும் எழிலிடம், கண்டிப்பாக ஒரு நாள் தன்னுடைய இயக்குனர் கனவை சாதித்து காட்டுவார் என்று கூறுகிறார். எழிலும் தான் கண்டிப்பாக இன்னும் சிறிது காலத்திலேயே தன்னுடைய இயக்குனர் ஆகும் கனவை வெற்றிகரமாக நிறைவு செய்வேன் என்றும் அப்படி முடியவில்லை என்றால் பாட்டி கூறியது போல வேறு வேலைக்கு தான் செல்வதாகவும் கூறுகிறார். இதைக் கேட்கும் பாக்கியா, கோபத்துடன் எவ்வளவு நாட்கள் ஆனாலும் கடிவாளம் கட்டிய குதிரை போல தன்னுடைய இலக்கை நோக்கி சென்று கொண்டே இருக்க அறிவுறுத்துகிறார்.


கோபி அலப்பறை: பள்ளி படிப்பை மட்டுமே முடித்த தன்னால் மிகப் பெரிய அளவில் சாதிக்க முடிந்த நிலையில் முழு தகுதியுடன் இருக்கும் எழிலால் கண்டிப்பாக தன்னுடைய இயக்குனர் கனவை அடைய முடியும் என்றும் எழிலுடன் அவர் இயக்கிய படத்தை காரில் போய் தான் பார்ப்பேன் என்றும் நம்பிக்கை கொடுக்கிறார் பாக்கியா. இதனிடையே வழக்கம் போல குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கோபி, ராதிகா கதவை திறக்காததால் தானே திறந்துக் கொண்டு உள்ளே வருகிறார். தொடர்ந்து ராதிகா ரூம் கதவையும் தட்டுகிறார். எந்தவிதமான ரெஸ்பான்சும் இல்லாத நிலையில், தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு என்ற பாடலை தன்னுடைய மொபைலில் உரக்க ஒலிக்க விட்டபடி கூட சேர்ந்து பாடிக் அலப்பறையை கூட்டுகிறார் கோபி.

அடுத்தக் குழந்தைக்கு தயாராகும் ஜெனி: இதையடுத்து அங்கு வரும் ராதிகா, அவரை திட்டுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே அதிகாலை வாக்கிங்கை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் செழியன் தன்னுடைய குழந்தையை தூக்கி கொஞ்சம் கொண்டிருக்கிறார். அப்போது அவருடன் பேசிக் கொண்டிருக்கும் ஜெனிக்கு வாந்தி வருகிறது. இதையடுத்து வாஷ் செய்துவிட்டு வரும் ஜெனி தான் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகப்படுவதாக செழியனிடம் கூறுகிறார். பாக்கியாவிடமும் அவர் இதை கூற, ஈஸ்வரி உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர். ஜெனி மிகவும் ஸ்பீடாக இருப்பதாக செல்வி கலாய்ப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X