Baakiyalakshmi serial: பாக்கியா ரெஸ்டாரெண்ட் திறப்பில் பங்கேற்ற அமைச்சர்.. மூக்கறுபட்ட கோபி|

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் அதிக டிஆர்பி பெற்று இரண்டாவது இடத்தில் தொடர்ந்து பல மாதங்களாக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல், இந்த சீரியலில் பிரச்சனைகளுக்கு உள்ளான தன்னுடைய மகன்களின் வாழ்க்கையை மீட்க தொடர்ந்து போராடி வருகிறார் பாக்கியலட்சுமி, மேலும் அவரது ரெஸ்டாரெண்ட் திறப்பு விழா குறித்த காட்சிகளும் கடந்த சில தினங்களாக காட்டப்பட்டு வருகிறது.. இந்த திறப்பு விழாவுக்கு அமைச்சர் வருவதாக உறுதியளித்த நிலையில், அவரது பிஏ மூலம் அமைச்சரின் வருகையை தடை செய்கிறார் கோபி.

குடும்பத்தினர் அனைவரும் ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்கின்றனர். தொடர்ந்து நிகழ்ச்சிக்கு அமைச்சர் வராதது குறித்து தவிப்பை அவர்கள் வெளிப்படுத்திய நிலையில் மனதிற்குள் இது குறித்து கோபி உற்சாகம் கொள்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது எப்படியாவது பாக்யாவின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் கோபி இன்றைய எபிசோடில் அதற்கான காட்சிகளை காணமுடிந்தது.

Vijay TV s Baakiyalakshmi serial today 9th March 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் இரண்டாவது முன்னணி சீரியலாக தொடர்ந்து பல மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலை அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களாக கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சீரியல் இயக்குனர். இந்த சீரியலில் லீட் கேரக்டர்களாக பாக்கியா, கோபி, ராதிகா ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். பிரச்சனைக்கு உள்ளான எழில் மற்றும் செழியனின் வாழ்க்கையை சீரமைக்க தொடர்ந்து பாக்கியா பாடுபட்டு வந்தநிலையில் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேசால் பிரச்சனைக்கு உள்ளான அமிர்தா மற்றும் எழிலின் வாழ்க்கை தற்போது சுமூகமாக மாறி உள்ளது.

அந்தரத்தில் செழியன் வாழ்க்கை: அமிர்தா மற்றும் குழந்தையை கணேஷ் கடத்திய நிலையில் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு அவரிடமிருந்து அமிர்தாவை மீட்டு பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் தற்போது நிம்மதியாக உள்ளனர். இந்நிலையில் மாலினி விவகாரத்தால் செழியனை பிரிந்து குழந்தையுடன் தன்னுடைய அப்பா வீட்டிற்கு சென்றுள்ளார் ஜெனி. அவரது அப்பாவின் வற்புறுத்தலால் ஜெனி, விவாகரத்துக்கு அப்ளை செய்த நிலையில் விவாகரத்து வழக்கு தற்போது நடந்து வருகிறது. இதனால் செழியன் தொடர்ந்து மன வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார். தான் செய்த சிறிய தவறால் தன்னுடைய வாழ்க்கை மோசமான நிலைக்கு போனதாக அவர் தன்னுடைய அம்மா பாக்கியலட்சுமியிடம் அழுது புலம்பியதை பார்க்க முடிந்தது.

Vijay TV s Baakiyalakshmi serial today 9th March 2024 episode

சதியில் கோபி: இந்நிலையில் பாக்கியாவின் ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவிற்கு ஜெனி தன்னுடைய குழந்தையுடன் வந்தது குடும்பத்தினர் அனைவரையும் உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவிற்கு அமைச்சரை சிறப்பு விருந்தினராக பாக்கியா அழைத்து இருந்தார். அவரும் வருவதாக ஒப்புக் கொண்ட நிலையில் அமைச்சரின் பிஏவிற்கு பணம் கொடுத்து இந்த முயற்சிக்கு ஆப்பு வைத்தார் கோபி. இதனால் ரெஸ்டாரன்ட் திறப்பு கேள்விக்குறியானது. அமைச்சர் வருகைக்காக குடும்பத்தினர் அனைவரும் காத்திருந்த நிலையில் விருந்தினர்களும் தொடர்ந்து கேள்வி கேட்டதை பார்க்க முடிந்தது.

Vijay TV s Baakiyalakshmi serial today 9th March 2024 episode

திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சர்: அவர்களை சமாளிக்க முடியாமல் பாக்கியா அடுத்தடுத்து அமைச்சரின் பிஏ, மேனேஜர் உள்ளிட்டவர்களுக்கு கால் செய்கிறார். ஆனால் அமைச்சரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தன்னுடைய மேனேஜர் மூலம் உண்மையை தெரிந்துக் கொள்ளும் அமைச்சர், இதற்கு காரணமான பிஏவை திட்டித் தீர்க்கிறார். தொடர்ந்து பாக்கியா நிகழ்ச்சிக்கு அவர் வருவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தான் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கான காரணத்தை விளக்கும் அமைச்சர், பாக்கியாவிடம் மன்னிப்பும் கேட்கிறார். இதனால் திறப்பு விழாவை குலைக்க தான் செய்த சதி, நிறைவேறாமல் போனது குறித்து கோபி முழி பிதுங்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X