Baakiyalakshmi serial: அதிகமாக பேசிய கமலா.. கை ஓங்கிய கோபி.. சாரி கேட்க சொல்லி ராதிகா ஆத்திரம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வரும் சூழலில் தற்போதும் சேனலின் 2வது முன்னணி சீரியலாக காணப்படுகிறது. இந்த சீரியலில் அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகளை இயக்குனர் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

தன்னுடைய மகன் கோபியின் செய்கையால் பாதிக்கப்பட்ட ஈஸ்வரி முற்றிலும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில் அவரை அதிலிருந்து மீட்கும் பொருட்டு பாக்கியா தன்னுடைய மாமனார் மற்றும் மகளுடன் இணைத்து கும்பகோணம் கோயில்களுக்கு அழைத்து செல்கிறார். மேலும் ஈஸ்வரியின் நீண்ட கால தோழி சாவித்திரியையும் அந்த இடத்துக்கு வரவழைத்து இருவரையும் பேச வைக்கிறார் இதனால் ஈஸ்வரி தன்னுடைய மனபாரங்களை மறந்து விட்டு சாவித்திரியுடன் தன்னுடைய இளமைக்கால நிகழ்வுகளை பேசி மகிழ்கிறார்.

Television Baakiyalakshmi serial Vijay TV

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் சிறப்பாக அமைந்திருந்தது. கோபி தன்னை கொலைக்காரி என்று கூறி வீட்டை விட்டு வெளியேறவும் காரணமாக இருந்த சூழலில் ஈஸ்வரி தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்தார். அவர் அதே சூழலில் இருந்தால் கண்டிப்பாக அவரின் மனநிலை மட்டுமில்லாமல் உடல் நிலையும் பாதிக்கும் என்பதை உணர்ந்த பாக்கியா, அவர் முன்னதாக கேட்டிருந்த கும்பகோணம் கோயில்களுக்கு செல்லும் ட்ரிப்பை ஏற்பாடு செய்கிறார். பாக்கியா, ஈஸ்வரி, ராமமூர்த்தி மற்றும் இனியா என நால்வரும் கும்பகோணம் செல்கின்றனர்.

ஈஸ்வரி உற்சாகம்: கும்பகோணத்தில் சில காலங்கள் தன்னுடைய சிறுவயதில் ஈஸ்வரி இருந்ததாகவும் அந்த காலத்தில் அவருக்கு சாவித்திரி என்பவர் மிக நெருங்கிய தோழியாக இருந்ததாகவும் ஈஸ்வரி இனியாவிடம் கூறுகிறார். இதை கேட்டுக் கொண்டிருக்கும் பாக்கியா, ஈஸ்வரியின் தோழி சாவித்திரியை கும்பகோணம் அழைத்து வருகிறார். தன்னுடைய நீண்ட நாள் தோழியை பார்க்கும் ஈஸ்வரி, கட்டியணைத்து தன்னுடைய மனப்பாரங்கள் அனைத்தையும் இறக்குகிறார். தொடர்ந்து சாவித்திரியுடன் அவர் சிரித்து பேசுவதை பார்க்கும் ராமமூர்த்தி இதே போல எப்போதும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருக்கட்டும் என்று கண்கலங்குகிறார்.

ஜெனி போட்டுக்கொடுத்த டீ: இதனிடைய வீட்டில் பாக்கியா இல்லாத சூழலில் செழியன் டீ போட கேட்கிறார். அப்போது செல்வி வேலையாக இருக்க, ஜெனி தானே டீ போட்டுக் கொடுப்பதாக அடுப்பங்கரைக்கு செல்கிறார். இதையடுத்து செழியன் மட்டுமில்லாமல் செல்வியும் அலறுகிறார். இந்நிலையில் ஜெனி சூப்பராக டீ போட்டு எடுத்து வருகிறார். அதை குடித்துவிட்டு மறுவார்த்தை பேச முடியாமல் முழி முழி என்று செழியன் முழிக்கிறார். அவர் மாட்டியது மட்டுமல்லாமல் அந்த நேரத்தில் சரியாக எழிலும் வருகிறார். அங்கு வந்து அவரும் ஜெனி போட்ட டீயை குடித்துவிட்டு செழியனுக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் முழிக்கிறார்.

கோபியிடம் கேள்வி கேட்ட ராதிகா: இந்நிலையில் அவரது டீயில் அனைத்துமே அதிகமாக இருப்பதாக கூறிவிட்டு, தப்பித்தேன் பிழைத்தேன் என்று தன்னுடைய அறைக்கு ஸ்கிரிப்ட் எழுதும் வேலை இருப்பதாக கூறிவிட்டு ஓடுகிறார் எழில். செழியனும் எஸ்கேப்பாகிறார். முந்தைய நாள் இரவு அதிகமாக குடித்துவிட்டு தன்னுடைய மகன்கள் வீட்டிற்கு அழைத்து வந்துவிடும் அளவிற்கு போதையுடன் இருந்த கோபி, தொடர்ந்து ராதிகாவையும் அவரது அம்மாவையும் சகட்டுமேனிக்கு பேசுகிறார். ஒரு கட்டத்தில் கமலாவை பிசாசு என்று கோபி கூறுவதாக அமைந்தது. இந்நிலையில் மறுநாள் இது குறித்து ராதிகா கோபியிடம் கேள்வி எழுப்ப, தான் அப்படியெல்லாம் பேசவில்லை என்பது போல கோபி கூறுகிறார்.

கமலாவை அடிக்க கை ஓங்கிய கோபி: இதையடுத்து இடையில் பேசும் கமலா, மீண்டும் ஈஸ்வரியை கொலைகாரி என்று கூறுகிறார். இதனால் கோபிக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. உடனே தன்னுடைய மாமியார் என்றும் பார்க்காமல் கமலாவை அடிக்க கை ஓங்குகிறார். இதனால் கமலா மட்டும் இல்லாமல் ராதிகாவும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே கோபியின் சட்டையைப் பிடித்து எப்படி அப்படி செய்யலாம் என்று ராதிகா சண்டைக்கு போகிறார். தொடர்ந்து தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்கும் படியும் ராதிகா கூற தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று உறுதியுடன் கோபி கூறிவிட்டு அங்கிருந்து நகர்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதன் எதிரொலி, கோபியின் கிளவுட் கிச்சனிலும் எதிரொலிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X