Baakiyalakshmi serial: ராதிகாவிடம் மாட்டிய கோபி.. சப்போர்ட் செய்த ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்கள் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளன.

இன்றைய எபிசோடில் நீண்ட நாட்களாக தன்னுடைய கிரெடிட் கார்ட் பில்லை கட்டாமல் போக்கு காட்டிவந்த கோபியின் விஷயம் தற்போது ராதிகாவிற்கு தெரியவந்துள்ளது.

மறுபுறம் பொருட்காட்சி கேன்டீனை அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் பாக்கியா நடித்தி வருவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

Vijay TVs Baakiyalakshmi serial todays (18th december 2023) episode released

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக நீண்டு ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் கோபி, பாக்கியா, ராதிகா உள்ளிட்ட லீட் கேரக்டர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக்காக உருவாகியுள்ள பாக்கியலட்சுமி தொடர், தமிழ் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. இந்த சீரியலில் பாக்கியா கேரக்டர் மட்டுமில்லாமல் அவரது முன்னாள் கணவரான கோபியின் நெகட்டிவ் கேரக்டரும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

கோபியின் ஆதங்கம்: இத்தகைய நெகட்டிவ் ஷேடில் தான் நடிக்க விரும்பவில்லை என்றும் ஏராளமான ரசிகர்கள் தன்னை தொடர்ந்து திட்டி தீர்ப்பதாகவும் அதனால் சமயத்தில் இந்த சீரியலில் இருந்து விலக தான் நினைத்ததாகவும் இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்துவரும் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் பல விஷயங்கள், எபிசோட்களை மட்டுமில்லாமல் தன்னுடைய பிட்னஸ் வீடியோக்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

முதலிடத்தை பெறத் தவறிய பாக்கியலட்சுமி: கடந்த வாரத்தில் தன்னுடைய முதலிடத்தை மீண்டும் பிடித்த பாக்கியலட்சுமி தொடர், மறுபடியும் சிறகடிக்க ஆசை தொடரிடம் தன்னுடைய முதலிடத்தை இழந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தன்னுடைய முன்னாள் கணவன் கோபி, ஈஸ்வரியிடம் பாக்கியா தொடர்ந்து பேச்சுக்களை வாங்குவதாக தொடர்ந்து காட்டப்பட்டு வருகிறது. பாக்கியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபி செயல்பட, அவருடன் ஈஸ்வரியும் தற்போது இணைந்துள்ளார்.

வெற்றிநடை போடும் பாக்கியா: ஆனாலும் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் அதை முறியடித்து வெற்றிநடை போடும் கேரக்டரில் பாக்கியா தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பழனிச்சாமி உதவியுடன் பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்டை அவர் கைப்பற்றி அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தினரின் சப்போர்ட் அவருக்கு அதிகமான அளவில் கிடைத்து வருகிறது. இதனிடையே கேள்விக்குறியாகியுள்ள எழில் மற்றும் செழியனின் வாழ்க்கையை சீர்படுத்தும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

பாக்கியாவிற்கு கிடைத்த அனுபவம்: படங்களில் காட்டுவது போல சூப்பர் நாயகியாக காட்டாமல், நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு பெண்ணாகவே பாக்கியலட்சுமி காட்டப்படுகிறார். கல்வியில்லாமல் ஒரு தொழிலை எடுத்து செயல்படுத்திவரும் பாக்கியா, தான் இந்த பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்டை எடுத்து நடத்துவதன்மூலம் எம்பிஏ பட்டதாரிகளுக்கான அனுபவத்தை பெற்றுள்ளதாகவும் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. தனக்கு அதிகமான படிப்பினைகளை மட்டுமில்லாமல் வருமானத்தையும் பெற்றுத் தந்துள்ளதாக அவர் கூறுகிறார்.

கடனில் சிக்கித்தவிக்கும் கோபி: தன்னுடைய கம்பெனியை சரியாக நடத்தாமல் நஷ்டத்தை சந்தித்துவரும் கோபிக்கு கடன் அதிகமாகிறது. இதனால் கிரெடிட் கார்ட் பணத்தை கட்ட முடியாமல் போக, வங்கி ஊழியர்கள் தொடர்ந்து அவரது வீட்டிற்கே வருகின்றனர். இந்த விஷயத்தை ராதிகா மற்றும் குடும்பத்தினரிடமிருந்து அவர் மறைத்த நிலையில் தற்போது ராதிகாவிற்கு இந்த உண்மை தெரியவருகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்க கோபி மட்டுமில்லாமல் ராதிகாவும் உள்ளாகின்றனர். இந்நிலையில் அவரது கடனை அடைக்க ராதிகா செக் கொடுக்கிறார். இதனிடையே கோபியின் அம்மா ஈஸ்வரியும் தன்னுடைய நகைகளை கொடுத்து அந்தக் கடனை அடைக்க சொல்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X