சுயமரியாதையை விட்டுவிட்டு இருந்திருக்கிறோமே என்று அவமானம்.. உணர்ச்சிகளை கொட்டிய பாக்கியா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் நீண்ட காலங்களாக அழுத்தி வைத்திருந்த தன்னுடைய மனக்குமுறல்களை செல்வியிடம் பாக்கியா வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தன்னை பிடிக்காத இடத்தில் இத்தனை காலங்களாக தன்னுடைய சுயமரியாதையை இழந்து விட்டு இருந்தது குறித்து தனக்கு அவமானமாக இருப்பதாக பாக்கியா கோபி குறித்து கூறுகிறார்.

தன்னை எப்போதுமே அன்புடன் கோபி பார்த்ததில்லை என்றும் பாக்கியா குமுறலை வெளிப்படுத்துகிறார். தன்னைதான் அவருக்கு பிடிக்கவில்லை என்றும் மற்றொரு பெண்ணுடன் சந்தோஷமாக இருப்பதை அவர் விரும்பியுள்ளதாகவும் பாக்கியா செல்வியிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Vijay TV s Baakiyalakshmi serial today 9th May 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் பாக்கியாவின் மற்றொரு கோணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. ராதிகாவின் கர்ப்பம் குறித்து ஈஸ்வரிக்கு கோபி தெரியப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பாக்கியாவிடம் ஈஸ்வரி பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வரும் செல்வி இதைக் கேட்டு விடுகிறார். தொடர்ந்து அவர் தன்னுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்திய சூழலில், ஈஸ்வரி அவரை அதட்டி வெளியேற்றுகிறார். இந்நிலையில் பாக்கியா தனியாக மொட்டை மாடியில் அமர்ந்து துணி மடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வரும் செல்வி இது குறித்து கேட்கிறார்.

பாக்கியா மனக்குமுறல்: உனக்கு கொஞ்சம் கூட கஷ்டமாக இல்லையா என்று பாக்கியாவிடம் செல்வி கேட்கிறார். கஷ்டமாக இருக்கிறது என்று கூறும் நிலையை எல்லாம் தான் கடந்து விட்டதாகவும் கோபியிடம் இருந்து முற்றிலும் விலகி விட்டதாகவும் பாக்கியா கூறுகிறார். ஆனாலும் ராதிகா தன்னுடைய கர்ப்பம் குறித்து வெளிப்படுத்திய போது தன்னை அறியாமல் இந்த மொட்டை மாடியில் தான், தான் சில நிமிடங்கள் அப்படியே நின்று கொண்டிருந்ததாகவும் அவர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் தான் எந்தவிதமான பொறாமையிலும் அப்படி நடந்துக் கொள்ளவில்லை என்றும் தெளிவுப்படுத்துகிறார்.

சுயமரியாதை இல்லாத வாழ்க்கை: கோபி தன்னிடம் எப்போதுமே அன்புடனும் பாசத்துடனும் இருந்ததில்லை என்றும் பாக்கியா தொடர்ந்து கூறுகிறார். தன்னுடைய டிரஸ்ஸிங் உள்ளிட்ட எதுவுமே கோபிக்கு பிடிக்காது என்பதை செல்வியிடம் கூறுகிறார் பாக்கியா. மேலும் எப்போதுமே தன்னிடம் கோபி எரிந்து விழுந்ததாகவும் வேலை டென்ஷனில் அவர் அப்படி நடந்து கொள்வதாக தான் நினைத்ததாகவும் பாக்கியா கூறுகிறார். தொடர்ந்து ராதிகா இந்த விஷயத்தை கூறிய போது தான் எதனால் அவ்வாறு நடந்து கொண்டேன் என்பதையும் பாக்கியா வெளிப்படுத்துகிறார். தன்னை தான் கோபிக்கு பிடிக்காமல் இருந்தது என்றும் ஆனால் மற்றொரு பெண்ணுடன் சந்தோஷமாக இருப்பதை அவர் விரும்பி தான் செய்திருக்கிறார் என்பதையும் பாக்கியா வெளிப்படுத்துகிறார்.

கண்கலங்கிய ஈஸ்வரி: மேலும் பிடிக்காத ஒரு இடத்தில் தன்னுடைய சுயமரியாதையை விட்டு விட்டு இத்தனை ஆண்டுகள் இருந்திருக்கிறோமே என்ற அவமானம் தனக்கு ஏற்பட்டதாகவும் பாக்கியா கூறுகிறார்., தான் சம்பாதித்து தன்னுடைய காலில் நின்றபோதுதான் தன்னுடைய சுயமரியாதை குறித்தெல்லாம் தான் யோசித்ததாகவும் பாக்கியா கூறுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது, தொடர்ந்து இன்றைய எபிசோடில் தூக்கம் வராமல் கோபி குறித்து யோசித்து கண் கலங்கிக் கொண்டிருக்கும் ஈஸ்வரியை பார்த்து ராமமூர்த்தி என்ன நடந்தது என்று கேள்வி எழுப்புவதாக அமைந்துள்ளது.

கோபியிடம் மல்லுக்கட்டிய ராதிகா: இதையடுத்து மறுநாள் காலை கோபி அன்றைய தினம் குடும்பத்தினரிடம் தன்னுடைய கர்ப்பத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கூறுகிறார் ராதிகா. இதை எப்படி தன்னுடைய குடும்பத்தினரிடம் கூற முடியும் என்று கோபி கேட்க இதை மறைக்க முடியாது கோபி என்று ராதிகா பதிலுக்கு பேசுகிறார். தொடர்ந்து சண்டை வரும் சூழல் ஏற்பட உடனடியாக அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார் கோபி. வாக்கிங் போய் விட்டு வந்து வீட்டில் அனைவரும் இருக்கும் நேரம் பார்த்து ராதிகாவின் கர்ப்பத்தை வெளிப்படுத்துவதாக உறுதியுடன் கூறுகிறார். முன்னதாக தனக்கும் தன்னுடைய கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கும் ஈஸ்வரி ஏதாவது செய்து விடுவாரோ என்ற பயம் தனக்கு இருப்பதாக ராதிகா கூறுகிறார். இதைக் கேட்டு கோபிக்கு கோபம் வருகிறது. தன்னுடைய அம்மா அப்படிப்பட்டவர் இல்லை என்று அவர் கோபத்துடன் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X