Baakiyalakshmi serial: ஜெனியுடன் சேரவிருந்த செழியன்.. இடையில் புகுந்து வில்லத்தனம் செய்யும் மாலினி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமியின் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாகவே அமைந்துள்ளது.

இந்த சீரியலில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் இருந்தபோதிலும் கடந்த வாரத்தில் முதலிடத்தை பிடித்த இந்தத் தொடர் மீண்டும் இரண்டாவது இடத்தில் பின்தங்கியுள்ளது.

தற்போது கேன்டீன் கான்டிராக்டை சிறப்பாக நடத்திவரும் பாக்கியா, அதுகுறித்து சந்தோஷப்படாதவகையில் எழில், செழியன் விவகாரம் அவருக்கு மனஉளைச்சலை கொடுத்து வருகிறது.

Vijay TVs Baakiyalakshmi serial todays (15th decemnber 2023) episode

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடராக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்தத் தொடரில் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்கள் ரசிகர்களை கவரும்வகையில் ஒளிபரப்பாகிவரும் சூழலில் இன்றைய தினமும் ரசிகர்களை கவரும்வகையில் எபிசோட் காணப்படுகிறது. தற்போது கேன்டீன் கான்டிராக்ட், மசாலா பிசினஸ் ஆகியவற்றை இழந்துள்ள பாக்கியாவிற்கு மிகுந்த ஆசுவாசத்தையும் நம்பிக்கையையும் பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்ட் கொடுத்துள்ளது.

பொருட்காட்சி கேன்டீனில் சிக்கல்: மிகுந்த போராட்டங்களுக்கிடையில் பழனிச்சாமி உதவியுடன் பாக்கியா இந்த பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்டை பெற்ற நிலையில், முதல் நாளிலேயே ஏராளமான மக்களின் வரவேற்பை பெற்றது. இதைப் பார்த்து பொறுக்க முடியாத சக கான்டிராக்டர் கெட்டுப் போன உணவை பாக்கியா மக்களுக்கு வழங்கியதாக புகார், அளிக்க கேன்டீனுக்கு சீல் வைத்த அதிகாரிகள் தொடர்ந்து உணவை சோதிக்கின்றனர். அதில் நல்ல பொருட்களாக தேர்வு செய்து பாக்கியா உணவுப்பொருட்களை தயாரித்தது தெரியவர கேன்டீனை தொடர்ந்து நடத்த பர்மிஷன் கிடைக்கிறது.

மாலினியின் சதித்திட்டம்: இதையடுத்து குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். ராதிகாவும் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ஆனாலும் கோபியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஈஸ்வரி, தொடர்ந்து பாக்கியாவை வறுத்தெடுக்கிறார். இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த ஜெனியின் அப்பா, தன்னுடைய மனைவியின் அறிவுறுத்தலின்பேரில் செழியனை சந்தித்து, ஜெனியுடன் சேர்ந்து வாழ்வது குறித்து பேச முயல்கிறார். ஆனால் முன்னதாக அங்குவரும் மாலினி, தன்னுடைய இன்னும் செழியன் உறவில் உள்ளதாக ட்விஸ்ட் செய்து பேசுகிறார்.

கண்ணீர்விட்டு கதறும் செழியன்: இதனால் ஜெனியின் அப்பா மிகுந்த கோபத்துடன் செழியனை திட்டிவிட்டு அங்கிருந்த போகிறார். இதனால் மிகுந்த வருத்தத்துடன் வீட்டிற்குவரும் செழியன், தன்னுடைய அம்மா பாக்கியாவின் தோளில் சாய்ந்து அழுகிறார். தான் தன்னுடைய மனைவி மற்றும் மகளை மிகவும் மிஸ் செய்வதாகவும் அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வருவார்களா என்றும் கதறுகிறார். இதையடுத்து செழியனை பாக்கியா தேற்றுகிறார். விரைவில் அவருக்கு நல்லது நடக்கும் என்று தேற்றுகிறார்.

கணேஷ் அச்சுறுத்தல்: முன்னதாக கேன்டீனுக்கு வரும் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ், தன்னுடைய கேன்டீனை சிறப்பாக நடத்துவதிலேயே பாக்கியா அதிகமாக கவனம் செலுத்துவதாகவும் தான் கொடுத்த 30 நாள் கெடுவில் பாக்கியா எதுவும் செய்யவில்லை என்றால் தான் தன்னுடைய நடவடிக்கையை துவங்குவேன் என்றும் அச்சுறுத்தல் கொடுக்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பாக்கியா பரிதவிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X