Baakiyalakshmi serial: மாமியார் கழுத்தை நெறிக்கப்போன கோபி.. கொலை செய்துவிடுவதாக மிரட்டல்!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகளுடன் காணப்பட்டது.போலீஸ் நிலையத்தில் இருக்கும் ஈஸ்வரியை எப்படியாவது அழைத்து வர குடும்பத்தினர் அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ் என்பதால் அவ்வளவு சீக்கிரத்தில் அவருக்கு பெயில் கிடைக்காததால் வீட்டிற்கு வந்து கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.
இந்நிலையில் தன்னுடைய அம்மா சிறையில் இருப்பதை பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும் கோபி, ராதிகா அம்மா கமலாவின் கழுத்தை நெறித்து கொல்ல முயற்சிக்கிறார். தொடர்ந்து வீட்டில் உள்ள டிவி உள்ளிட்ட பல பொருட்களையும் போட்டு உடைக்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறு மீண்டும் ராதிகாவை சந்தித்தது தான் என்றும் அதைவிட பெரிய தவறு அவரை திருமணம் செய்து கொண்டதுதான் என்றும் கோபி பலவாறாக பேசுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்: பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மிகவும் பரபரப்பாக ஒவ்வொரு காட்சிகளும் சிறப்பாக அமைந்திருந்தது. போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் ஈஸ்வரியை வெளியில் கொண்டுவர முடியாத நிலையில் குடும்பத்தினர் அனைவரும் பரிதவித்து காணப்படுகின்றனர். செழியன் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். அதுவரை தன்னுடைய சோகத்தை உள்ளுக்குள்ளேயே வைத்திருந்த ராமமூர்த்தி மற்றும் பாக்கியா இருவரும் இதை பார்த்து அவர்களும் கதறி அழுகின்றனர். வசதியாக வாழ்ந்த ஈஸ்வரிக்கு ஜெயில் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று செல்வியும் தன்னுடைய பங்கிற்கு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
பாக்கியா கண்ணீர்: சமையலறையில் சென்று தனியாக உட்கார்ந்து அழுகிறார் பாக்கியா. அவரை செல்வி தேற்றுகிறார். தொடர்ந்து செழியன், எழில், இனியா, ராமமூர்த்தி, பாக்கியா என அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர். அவர்களை ஜெனி, அமிர்தா, செல்வி என மற்றவர்கள் தேற்றுவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது. இதனிடையே தன்னுடைய அம்மாவை சிறையில் வைத்து பார்க்கும் கோபி, அதே ஆத்திரத்துடன் வீட்டிற்கு வந்து கமலாவின் கழுத்தை நெறித்து கொல்ல பார்க்கிறார். தன்னுடைய அம்மாவிற்கு தன்னுடைய அம்மாவின் உடல் நிலைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் கமலா மற்றும் ராதிகாவை வீட்டோடு கொளுத்தி விடுவேன் என்று கோபி ஆத்திரத்துடன் கூறுகிறார்.

குலைந்த நிம்மதி: நிம்மதியாக இருந்த தன்னுடைய வாழ்க்கையை ராதிகாவை மீண்டும் சந்தித்ததன்மூலம் குலைத்துக் கொண்டதாகவும் தான் செய்த மிகப்பெரிய தவறு ராதிகாவை பார்த்து திருமணம் செய்ததும் அவருக்கு வாழ்க்கை கொடுத்ததும் தான் என்றும் கோபி கூறுகிறார். இதையடுத்து பேசும் ராதிகா, கோபியை திருமணம் செய்து கொண்டு தானும் சந்தோஷமாக இல்லை என்று கூறுகிறார். மாற்றி மாற்றி இருவரும் தங்களது திருமணம் குறித்தும் மற்ற நிகழ்வுகள் குறித்தும் குறைக்கூறுவதாக இன்றைய எபிசோடில் காட்சிகள் அமைந்திருந்தன. இதே ஆதங்கத்தோடு கிளவுட் கிச்சனுக்கு செல்கிறார் கோபி.
செந்தில் சமாதானம்: அங்கு விளக்கை கூட போடாமல் இருட்டில் அவர் முடங்கியபடி அழுது கொண்டிருக்கிறார். இதையடுத்து அங்கு வரும் செந்தில் கோபியை சமாதானப்படுத்த முயல்கிறார். தன்னுடைய அம்மா அரஸ்ட் ஆனது மற்றும் தான் ராதிகா கமலாவிடம் நடந்து கொண்டது என அனைத்தையும் செந்திலிடம் கூறி கண்ணீர் விடுகிறார் கோபி. இதுநாள் வரை தன்னை ஒரு குழந்தை போல தனது அம்மா கவனித்து வருவதாகவும் கோபி கூறுகிறார். ஆனால் அவரது அனைத்து பிரச்சினைகளுக்கும் இன்னல்களுக்கும் தான் காரணம் என்பதை தெரிந்து தன்னுடைய அம்மா எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பார் என்றும் கோபி பரிதவிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
கண்கலங்கும் ஈஸ்வரி: இந்நிலையில் சிறையில் இருக்கும் ஈஸ்வரி கோபியின் இரண்டாவது திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நினைத்துப் பார்க்கிறார். கமலா தன் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பேன் என்று முன்னதாக கூறியதையும் நினைத்துப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார். தன்னுடைய மகன் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியது குறித்தும் நினைத்து கண்கலங்குகிறார்.
போலீசார் விசாரணை: இதனிடையே அவரிடம் வந்து போலீஸ் அதிகாரி விசாரணை நடத்துகிறார். ராதிகாவை அவருக்கு பிடிக்காது தானே என்பதாக பல்வேறு கேள்விகளை அடுக்குகிறார். ராதிகாவை தனக்கு பிடிக்காமல் போனதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அவரை கீழே பிடித்து தள்ளி அவரது கரு கலைவதற்கு காரணமாக இருக்கும் வகையில் தான் மோசமானவள் இல்லை என்பதை ஈஸ்வரி எடுத்துக் கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











