Baakiyalakshmi: பாக்கியா கேன்டீனுக்கு சீல்.. யார் காரணம் என கண்டுபிடித்த பழனிச்சாமி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி தொடர்.
இந்தத் தொடரில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பொருட்காட்சி கேன்டீனை பெற்று வேலையை துவங்குகிறார் பாக்கியா. அனைவரிடமும் மிகப்பெரிய பாராட்டுக்களை பெறுகிறார்.
இந்நிலையில் அவரிடமிருந்து கேன்டீனை பெறமுயன்ற மற்றொரு கான்டிராக்டரால் தற்போது பாக்கியாவின் கேன்டீன் சீல் வைக்கப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி தொடர். கடந்த சில மாதங்களாக இரண்டாவது மூன்றாவது இடங்களில் தடுமாறிக் கொண்டிருந்த பாக்கியலட்சுமி தொடர், இந்த வாரத்தில் முதலிடத்தை எட்டிப் பிடித்துள்ளது. இதனால் அதன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். ஸ்ரீமோயி என்ற பெங்காலி சீரியலில் இருந்து ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்தத் தொடர், தமிழ் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது.
நெகட்டிவ் கேரக்டரில் சதீஷ்: கோபி, பாக்கியா, ராதிகா என லீட் கேரக்டர்களில் நடித்துவரும் நடிகர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். குறிப்பாக நெகட்டிவ் கேரக்டராக இருந்தபோதிலும் கோபி கேரக்டரில் நடித்துவரும் நடிகர் சதீஷ், ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தனக்கு இதுபோன்ற நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க விருப்பமில்லை என்றபோதிலும் தான் இந்த கேரக்டரை தொடர்ந்து வருவதாக அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பலமுறை தான் இந்த சீரியலில் இருந்து விலக நினைத்ததாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்ட்: தன்னுடைய மகன்களின் வாழ்க்கையையும் தன்னுடைய வாழ்க்கை மற்றம் கேரியரையும் சிறப்பாக்கும் வகையில் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பாக்கியா, அடுத்தடுத்து தன்னுடைய கேன்டீன் கான்டிராக்ட் மற்றும் மசாலா பிசினஸ்களை இழக்க, இதனால் அவரது கேரியர் கேள்விக்குறியாகிறது. இதையடுத்து அவரது நண்பர் பழனிச்சாமியின் அறிவுறுத்தலின்பேரில் பொருட்காட்சியில் கேன்டீன் கான்டிராக்டை போராடி பெறுகிறார்.
கேன்டீனை விட்டுக் கொடுக்காத பாக்கியா: மழை காரணமாக அவர் பொருட்காட்சிக்காக வாங்கி வைத்த பொருட்கள் எல்லாம் சேதமடைய, அவர் மேலும் நிதி நிலைமையில் மோசமடைவதுடன் கோபி மற்றும் ஈஸ்வரி போன்றவர்களின் ஏச்சுக்கும் ஆளாகிறார். இதனிடையே, அந்த கான்டிராக்டை தனக்கு கொடுக்கும்படி கான்டிராக்டர் ஒருவர் கேட்க, அது தன்னுடைய கனவு என்றும் அதை கொடுக்க முடியாது என்றும் கூறுகிறார். இதனால் கடுப்பாகும் அவர், பாக்கியாவின் உணவு குறித்து புகார் அளிக்கிறார்.
சதி செய்த கான்டிராக்டர்: முதல் நாளில் மிகச்சிறப்பான வகையில் அனைவரையும் கவர்ந்த பொருட்காட்சி கேன்டீனை அதிகாரிகள் சீல் வைக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பாக்கியா மட்டுமில்லாமல் அவரது குடும்பத்தினர் அனைவரும் பரிதவிக்கின்றனர். இதனிடையே கைக்கொடுக்கும் தோழனாக அங்குவரும் பழனிச்சாமி அதிகாரிகளிடம் சென்று விசாரிக்க, கோதண்டராமன் என்ற அந்த கான்டிராக்டர்தான் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. இவ்வாறு இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











